நிஜம் 34





நிஜம் 34


மாலை நேரம், த்வனி தன் ரூம் வாசலையே பார்த்திருந்தாள். 


"என்ன த்வனி நாங்க ரெண்டு பேர் இங்க இருக்கேம். நீ என்ன வாசலயே பாத்துட்டு இருக்க?"


"இல்ல ஷாலு… இது நான் வாக்கிங் போற டைம், அதான் என்ன‌ இன்னும் அந்த கொரங்க காணும்னு பாக்குறேன்."


"ஓஓஓ" என்று இழுத்த ஆரு, "சரி அண்ணா இல்லாட்டி என்ன, அதான் நாங்க ரெண்டு பேர் இருக்கோம் இல்ல, வா நாங்க கூட்டிப்போறோம்"


"இல்ல ஆரு, அவனே வரட்டும். இல்லாட்டி வந்தது ஏன் நான் இல்லாம போனேன்னு வல்லுவல்லுன்னு விழும்" என்றவள் பார்வை இன்னமும் வாசலிலேயே இருக்க, ஆருவும்‌ ஷாலும் ஒருவரை ஒரு அர்த்தப் பார்வை பார்த்துக்கொண்டனர்.


"ஏன் த்வனி அண்ணா வந்த கத்துவருன்னு யோசிக்கிறீயா? இல்ல… அவர் கூட தான் போகணும்னு ஆசப்படுறீயா?" என்ற ஆருவை த்வனி முறைக்க, 


"சும்மா மொறக்காத த்வனி. உன் மனசு தொட்டு சொல்லு… நான் சொன்னது உண்மை இல்லான்னு?" என்றவளுக்கு பதில் சொல்லாமல் த்வனி அமைதியாக இருக்க, அவள் நாடியை பிடித்து தூக்கி தான்‌ முகத்தை பார்க்க வைத்த ஆரு,


"சொல்லு த்வனி... நீ அண்ணா கூட இருக்க ஆசப்படல? என் கண்ண பாத்து சொல்லு பாப்போம்" என்றவள் கையை தன் நாடியில் இருந்து எடுத்த த்வனி மெதுவாக எழுந்து சன்னல் அருகில் சென்று நின்றாள்.


வானத்தை பார்த்தபடி, "இங்க பாருங்கடி, நீங்க எல்லாரும் என்ன யோசிக்றீங்கன்னு எனக்கு நல்லா புரியுது. பட், அதெல்லாம் நடக்காது. விக்ரமை பொறுத்தவரை அவனுக்கு என் வயித்துல இருக்க அவனோட ரென்யா தான் முக்கியம். அஃப்கோஸ் எனக்கும்‌ என் லயா தான் முக்கியம். விக்ரம் என்மேல காட்ற அக்கறை எல்லாம் எனக்கானது இல்ல, அது இந்த குழந்தைக்காக. நான் நல்லா இருந்தா தான் பாப்பா நல்லா இருக்கும்னு தான் அவன் என்னை கவன்சிக்குறான்." என்ற த்வனியின் குரலில் அவளின் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.


"ஏன் த்வனி நீ இந்த வீட்டைவிட்டு போறேன்னு சொன்னப்பவும், அவர் சொல்றத நீ கேக்க மாட்டோன்னு அடம்புடிக்க டைம்ல எல்லாம் அவர்‌ என்ன சொல்லி உன்னை மிரட்டுவாரு" 


"ஏன் ஷாலு, உனக்கு தெரியாத?"


"எனக்கு தெரியும்டி, அது உனக்கும் தெரியணும் தான் கேக்குறேன். சொல்லு" 


"என்ன சொல்லுவான். எப்பபாரு யூ ஆர் மை லீகலி வெட் வைஃப் னு கழுத்தருப்பான்" என்றவள்‌‌ வார்த்தை பாதியில் நிற்க, திரும்பி ஷாலுவை பார்த்தாள்.


"நீ சொன்னீயே, அவருக்கு பாப்பா தான் முக்கியம்னு, எஸ் ஐ அக்செப்ட்… ஆனா, அவர் எப்பவும் நீ என் புள்ளைய‌ சுமக்குற, அதனால என்னோட தான் இருந்தாகணும்னு சொன்னதே இல்லடி. நீ‌ நான் தாலி கட்ன பொண்டாட்டி, அதனால நீ என்னோட தான் இருக்கணும்னு தான் ஒவ்வொரு முறையும் சொன்னாரு. அப்ப இதுக்கு என்னடி அர்த்தம்" என்ற ஷாலுக்கு என்ன பதில் சொல்வது என்று த்வனிக்கு தெரியவில்லை.


