நிஜம் 33
நிஜம் 33
ஆஷா த்வனி கழுத்தில் மல்லிகை மாலையை போட வர,
"ஒரு நிமிஷம் ஆஷா" என்ற சௌந்தர்யாவை திரும்பிப் பார்த்தாள் ஆஷா.
"தப்ப நெனக்காத ஆஷா, உனக்கு தான் தெரியுமே, நான் இவங்க கல்யாணத்தை கூட பாக்கலன்னு… அதான் இப்ப இவங்க ரெண்டு பேரையும் மாலை மாத்த வச்சு, அதையாவது பாக்கலாம்னு ஆசையா இருக்கு" என்றவர் முகத்தில் அத்தனை எதிர்பார்ப்பு.
"என்ம்மமா இது… இதுக்கெல்லாம் நீங்க என்கிட்ட கேக்கணுமா… ரெண்டு பேரையும் மாலையா மாத்துங்க நான் பாக்கணும்னு அதிகாரமா சொல்வீங்கள அதை விட்டுவிட்டு…
"த்வனி கொஞ்சம் மெதுவாக எழுந்து நில்லுமா" என்று சொல்ல, த்வனி சேரில் கையை ஊன்றி எழுந்தப் பார்க்க, உடனே விக்ரம் ஓடிவந்து அவளை தோளோடு பிடித்து மெதுவாக தூக்கிவிட்டான்.
ஆஷா த்வனி கையில் ஒரு மாலையும், விக்ரமை கையில் ஒரு மாலையை கொடுத்து, "ம்ம்ம் மாலையை மாத்திக்கோங்க" என்று சொல்ல, த்வனி விக்ரமை உர்ரென பார்த்தபடி நிற்க, விக்ரம் தன் கையில் இருந்த மாலையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"சிஸ்டம் ஒரு நிமிஷம் இருங்க" என்ற வருண் அங்கிருந்த மஞ்சள் கலந்த அட்சதை அரிசியை எடுத்து அங்கிருந்த அனைவர்க்கும் கொடுத்து,
"ம்ம்ம் இப்ப மாலையை மாத்த சொல்லுங்க" என்க, ஆஷா வருணை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தாள்.
"ம்ம்ம் ரெண்டு பேரும் மாலைய மாத்திக்கோங்க" என்ற ஆஷா தன் ஃபோனில் கெட்டிமேளம் சத்தத்தை ஒலிக்க விட,
முதலில் த்வனி விக்ரம் கழுத்தில் மாலையைப் போட, விக்ரம் மெதுவாக நிமிர்ந்து த்வனியின் முகத்தை பார்த்தான்.
"டேய் பக்கி எவ்ளோ நேரம் இப்டியே பாத்துட்டு நிப்ப, என்னால நிக்க முடியல… கால் வலிக்குது" என்று மெல்லியதாக அவள் குரல் கேட்டது தான், டக்கென்று அவள் கழுத்தில் மாலையைப் போட்டான்.
அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த, சௌந்தர்யா மனமார இருவரையும் வாழ்த்தினார்.
விக்ரம், அவளை பிடித்து மெதுவாக சேரில் உட்கார வைத்தான்.
சௌந்தர்யா ஒரு ஜோடி வைர வளையல்களை ஆஷா கையில் கொடுத்து த்வனிக்கு போட்டுவிட சொல்ல, ஆஷா அந்த வளையல் அவர் கையிலேயே தினித்து,
"அதெல்லாம் முடியாது, நாங்க கண்ணாடி வளையல் அடுக்கி முடிஞ்சதும், நீங்களே உங்க ஆச மருமகளுக்கு போட்டுவிடுங்க" என்றபடி த்வனியை பார்க்க, அவளும் அதை தான் விரும்புகிறாள் என்பது போல் தலையை ஆட்டினாள்.
ஆஷாவும் மற்றவர்களுக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து, மலர் தூவி ஆசிர்வாதம் செய்து, வண்ண வண்ண வளையல்களை த்வனி கையில் அடுக்க, ஆனந்த கண்ணீர், அந்த அழகிய காட்சியை மறைக்காதபடி சௌந்தர்யா தன் கண்களை துடைத்துவிட்டிக் கொண்டே இருந்தார்.
