நிஜம் 37
நிஜம் 37
த்வனி அமைதியாகத் தன் மடியில் பால் குடித்துவிட்டு, நிம்மதியாக லேசாக வாயைத் திறந்தபடி தூங்கிக் கொண்டிருந்த, தன் மகளைப் பார்க்க பார்க்க அவளுக்கு நெஞ்சம் கணத்தது.
த்வனிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அதிகமாக நேரம், விக்ரம் அணைப்பிலேயே இருந்த குழந்தை அவன் கை சூட்டுக்கு நன்கு பழகி விட, இப்போது அவனின் ஸ்பரிசம் இல்லாமல் பாதி நேரம் அழுதுகொண்டே இருந்தது. அதை நினைத்து த்வனியின் கவலையில் இருக்க, அந்த நேரம் சௌந்தர்யா தவ்னிக்கு ஃபோன் செய்திருந்தார்.
த்வனியும் குழந்தையும் சென்ற நாளில் இருந்து, விக்ரம் அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை என்றும், உணவு கூட எடுத்துக்கொள்ளாமல், என்னேரமும் குழந்தையின் தொட்டிலை பார்த்தபடியே அழுதுகொண்டு இருக்கிறான் என்று சொல்ல, த்வனிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு பக்கம் குழந்தை விக்ரமை பார்க்காமல் அழுது கொண்டிருக்க, அங்கு விக்ரமின் நிலையே இதை விட மோசமாக இருக்கிறது. இதற்கு என்னன செய்யலாம் என்று யோசித்தவள், கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
"த்வனி" என்ற கதிரின் குரல் கேட்க,
"உள்ள வா கதிர்" என்றாள்.
"தவ்னி எனக்கு உன்னை இப்டி பாக்க ரொம்பக் கஷ்டமா இருக்குமா." என்று த்வனி முகத்தைப் பார்த்து,
"த்வனி நீ வோணும்னா கொஞ்ச நாள் எங்க கூட யூ.எஸ் வயேன். உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்" என்றவனை த்வனி உற்று பார்த்தாள்.
"இல்ல த்வனி உனக்கு ஒரு சேஞ்ச் வேணுமில்ல, அதான் சொன்னேன். வேற எந்த உள்நோக்கமும் இல்ல" என்று தடுமாறியவனைப் பார்த்து இழுத்து மூச்சு விட்ட த்வனி,
"ம்ம்ம்… நீ சொல்றது கரெக்ட் தான் கதிர் எனக்கும் ஒரு சேஞ்ச் வேணும் தான். பட், என்னால யூ.எஸ் எல்லாம் வரமுடியாது. நான் என் கிராமத்து வீட்டுக்குப் போய்க் கொஞ்ச நாள் இருக்கலாம்னு யோசிக்குறேன்."
"அங்க போன தான் உனக்கு நிம்மதிய இருக்கும்னா நம்ம அங்கயே போகலாம்"
"போகலாம் இல்ல கதிர் போறேன்."
"எது தனிய போறீயா? அதெல்லாம் முடியாது த்வனி. பச்சபுள்ளய வச்சிட்டு நீ தனிய அங்க இருப்பீய… அதெல்லாம் ஒன்னு வேணாம்."
"இல்ல கதிர் நான் மட்டும் தான் போறேன்." என்று அவள் அழுத்தமாகச் சொல்ல, கதிர் கண்கள் சுருக்கி அவளைப் பார்த்து, "அப்ப பாப்பா?" என்றான்.