"இங்க பாருங்கடி… நீங்க சொல்றது எதுவும் இங்க நடக்கப்போறது இல்ல. அவனுக்கு என்னை சுத்தமா புடிக்காது. இந்த குழந்தைக்காக தான் அவன் இவ்ளோவும் செய்றான். இந்த பாப்பா ஒன்னு தான் எங்களுக்கு நடுவுல இருக்க உறவு… அவ்ளோதான் அது தவிர‌ ஒன்னு இல்ல"


"ம்ம்ம்ம்…? சரி அப்ப குழந்தை பொறந்த பிறகு ரெண்டு பேரும்‌ என்ன‌ செய்யப்போறீங்க? என்ன டிவோர்ஸ் செஞ்சிட்டு தனித்தனிய வாழப்போறீங்களா?" என்ற ஆருவின் வார்த்தை த்வனியை ஒரு நிமிடம் உலுக்கி‌ விட்டது.


"ஆரு" என்று த்வனி ஆத்திரத்தில் கத்த,


"ஏன்டி கத்ற? அதான் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒன்னும் இல்லயே… அப்றம் எதுக்கு இந்த போலி வாழ்க்கை"


"ஷட் அப் ஆரு... ஜஸ்ட் ஷட் அப்…" என்ற கத்திய த்வனி உள்ளுக்குள் என்ன உணர்ந்தாள் என்று அவளுக்கும் புரியவில்லை.


"நீ சொல்ற மாதிரி என்னால டிவோர்ஸ் எல்லாம் பண்ணமுடியாது" என்று உறுதியாக சொல்ல,


"அதான் ஏன்னு கேக்குறோம்?"


"ஏய் சொல்றத புரிஞ்சிக்கடி… எ… என்..‌. என்னால அப்படி எல்லாம் செய்யமுடியாது" என்ற த்வனியின் உடல் நடுங்கியது.


"அதான் ஏன்னு கேக்குறோம்"


"பிகாஸ் என்னாலயும்‌ சரி, அவனாலயும் சரி எங்க குழந்தைய‌ விட்டுக்குடுக்க முடியாது. நீங்க சொல்ற மாதிரி நாங்க டிவோர்ஸ் பண்ண, குழந்தை யார்கிட்ட இருக்கணும்ன்ற பிரச்சனை வரும். அவன் பாப்பாவ எனக்கு குடுக்க மாட்டான். நான் என் புள்ளைய‌ அவன்ட்ட தரமாட்டேன். அப்றம் எப்படி நாங்க டிவோர்ஸ் பண்ண முடியும்" 


"அப்ப மனசுக்கு புடிக்காட்டியும் பரவாயில்ல, அந்த குழந்தைக்காக ஒன்ன வாழ்ந்து தான் ஆகணும்னு சொல்றீயா?" 


"ஆமா அப்படி தான் வச்சிகோயேன்..." என்று சூழ்நிலையை சமாளிக்க ஏதோ சொன்னவள் மூச்சு வாங்க அப்டியே அமரந்துவிட, அவள் சொன்னதை எல்லாம் வெளியில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த விக்ரம் மெதுவாக அங்கிருந்து சென்றுவிட்டான்.


இங்கு ஷாலுவும் ஆருவும் த்வனியின் அருகில் அமர்ந்து அவளை தோளோடு அணைத்து கொண்டு, 


"அண்ணாக்கு உன்னைப் புடிக்காதுனு சொல்றீயே, அப்ப உனக்கு அவரை புடிக்குமா? குழந்தைய விட்டுக் குடுக்க முடியாதுன்னு டிவோர்ஸ் வேணாம்னு சொல்றீயா? இல்ல அண்ணாவ விட்டு போக வேணாம்னு இப்டி சொல்றீயா?" 