"ஹலோ வருண், முத்த அண்ணா முறைக்கு ஜெகனும் ஆஷூவும் வளையல் அடிக்கியாச்சு. உங்க பங்கு எங்க? எடுங்க எடுக்க" என்று சட்டமாக கேட்டவள் கையில் தயங்கி தயங்கி ஒரு நகைப் பெட்டியை கொடுத்தான் வருண்.
த்வனி அதை திறந்துப் பார்க்க, அதில் அழகிய மெல்லிய இரண்டு தங்க வளையல்கள் இருந்தது.
"இப்ப என்னால முடிஞ்சது இந்த மெல்லிசான வளையல் தான் த்வனி. கூடிய சீக்கிரமே நல்லா தடிய வாங்கித்தரேன்" என்ற வருணை முறைத்தாள் த்வனி.
"எனக்கு ஒன்னும் இந்த வளையல் வேணாம். இந்த நீயே எடுத்துக்க" என்று அவள் திருப்பிக்கொடுக்க, வருண் முகம் சட்டென வாடிவிட, ஷாலினியோடு மற்றவருக்கு கூட த்வனியின் செய்தது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.
"டேய் வருண் இப்ப எதுக்கு இப்டி மூஞ்சிய தொங்கப்போட்டுட்டு இருக்க? தங்கச்சிக்கு வளையல் வாங்கித் தெரியுது இல்ல… அண்ணான லட்சணமா உரிமையோட அதை அவ கையில போட்டுவிட மாட்டிய… இப்டி கையில குடுத்த என்னடா அர்த்தம்… அப்ப அவ திருப்பி தராம என்ன பண்ணுவா… ஒழுங்க அத அவ கையில போட்டு விடு" என்ற விக்ரமை வருண் நிமிர்ந்து பார்க்க,
"போட்டுவிடுடா" என்று கண்களால் விக்ரம் சொல்ல, வருண் திரும்பி த்வனியை பார்க்க, அவள் இரு கைகளையும் அவன் முகத்துக்கு முன்னால் நீட்டியபடி முகத்தை உரென வைத்துக்கொண்டு இருந்தாள்.
வருண் அந்த வளையலை த்வனி கையில் போட்டுவிட, அவன் தலையில் நங்கென்று கொட்டிய த்வனி,
"சும்மா சும்மா நான் தான் அண்ணா, நான் தான் காமராஜர்னு சொல்லிட்டு திரிஞ்ச மட்டும் பாத்தாது., அவங்கள மாதிரி எல்லாத்தையும் சரியா செய்யவும் தெரியனும், புரியுத" என்றவள் அவன் முன் கைகளைக் குலுக்கி காட்டி நல்லா இருக்கில்ல" என்று சின்னப்பிள்ளை போல் சிரித்துக்கொண்டே சொல்ல வருணுக்கு கண்கள் கலங்கி விட்டது.
விழா முடிவதற்குள் த்வனிக்கு போதும் போதும் என்றாகி விட்டது. விக்ரம் மெதுவாக அவளை அறைக்குள் அழைத்து வந்தான்.
அவள் உடைகளை மாற்றிக்கொண்டு வர, விக்ரம் மருந்தை கொடுத்து அவளை படுக்க வைக்க,
"எனக்கு தூக்கம் வர்ல, நான் கொஞ்ச நேரம் கட்டில்ல சாஞ்சு உக்காரணும்" என்று சொல்ல, விக்ரம் அவளை மெதுவாக தூக்கி, அவள் சாய வசதியாக தலைகாணியை வைத்து அவளை மெதுவாக சாய்ந்து உட்கார வைத்தான்.