த்வனி குனிந்து தன் மடியில் தூக்கும் குழந்தையைப் பார்த்து, "இவளுக்கு இப்ப இவ அப்பா தான் வேணும் கதிர். அவனுக்கும் இவ தான் வேணுமாம், சௌந்தர்யாம்மா ஃபோன் பண்ணாங்க. இவ இல்லாம அவன் அழுதுட்டு இருக்கானாம்." என்றவள் குரலில் ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் அப்பட்டமாகத் தெரிய, கதிர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
"சரி அதுக்கு இப்ப என்ன செய்யப்போற நீ"
"அந்த லூசு சொல்லுச்சு நான் பாப்பாவ நல்லா பாத்துக்குவேன்னு. ஆமா, என் லயாவ நான் நல்லாவே பாத்துக்குவேன் தான். நான் நல்ல அம்மாவ இருப்பேன். ஆனா, என்னால இவளுக்கு நல்ல அப்பாவ இருக்க முடியாது. பட், அவனால இவளுக்கு ரெண்டுமாவும் இருக்கமுடியும். எனக்கு அதுல முழு நம்பிக்கை இருக்கு கதிர். அவனுக்கு என்னோட தான் இருக்க வேணாமே தவிர, குழந்தை மேல அவனுக்கு உயிரு. அதான் பாப்பாவ அவன்ட்டயே குடுத்துட போறேன். இது நான் அன்னைக்கு வீட்ட விட்டு வந்த அன்னைக்கே எடுத்த முடிவு தான். அதை இப்ப செய்யப்போறேன். அவன் சொன்னது தான்… இவளுக்கு நான் தான் அம்மான்றது என்னைக்கு மாறது. அதுக்காக அந்த உரிமையைக் காப்பாத்த, இவ தினமும் இப்டி அழுதுட்டு இருக்குறதையும் என்னால பாக்க முடியல" என்ற த்வனியின் கண்கள் கலங்கி இருந்தது.
"நீ இந்தக் குழந்தை அழுகுதுனு யோசிச்சு இந்த முடிவுக்கு வந்திய? இல்ல… அங்க அந்தப் பெரிய குழந்தைக்கு எதுவும் ஆகிடகூடாதுனு பாப்பாவ விக்ரம்கிட்ட கொடுக்க நினைக்குறீய?" என்ற கதிரை திரும்பி பார்த்து முறைத்த த்வனி,
"நான் ஒன்னும் அவனுக்காக யோசிக்கல… நான் எதுக்கு அந்த லூசுக்காக யோசிக்கணும். நீ வேணாம் போன்னு சொன்னவனுக்காக நான் எதுக்கு யோசிக்கணும்."
"சரி… அப்ப விக்ரம் டிவோஸ் பேப்பர் குடுத்த அன்னைக்கே பாப்பாவ அவன்ட்ட குடுத்திருக்க வேண்டியதுதானே? எதுக்குத் தூக்கிட்டு வந்த?"
"எனக்கு நல்லது பண்றத நெனச்சு அவன் இத செஞ்சான். ஆனா, பாப்பா இல்லாம அவனால இருக்க முடியாதுன்றதை அவன் மறந்துட்டான். அது அவனுக்குப் புரியணும். இந்த ரெண்டு, மூணு நாள்ல அவனுக்கு அது நல்லாவே புரிஞ்சிருக்கும் இன்னும் ஒரு நாள் விட்ட, அவனே வந்து இவள தூக்கிட்டுப் போய்டுவான். அதோட எனக்கே எனக்குன்னு கொஞ்ச நாள் பாப்பாவ நான் வச்சிகணும்னு நெனச்சேன்" என்றாள் குழந்தை முகத்தைப் பார்த்துக்கொண்டே.
"உன்னால பாப்பா இல்லாம இருக்க முடியுமா" என்ற கதிர் கேள்விக்கு த்வனியிடம் வேதனை நிறைந்த சிரிப்பு தான் பதிலாக வந்தது.