த்வனி ஒரு நிமிடம் நிமிர்ந்து ஆருவின் முகத்தை பார்க்க,


 "இந்த கேள்விக்கு நீ எங்களுக்கு பதில் சொல்ல வேணாம்டி. உனக்கு நீயே இந்த கேள்விய கேட்டுப்பாரு? அப்ப உனக்கு புரியும் உன் மனசுல என்ன இருக்குனு. நாங்க கெளம்புறேம்" என்று இருவரும் கிளம்பி விட, த்வனி வெகுவாக குழம்பி போயிருந்தாள்.


த்வனியின் பிரசவ தேதி நெருங்க நெருங்க, விக்ரம் அவள் நிழலாகவே மாறியிருந்தான்.


எப்போதும் துறுதுறுவென இருக்கும் த்வனி, கடந்த 

சில நாட்களாக வெகுவாக வாடி இருப்பது விக்ரமுக்கும் நன்கு புரிந்தது. 


அவள் கருவுற்ற நாளில் இருந்து அவளின் ஒவ்வொரு அசைவையும் நன்றாக அறிந்து வைத்திருந்தவனுக்கு அவள் மனம் வருத்தத்தில் இருப்பது புரிந்ததே தவிர, அதற்கான காரணம் என்ன‌ என்று அவனுக்கு விளங்கவில்லை.


அவள் பிரசவத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்க, த்வனியைவிட விக்ரம் அதிக பயத்தில் இருந்தான்.


அன்று காலை த்வனி அவள் கப்போர்டில் எதையே தேடிக்கொண்டிருக்க, அவள் காலடியில் லயாவின் டைரி வந்து விழுந்தது. 


அதை பார்த்தவுடன் த்வனிக்கு கண்கள் கலங்கிவிட, மெதுவாக குனிந்த அவள் அந்த டைரியை எடுக்கப் பார்க்க, அவளின் நிறைமாத வயிறு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவள் கஷ்டப்பட்டு உதட்டைச் கடித்துக்கொண்டு மேலும் குனியப் பார்க்க,


"ஏய்" என்று கத்திகொண்டே ஓடி வந்து அவளை தாங்கிப் பிடித்து நிறக்க வைத்தான் விக்ரம்.


"ஏன்டி கிறுக்கு, அறிவிருக்க உனக்கு, இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்க டைம்ல இப்டி தான் அசல்ட்டாக இருப்பீயா நீ? ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்ன ‌என்னடி பண்றது." என்று அவன் கண்டபடி கத்த த்வனி பார்வை முழுதும் தரையில் இருந்த டைரி மேல் தான் இருந்தது.


"ஏய் என்னடி? நான் கத்திட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு நிக்குற" என்றவனை நிமிர்ந்து பார்க்காமல், "அத எடுத்து குடு" என்று கீழே பார்த்து கைகாட்ட, விக்ரம் கீழே கிடந்த டைரியை பார்த்தவன், குனிந்து அதை எடுத்து, 


"டைரி கீழ கிடந்த என்னை கூப்ட வேண்டியது தான… அப்டி என்ன இது முக்கியம்" என்று டைரியை அவள் முன் நீட்ட, அதை வாங்க நீட்டிய த்வனியின் கைகள் வெகுவாக நடுங்கியது. 


"இ… இது லயாவோட கடைசி டைரி" என்றதும் விக்ரம் கைகள் அந்த டைரியை இறுக்கிப்பிடிக்க, த்வனி நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவன் விழிகளில வழிந்த கண்ணீர் துளி அந்த டைரியில் பட்டு தெரிந்தது.


த்வனி டைரியில் இருந்து கையை எடுத்துவிட, விக்ரம் அதான் பக்கங்களில் லயித்திருந்த லயாவின், அவன் ரென்யாவின் கடைசி நாட்களை படிக்க தொடங்கினான். அதை படிக்க படிக்க அவன் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் த்வனி.


டைரியின் கடைசி பக்கத்திற்கும்‌ அட்டைக்கும் இடையே ஒரு பேப்பர் இருப்பதை பார்த்த விக்ரம் அதை எடுத்து படிக்க, அதில் 'கடவுளுக்கு ஒரு கடிதம்' என்று எழுதி இருந்தது. 


அதை படித்த விக்ரமின் முகம் அப்படியே வெளிறிப் போயிருந்தது.