விக்ரம் லேப்டாப்பில் எதையே பார்த்துக் கொண்டிருக்க, ஜல்ஜல் என்று கேட்ட ஓசையில் அவன் திரும்பிப் பார்க்க, த்வனியின் முத்துப்பற்கள் பளிச்சென்று தெரிய சிரித்தபடி, கைகளில் இருந்த வளையல்களை குலுக்கி குலுக்கி விளையாட்டிக் கொண்டிருக்க, விக்ரம் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
த்வனிக்குள் ஏதோ குறுகுறுக்க, சட்டென திரும்பிப் அவனை பார்க்க, அவன் அப்போது த்வனியை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
'என்னாச்சு இந்த பக்கிக்கு? நானும் அப்பத்துல இருந்து பாத்துட்டு இருக்கேன், இது என்னையே குறுகுறுன்னு பாத்துட்டு இருக்கு? எல்லாரும் இருக்கும்போது திட்டவேணாம்னு சும்மா இருந்தா… இவன் இதே வேலைய இல்ல இருக்கான்… என்னவா இருக்கும்? டாக்டர் மறுபடியும் எதாவது சொல்லிட்டாங்களா? அதான் பயத்துல என்னையே பாத்துட்டு இருக்கானா?? இல்லயே இவன் பார்வையில பயம் தெர்லயே. ஏதோ மாதிரி இல்ல பாக்குறான். என்ன கன்றாவின்னே புரியலயே' என்று அவள் உள்ளுக்குள் புலம்ப, விக்ரம் எழுந்து த்வனி அருகில் வந்து அவள் முன் மண்டியிட்டு அமரந்து அவள் முகத்தையே உற்று பார்த்தான்.
"டேய் என்னடா? எதுக்கு இப்டி பாக்குற நீ?"
"என்னன்னு தெர்லடி ராட்சசி. சாயங்காலத்துல இருந்து எனக்கு உள்ள ஒரு மாதிரி இருக்கு… நெஞ்சு அடைக்குது, சரியா மூச்சு விடமுடியல… ஒ… ஒரு… ஒரு மாதிரி இருக்குடி" என்றவனை புரியாமல் பார்த்தாள் த்வனி.
"டேய் உனக்கு ஒடம்பு சரியில்ல போல… அதுக்கு ஹாஸ்பிடல் கெளம்பிப் போடா. அதவிட்டு ஏன் என்னையே இப்டி அடிச்சு பாத்துட்டு இருக்க"
"ஏன்னு சொல்லத் தெரியல… ஆனா, எ... எனக்கு… உன் முகத்தை பார்க்கணும் தோணுது… பாத்துட்டே இருக்கணும்னு தோணுது. ஏன்னே புரியல... உனக்காது எனக்கு ஏன் இப்டி ஆகுதுன்னு தெரியுதா? தெரிஞ்ச சொல்லுடி… எனக்கு உள்ள ஒரு மாதிரி ரொம்ப அழுத்தமா ஃபீல் ஆகுதுடி." என்றவன் முகத்தை மெதுவாக இமைகள் சிமிட்டியபடி பார்த்துக்கொண்டிருந்தாள் த்வனி.
'இவனுக்கு என்னாச்சு?? ஏன் இப்டி கண்டபடி உலறிட்டு இருக்கான். ஒரு வேலை டாக்டர் சொன்னது வச்சு பிரசவத்தில் குழந்தைக்கு எதுவும் ஆகிடும்னு பயந்து போய் இப்டி பேசிட்டு இருக்கானா? அப்டி தான் இருக்கும். அன்னைக்கு நைட் கூட இத நெனச்சு தானா அழுதுட்டு இருந்தான்' என்று யோசித்தவளுக்கு அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. ஆனால், அவன் கலங்கிய முகத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஒரு மாதிரியாக இருக்க, அவளையும் அறியாமல் உயர்ந்த அவள் கரங்கள், விக்ரம் தலையை மெதுவாக வருடியது.
"நீ பயந்து போயிருக்க… அதான் இப்டி எல்லாம் பண்றன்னு நெனைக்குறேன். நீ… நீ… ஒன்னும் பயப்படாத, பாப்பாக்கு ஒன்னு ஆகாது" என்று மெல்லிய குரலில் சொல்ல, தன் தலையில் இருந்த த்வனியின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொள்ள, அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கியது.
"டேய் இப்ப எதுக்குடா அழற…"
"ஒன்னு இல்ல இல்ல, பா.. பாப்பாக்கு ஒன்னு ஆகாது தானா... பாப்பாக்கு ஒன்னு ஆகாது" என்று அதையே திருப்பி திருப்பி சொன்னவன் சட்டென நிமிர்ந்து,
"அப்ப நீ? உனக்கும் ஒன்னு ஆகாது இல்ல? சொல்லுடி உனக்கு ஒன்னு ஆகாது இல்ல. ரெண்டு பேரும் தி… திரும்பி வந்துடுவீங்க தானா???" என்று பதட்டமாக கேட்டவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் த்வனி.