"என்னோட லயா… இதோ, இந்தக் கையில, இந்த ரெண்டு கையில் தான் கதிர் அவ உயிரை விட்ட. அவமேல நான் உயிரையே வச்சிருக்கேன் தான். ஆனா, அவ போனதுக்கு அப்றம் நான் ஒன்னும் செத்துடலியே… இந்த நிமிஷம் வரை உயிரோட தானா வாழ்ந்துட்டு இருக்கேன்." என்றவள் திரும்பி கதிரை பார்த்து, "ஆனா, அவன் அப்டி இல்ல கதிர். அவ போய்ட்டானு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் உயிரைவிட முடிவு பண்ணிட்டான். மறுபடியும் அவ ஏதோ ஒரு வழியில் எங்ககிட்ட திரும்பி வந்துடுவான்னு தெரிஞ்சனால தான் அவன் இப்ப வரை உயிரோட இருக்கான். அப்டி இருக்கும்போது அவன்கிட்ட இருந்து எப்டி கதிர் என்னால இவளா பிரிக்க முடியும். அது நான் அவனைக் கொல்றதுக்குச் சமம் இல்லயா? என்னால அவனுக்கு அந்த பாவத்தை செய்ய முடியாது கதிர்" என்று கண்களைத் துடைத்தபடியே குழந்தையைத் தூக்கிக்கொண்டு எழுந்த த்வனி,
"ஈவ்னிங் நான் அங்க போய்ப் பாப்பாவ அவன்ட்ட குடுத்துட்டு, அங்கிருந்தே கிராமத்துக்குப் போறேன்" என்று ரெண்டடி சென்று, நின்று திரும்பி கதிரை பார்த்து, "நான் அப்டிக்கப் போனதும். இந்தப் பக்கம் ஃபோன் போட்டு நான் ஊருக்கு போற விஷயத்தை யாருக்கும் சொல்ல வேணாம். புரியுத…" என்று எச்சரிக்கும் தோரணையில் சொல்ல,
கதிர் இல்லை என்று தலையாட்டி, "எனக்கு எதுக்கும் ஊர்வம்பு. எனக்கு ஆயிரத்தி எட்டு வேலை இருக்கு. போம்மா… நீ போய் ஊருக்கு கிளம்பும் வழிய பாரு. நான் போய் என் ஆயிரத்தி ஒன்பதாவது வேலைய பாக்குறேன்" என்று அந்த அறையில் இருந்து வெளியே வந்தவன். அவன் திட்டக்குழுவின் மெம்பர்களை அவர்கள் ரகசிய மீட்டிங்கு அழைத்தான்.
"என்ன கதிர் சார் த்வனி யூ.எஸ் வர ஒத்துக்கிட்டாளா" என்று வருண் ஆர்வமாகக் கேட்க, கதிர் இல்லை என்று தலையாட்ட, அனைவருக்கும் பூஸ்சென்று ஆனது.
"என்ன இது நம்ம ப்ளான் ஆரம்பிக்கும் முன்னையே இப்டி கவுத்துக்கிச்சு" என்று ஷாலி தலையில் கைவைக்க,
"இல்லம்மா ஷாலினி. அவ யூ.எஸ் வரேன்னு சொல்லல… பட், அதைவிட ஒரு சூப்பர் மேட்டர் சிக்கி இருக்கு… நம்ம என்ன நெனச்சோம், த்வனி எங்க கூட யூ.எஸ் வர ஓகே சொன்ன, அதை அப்படியே மாத்தி த்வனி பாப்பாவ கூட்டிட்டு போய், அங்கயே செட்டில் ஆகப்போறான்னு விக்ரம்கிட்ட பொய் சொன்னா… அவனே வந்து த்வனிய கூட்டிட்டு போவான்னனு தானே ப்ளான் பண்ணோம். இப்பவும் அதைத் தான் செய்யப்போறோம்" என்று த்வனி சொன்ன விஷயத்தை அவர்களிடம் சொன்னான்.
"ஓஓஓ அப்ப விக்ரம் அண்ணாவால தன்னைவிட்ட இருக்க முடியுது, ஆனா, குழந்தைய விட்டு இருக்கமுடியாம தவிக்கிறாருன்னு இந்தம்மாக்குப் பொறாமை. குழந்தைய தேடுறவாரு தன்னைத் தேடலயேன்னு கோவம். அப்படிதானா கதிர் அண்ணா."
"எக்ஸாக்ட்லி ஆரும்மா. அதுதான் அவளுக்குக் கோவம். அதை அவளால சொல்ல முடியலன்றதை விட, அவளுக்கே அது புரியல. சோ நம்ம தான் இதுக்கு எதாவது செய்யணும்."
"சொல்லுங்க கதிர் சம்பவத்தைச் சிறப்ப செஞ்சி விட்றலாம்" என்று உற்சாகமானான் வருண்.