"ஏய்… என்னாச்சு உனக்கு? ஏன் உன் முகம் இப்டி இருக்கு?" என்று த்வனி அவனை உலுக்கி, அதில் சுயநினைவுக்கு வந்தவன். நிமிர்ந்து த்வனியை பார்த்தான்.


"நீ… நீ… இந்த டைரிய படிச்சிருக்கிய?" என்று கேட்க,


"ம்ம்ம் இந்த டைரில பாதி, அவ சொல்ல சொல்ல, நான் எழுதுனது தான். ஆனா, அவளோட லாஸ்ட் டேஸ்ல மட்டும் அவளோ எழுதினா… அதை நான் படிச்சது இல்ல. மறுபடியும் அந்த நாட்களை நினைச்சு பாக்கும் தைரியம் எனக்கு இல்ல"


"அப்ப ரென்யாவோட கடைசி ஆசை என்னன்னு உனக்கு தெரியுமா?"


"ம்ம்ம்" என்று தலையை ஆட்டியவள், "நான் கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா… என் வாயித்துல வந்து புள்ளைய‌ பொறப்பேன்னு சொன்னா… அப்புறம் ஏதோ கேக்க வந்தா... ஆனா, எதுவும் சொல்லாம என் கையை இறுக்கிப் புடிச்ச படியே அவ உயிர் போய்டுச்சு. இந்த நாள் இதே நாள் தான் அவ என்னைவிட்டு போனா" என்ற த்வனி அப்படியே உடைந்து போய் கட்டிலில் உட்கார்ந்து விட, ஏன் ஒரு வாரமாக த்வனியின் முகம் வாடி இருந்தது என்ற காரணம் விக்ரமுக்கு இப்போது புரிந்தது.


கண்ணில் வழிந்து கண்களை துடைத்த விக்ரம், "அவளுக்கு ரெண்டு கடைசி ஆசை இருந்திருக்கு, ஒன்னை உன்கிட்ட கேட்டிருக்கா, இன்னொன்ன கடவுளுக்கு லெட்டரா எழுதி இருக்கா."


"ம்ம்ம்... ஒரு நல்ல ஆத்மா சுத்தமான மனசோட ஒரு விஷயத்தை கடவுள்கிட்ட‌ கேட்ட அதை கடவுள் நிச்சயமா‌ குடுப்பாருங்குறது, அவ விஷயத்தில் உண்மை ஆகிடுச்சு." என்ற விக்ரம் அந்த பேப்பரை த்வனியிடம் தந்தான்.


த்வனி அது படிக்க ஆரம்பித்தாள்.


"கடவுளே இன்னும் கொஞ்ச நாள்ல நான் உன்கிட்ட வரப்போறேன். நீ எனக்கு வாழ்க்கை நிறைய நல்ல உறவுகளை குடுத்துட்டு, இப்டி என்னை அவங்க கூட இருந்து வாழ முடியாம, அல்ப ஆயுச ஆக்கி இருக்கக்கூடாது. ம்ம்ம்... பரவால்ல. நான் உன்கிட்ட வர்ரதுக்கு முன்ன எனக்கு ரெண்டு ஆசை இருக்கு, ஒன்னு என் தவ்னிக்கு கல்யாணம் நடக்கணும். அவ சந்தோஷமா இருக்கணும். அவளுக்கு நான் பொண்ணா வந்து பொறக்கணும்" என்று எழுதி இருக்க, த்வனி கண்ணீர் வழிய‌ தன் வயிற்றை தடவி, "உன் ஆச நெறவோறப் போகுதுடி" என்றவள் அந்த பேப்பரில் இருந்த அடுத்த வரிகளை படித்ததும் சிலையாக உறைந்துவிட்டாள்.


"என்னோட ரெண்டாவது ஆசை த்வனிக்கும் என் தேவ்வுக்கும் கல்யாணம் நடக்கணும்" என்ற‌ வரிகளை படித்து த்வனிக்கு அதை கொஞ்சமும் நம்பமுடியவில்லை.