'நீ… நீ என்பை பத்தி யோசிக்கிறிய? நீயா என்னை பத்தி யோசிக்குற. இவனா என்னை பத்தி யோசிக்கிறான்?' என்று அவள் காதில் கேட்டதை நம்பமுடியாமல் அமர்ந்தாள் அவள்.
"ஏய்" என்று அவள் தோளை உலுக்கிய விக்ரம், "சொல்லுடி… உனக்கு ஒன்னு ஆகாது இல்ல?" என்று தவிக்கும் அவன் கண்களை பார்த்த த்வனி, இடவலமாக தலையை ஆடி "இல்லை" என்று சொல்ல, விக்ரம் அவள் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு, அவள் மடியிலேயே முகத்தை புதைத்துக் கொண்டான்.
அவன் செயலில் த்வனி உள்ளுக்குள் அதிர்ந்தாலும் இப்போது அவன் இருக்கும் மனநிலையில் அவனை திட்ட மனம் வராமல், அமைதியாக இருந்தவள் கைகள், அனிச்சையாக தன் மடியில் இருந்த அவன் தலையை தடிவிக் கொடுத்தது.
நாட்கள் அதன் பேக்கில் நகர, த்வனியின் மேல் விக்ரமின் அக்கறை அளவுகடந்து சென்றுகொண்டிருந்தது.
த்வனிக்கு சரியாக சாப்பாடு எடுக்காமல் தவிக்கும் போதெல்லாம் விக்ரம் போராடி அவளை சாப்பிட வைத்தான். இரவில் சரியாக உறங்க முடியாமல் புரண்டு படுக்க கூட முடியாமல் அழுபவளை தான் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு அவளை உறங்க வைத்து இவன் இரவெல்லாம் கண்விழித்து கிடந்தான்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் மாற்றங்கள் த்வனியை படுத்தியெடுக்க, அதன் தாக்கத்தை முழுதாக விக்ரம் மீது இறக்கிவைத்தாள் த்வனி. கோவம் வரும்போதெல்லாம், கண்டபடி அவனை வார்த்தைகளால் வறுத்தெடுத்தாள், கண்ணில் படும் பொருட்களை எடுத்து விக்ரம் மீது வீசினாள். தான் செய்வது தவறு என்று த்வனிக்கு புரிந்தாலும், அவளுள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவளை வெகுவாக படுத்தி எடுக்க, அதனால் ஏற்படும் கோவமும், மனவுலைச்சலும் விக்ரமிடம் வெளிப்பட்டது.
அவள் திட்டும் போதும் சரி, கண்டதை தூக்கி அடிக்கும் போதும் சரி விக்ரம் அவளின் மனநிலை புரிந்து அமைதியாக அவளை அரவணைத்தான்.
த்வனியை சுற்றி தன் உலகத்தை சுருங்கிக் கொண்டான். முக்கிய பொறுப்புகளை வருணிடம் ஒப்படைத்து, ஆருவையும் தன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, வருணுக்கு துணையாக வைத்துவிட்டான். தவிர்க்க முடியாத மீட்டிங்கை மட்டும் அவன் சென்று முடித்துவிட்டு வந்தான். மற்றபடி என்னேரமும் த்வனியின் அருகிலேயே இருந்தான்.
அன்று முக்கியமான மீட்டிங் இருக்க விக்ரம் ஆபிஸ் வந்திருந்தான். அந்த நேரம் ஷாலினி, ஆருஷி இருவரும் த்வனியோடு இருந்ததால் நிதானமாக தன் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம்.
"இப்ப எல்லாம் நீ ரொம்ப மாறிட்ட விக்ரம்" என்ற வருணை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம்.
"ஏன்டா அப்டி சொல்ற? நான் அப்படியே தானா இருக்கேன். என்ன மாறிட்டேன்னு சொல்ற?" என்றவனை நேருக்கு நேராக பார்த்த வருண்,
"இதுக்கு முன்ன ஒரு முறை நான் கேட்ட அதே வேள்விய தான் இப்பவும் கேக்குறேன். உனக்கும் த்வனிக்கும் நடுவுல என்ன இருக்கு விக்ரம். மறுபடியும் அந்த பாப்பா தான் இருக்கு வேற ஒன்னு இல்லன்னு சொல்லாத… பிகாஸ் அப்ப நீ இந்த பதில சொல்லும்போது அது சரியா இருந்திருக்கலாம். பட், இப்ப அப்டி இல்ல. அது உனக்கே தெரியும். த்வனி மேலான உன்னோட பார்வை இப்ப மாறி இருக்கு, சோ ப்ளீஸ், உண்மைய சொல்லு..."