"வருண் இப்ப நீங்க உடனே த்வனிகிட்ட போய், விக்ரம்கு ரொம்ப உடம்பு முடிலன்னு சொல்லுங்க, நான் விக்ரம் வீட்டுப் போய், என் வேலைய செய்றேன்."
"ஓகே கதிர் நீங்க போங்க, கரெக்ட் டைமுக்கு த்வனி வருவா" என்று அனைவரும் கிளம்பினார்.
விக்ரம் பாதி உயிராக அமர்ந்திருக்க, கதிருக்கு அவனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
'த்வனி சொல்ற மாதிரி நீ லூசு தான்டா. நீ மட்டும் இல்ல உன் பொண்டாட்டி உன்ன விடப் பெரிய லூசு. ரெண்டு லூசும் சேந்து எல்லாம் கிறுக்கக்குறீங்க'' என்று மனதில் இருவரையும் திட்டியவன், "விக்ரம்" என்று மெதுவாக அழைக்க, விக்ரம் தொட்டியில் இருந்த தான் பார்வையை வாசல் பக்கம் திரும்பினான்.
"என்ன விக்ரம் இது? எதுக்கு இப்டி இருக்க? தேவை இல்லாத ஒன்னை தேவைனு நெனச்சு செஞ்சிட்டு இப்ப இப்டி உக்காந்துட்டு இருக்கீயே" என்று வருந்த,
"தேவை தான் கதிர். ரொம்பத் தேவை. எனக்கு அவளோட நிம்மதியும் சந்தோஷமும் ரொம்பவும் தேவை" என்று இப்போது த்வனிக்காக யோசிப்பவனை நினைக்க நினைக்கக் கதிருக்கு உள்ளம் சிலிர்த்தது.
"என்ன மாதிரியான அன்புடா உங்களுது… நீ அவளுக்காக யோசிக்கிற, அவ உனக்காக யோசிக்கிற. ஆனா, கேட்ட எங்க ரெண்டு பேரும் நடுவுல ஒன்னு இல்லனு சொல்றீங்க" என்றவனை விக்ரம் புரியாமல் பார்த்தான்.
"என்ன பாக்குற… இனிமே நீ இந்தத் தொட்டிலை பாத்து அழ வேணும். உன் பொண்ணு உன்னைப் படுத்துற பாட்ல கண்ணீர் விட்டு கதறி கதறி அழப்போற பாரு…" என்று புன்னகையுடன் சொல்ல, விக்ரம் கண்களில் மின்னல் போல் மகிழ்ச்சியின் கீற்று.
"என்… என்ன சொல்றீங்க கதிர். அ… அவ… அவ பாப்பாவை கூட்டிட்டு இங்க வரளா…" என்று ஆர்வமாகக் கேட்க, கதிர் "ஆமாம்" என்று தலையை ஆட்ட, விக்ரம் உள்ளம் ஒரு நிமிடம் துள்ளிக்குதித்த, அடுத்து கதிர் சொன்ன செய்தியில் உள்ளம் அடியோடு உடைந்து நொறுங்கியது.
"என்… என்ன சொல்ற கதிர்..?" என்ற விக்ரம் குரலில் உயிரே இல்லை.
"ஆமா விக்ரம். த்வனி குழந்தையை உன்கிட்ட குடுத்துட்டு, எங்க கூட யூ.எஸ் வர… அவ அங்கயே செட்டில் ஆகிடலாம்னு இருக்கா... திரும்பி இந்தியாவுக்கு வரவே மாட்ட…" என்ற கதிர் வார்த்தைகளே விக்ரம் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அப்டியே சிலையாக அமர்ந்து விட்டான்.
வருண், விக்ரமுக்கு உடல்நிலை சரியில்லை என்றது தான் அடுத்த நிமிடம் குழந்தையுடன் விக்ரமை பார்க்க கிளம்பி இருந்தாள் தவ்னி.
மெதுவாகக் கதவை திறந்த த்வனிக்கு அங்குச் சிலைபோல் அமர்ந்திருந்த விக்ரமை பார்த்த பின்பு தான் போன உயிர் திரும்பி வந்தது.