"என்னோட தேவ் பாவம். அவன் நல்லா இருக்கணும். எப்பவும் ஹாப்பிய, நிம்மதியா இருக்கணும். அதை என் த்வனியால மட்டும் தான் செய்யமுடியும். உண்மையில தேவ்வை லவ் பண்ண என்னைவிட அவனை நல்ல புரிஞ்சி வச்சிருக்குறது த்வனி தான். தேவ்வும் அப்படி தான்‌. எனக்கென்னவோ த்வனியும் தேவ்வும் தான் வாழ்க்கையில ஒன்னு சேருவாங்கன்னு தோணுது. அதுக்கு ஒரு கருவிய தான் நீ என்னை இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும் இணைச்சிருக்க போல. எனக்கும் அதுதான் வேணும். என் த்வனிய அன்பா பாத்துக்க என் தேவ்வால மட்டும் தான் முடியும், அதேபோல தேவ்வை சமாளிக்க என் த்வனி தான் சரியான ஆளு… த்வனிக்கும் தேவ்க்கும் கல்யாணம் ஆகணும். நான் அவங்களுக்கு குழந்தையப் பொறக்கணும் காலம் பூர அவங்க கூட சேர்ந்து இருக்கணும். த்வனி சொல்லுவா... மனசால யாருக்கும் கெட்டது நினைக்காதவங்க உன்கிட்ட என்ன கேட்டாலும் நீ அதை செய்வேன்னு. நான் இதுவரை யாருக்கு கெட்டது நெனச்சது இல்லன்றது உண்மையா இருந்தால் என் த்வனியும் தேவ்வும் வாழ்க்கையில ஒன்னு சேரணும். அவங்க சந்தோஷமா இருக்கணும். அதை நான் பாக்கணும்." 


அந்த அறையே அமைதியாக இருந்தது. 


எவ்வளவு நேரம் இருவரும் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள் என்று புரியவில்லை. 


"விக்ரம்..." என்று அடிவயிற்றில் இருந்து கத்திய த்வனியின்‌ குரல் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, அங்கு தரையில் விழுந்து கிடந்த த்வனி வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.


கட்டிலில் இருந்து எழுந்த பார்த்தவள், கால் தவறி கீழே விழ, அவள் நிறைமாத வயிறு தரையில் பலமாக மோதி இருக்க, வலி தாங்கமுடியாமல் கதறிக் கொண்டிருந்தாள் த்வனி. 


அவளை அந்த நிலையில் பார்த்த விக்ரமின் மொத்த உடலும் ஒரு நிமிடம் செயலிழந்து விட்டது.


உதவிக்கு கூட வீட்டில் யாரும் இல்லை. விக்ரமுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்க, அவனுக்கு பதில் சௌந்தர்யா சென்றிருக்க, துணைக்கு யாரும் இல்லாமல் போக, விக்ரம் என்ன செய்வதென்று புரியாமல் ஒரு நிமிடம் பதறியவன், அடுத்த நொடி த்வனியை தன் கைகளில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிடல் பறந்திருந்தான்.



த்வனி கதறு சத்தத்தை கேட்க முடியாமல் விக்ரம் காதுகளை மூடிக்கொண்டு ஒரு மூலையில் குறுகியபடி உட்கார்ந்து திருக்க, நொடிக்கு நொடி த்வனி கதறு ஓசை அதிகமானது. அவசரத்தில் விக்ரம் தன் ஃபோனை கூட எடுக்காமல் வந்துவிட, பதட்டத்தில் யாருடைய நம்பரும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. உதவிக்கு கூட யாரையும் அழைக்க முடியாமல் த்வனி இருந்த அறையே ஒரு பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம்.


சௌந்தர்யா த்வனி ஃபோனுக்கு அழைத்து அவள்‌ எடுக்காமல் போக, வீட்டு நம்பருக்கு அழைத்தார். விக்ரம் த்வனியை தூக்கிக்கொண்டு சென்றதை வேலையாள் லட்சுமி சொல்லி, இருவர் ஃபோனும் வீட்டிலேயே இருப்பதையும் சொல்ல, சௌந்தர்யா உடனே வருண், ஆஷாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் ஹாஸ்பிடலில் இருந்தனர்.


அவர்கள் வருவதற்குள் த்வனியை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றுவிட, அவனைவரும் பதட்டமாக வெளியில் காத்திருந்தனர்.


வருண் விக்ரமை தேடிச் செல்ல, அவன் அந்த ஹாஸ்பிடலின் வாசலில் இருந்த சிறிய கோயில் சாமியை பார்த்தபடி அப்டியே உட்கார்ந்து இருந்தான்.