விக்ரம் தலையை குனிந்தபடி அமைதியாக இருக்க, வருண் எழுந்து அவன் அருகில் சென்று அவன் தோளைத் தொட, விக்ரம் சட்டென வருண் வயிற்றை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
"டேய் அழறீய நீ… விக்ரம்… டேய் என்னாடா? என்னாச்சு?" என்ற வருண் அவன் முதுகை ஆதரவாக தடவிவிட, விக்ரம் அழுகை சற்று குறைந்தது.
"என்னடா? என்ன தான் ஆச்சு உனக்கு?" என்று கேட்டவனுக்கு இடவலமாக தலையை ஆட்டி "தெரியல" என்றான் விக்ரம்.
"எனக்கு என்னச்சுன்னு எனக்கு தெரியல வருண். அந்த ராட்சசி வளைகாப்புல இருந்து நான் சரியில்ல. அது எனக்கே தெரியுது. ஆனா, அது ஏன்னு தான் தெரியல… நான் அவகிட்ட கூட கேட்டேன். எனக்கு உன்னை பாத்துட்டே இருக்கணும் போல தோணுது… ஏன் எனக்கு இப்டி தோணுது? உனக்கு தெரிஞ்ச சொல்லுடின்னு"
"யாரு த்வனிகிட்டய கேட்ட?" என்றதும் "ஆமாம்" என்றான் விக்ரம்.
"சரி... த்வனி என்ன சொல்லுச்சு?"
"நான் அவ டெலிவரிரை நெனச்சு ரொம்ப பயந்து போயிருக்கேன். அதான் எப்பவும் கூட இருந்து அவளை பாத்துக்கணும்னு நெனைக்குறேன்னு சொன்னா"
" த்வனி சொன்னா சரி… அது தான் காரணம்னு உனக்கும் தோணுதா?"
"அப்டியும் இருக்கலாம் தானா வருண். டாக்டர் அவ ஹெல்த் பத்தி சொன்னதுல இருந்து நான் பயந்து போயிருக்குறது உண்மை தானா…"
"ம்ம்ம் சரி விக்ரம் நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும். இப்ப நான் கேக்குறேன். நீ பொறக்கப்போற குழந்தைக்காக மட்டும் தான் யோசிக்குறீய?" என்ற வருணை புரியாமல் பார்த்தான் விக்ரம்.
"நீ கேக்குறது எனக்கு புரியல வருண்"
"டேய் உனக்கு அந்த குழந்தை... ஐ மீன், உனக்கு இப்பவும் உன்னோட ரென்யா மட்டும் தான் முக்கியமான்னு கேக்குறேன். த்வனிய பத்தி எந்த கவலையே அக்கறையே உனக்கு இல்லையான்னு கேக்குறேன். அந்த குழந்தை பொறந்த பிறகு உங்க ரெண்டு நெலம என்னன்னு கேக்குறேன் புரியுதா?" என்று ஹய் பிச்சில் கத்த, விக்ரமிடம் அவன் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லாமல் போனது.
"நா… நான்... கெளம்புறேன். அவ வாக்கிங் போற டைமாகிடுச்சு. நான் தான் கூட்டிட்டு போகணும். அவ என்னை தேடுவா, நான் கெளம்புறேன்" என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடி இருந்தான்.
"என்ன கொடும இது… இவங்க ரெண்டு பேர் மனசும் ஒருத்தரை ஒருத்தர் தேடுது. அவங்க அருகாமைல இருக்க ஆசப்படுது, தே நீட் ஈச் அதர்... இது ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது. பாக்குற எங்களுக்கே தெரியுறது, இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் ஏன் புரியவே மாட்டேங்குது." என்ற வருணுக்கு எங்கயாது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
வருண் நடந்ததை ஷாலினிக்கு ஃபோன் செய்து சொல்ல, ஷாலினி, ஆருஷி த்வனியுடன் நடந்த பேச்சுவார்த்தை சொல்ல, மூவரும், தீ சேம் ஃபீலிங். இவங்கள வச்சிட்டு முடியலடா சாமி என்று தலையில் அடித்துக் கொண்டனர்.