'இந்த வருணை தூக்கிப்போட்டு மிதிக்கணும். எதுக்கு இவனுக்கு உடம்பு சரியில்லனு பொய் சொன்னான். ஒரு நிமிஷம் எனக்கு உயிரே போய்டுச்சு' என்று வருணை மனதில் கண்டபடி திட்டியவள்,
"வி… விக்ரம்" என்று அழைக்க, அவள் குரலில் அந்த மனித சிலைக்கு உயிர் வந்தது போலும், சட்டெனத் திரும்பி பார்த்தவன், வேகமாக எழுந்து வேகமாக த்வனி அருகில் ஓடி வந்து, அவள் கையில் இருந்த குழந்தையைத் தன் கையில் வாங்கியவன், அதன் உச்சி முதல் பிஞ்சு பாதம் வரை ஆசையாக முத்தம் வைக்க, அவன் கண்களில் இருந்து வந்த கண்ணீர், அந்தப் பிஞ்சோடு அதை பெற்றவள் மனதையும் நனைய வைத்தது.
த்வனியை கண்களை அந்த அழகிய காட்சி முற்றிலும் முழ்கடிக்க, ரெண்டோடு மூன்றாகத் தானும் இருக்க முடியாத என்ற எண்ணம் அவளை வாட்டியது.
'நோ த்வனி, நோ… நீ இப்டி எமோஷனல் ஆகக்கூடாது. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தாலும் நீ எடுத்த முடிவில் இருந்து நீ தடுமாறிடுவ… போது கிளம்பு, கிளம்பிடு த்வனி' என்று அவளுக்கு உள்ளுக்குள் அலாரம் ஆடிக்க, அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு கதவை நோக்கி திரும்ப,
"ங்கா.. ங்கா" என்று குழந்தையின் மழலை மொழியில் அழுகை சத்தம் கேட்ட, அந்த மொழியின் அர்த்தம் உணர்ந்தவள், ஓடி வந்து விக்ரம் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவள் குழந்தைக்குப் பாலுட்ட, விக்ரம் த்வனியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்கள் இருந்து கண்ணீர் பெருக, உதட்டை கடித்துக் கண்ணீரை உள்ளிழுத்த த்வனி, பசியாறிய குழந்தை தோளில் போட்டு தட்டிக்கொடுக்க, குழந்தை அமைதியாக உறங்கி இருந்தது.
விக்ரம் உறங்கும் குழந்தை முகத்தைப் பார்க்க, அது வயிறு நிறைந்த திருப்தியில் அமைதியாக தொட்டியில் தூங்கி இருக்க, விக்ரம் நிமிர்ந்து த்வனி முகத்தைப் பார்த்து,
"நான் சாப்டு ரெண்டு நாள் ஆகுது… பசிக்கிது" என்று குழந்தை போல் சொல்ல, த்வனிக்கு உயிரே உருகி விட்டது.
வேகமாகத் தான் கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்த டிபன் பாக்ஸ்சை எடுத்து அவசரமாகத் திறந்து விக்ரம் முன் நீட்ட, வேகமாக அதை வாங்கி உண்ண ஆரம்பித்தான் விக்ரம்.
ஒரு நிம்மதியோடு அவன் உண்ணுவதைப் பார்த்துக்கொண்டிருந்த த்வனி முன் விக்ரம் உணவை எடுத்து நீட்ட, த்வனி அவனை இமைக்காமல் பார்த்தாள்.
அவன் கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டான் என்று அவள் அவனுக்காக உணவு எடுத்து வந்திருக்க, அவளும் இந்த ரெண்டு, மூணு நாளில் சரியாகச் சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்று தெரிந்த விக்ரம் உணவை அவள் முன் நீட்ட, த்வனி அழுத்தமாக அவன் கண்களைப் பார்த்தபடியே வாயை திறக்க, விக்ரம் அவளுக்கு உணவை ஊட்டி விட்டான்.
இருவருக்கும் வாயிறு நிறைந்ததோ இல்லையோ… ஆனால், உள்ளம் நிறைவில் நிறைந்து இருந்தது.
எவ்வளவு நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர் என்று இருவருக்கும் தெரியவில்லை.
"நா… நான் போறேன்" என்று எழுந்து கொண்டாள் த்வனி.
