நிஜம் 31

 




நிஜம் 31


விக்ரம், சௌந்தர்யா, த்வனி மூவரும் டைனிங் டேபிளில் ‌உட்காந்திருக்க, தட்டில் இருந்த இட்லி, சாம்பாரை பார்த்த த்வனி முகம் அஷ்ட கோணலாக மாறியது.


"லஷ்மி ம்மா, எனக்கு இட்லி எல்லாம் வேணாம். வாயெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. ப்ளீஸ் காரமா எதவது தாங்களேன் ப்ளீஸ்" என்று பாவம் போல் கேட்டவளை பார்க்கவே சௌந்தர்யாவுக்குக் கஷ்டமாக இருந்தது.


"ப்ளீஸ் த்வனி, நைட் டைம்ல இட்லி தான் நல்லது. சீக்கிரம் ஜீரணம் ஆகும். காரம் எல்லாம் இப்ப வேணாம்டா. காலையில் லஷ்மிகிட்ட உனக்கு எதாவது ஸ்பெஷலா செஞ்சு தர சொல்றேன். இல்ல என்ன வேணும்னு சொல்லு நானே செஞ்சு தரேன். இப்ப இத சாப்டுமா" என்று கெஞ்ச, த்வனியின் முகம் வாடி விட, விக்ரமுக்கு அவள் முகத்தைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.


அவனுக்கு நன்கு தெரியும், லயாவின் அம்மா சமையலைத் தவிர, உணவு விஷயத்தில் அதிகம் ஆர்வம் இல்லாதவள் த்வனி என்று. அப்படிப்பட்டவள், இன்று இப்படிக் குழந்தைப் போல் கெஞ்சுவதைப் பார்க்கவே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. அதிலும் ஏழு மாதம் ஆனா பிறகும், இன்னும் முழுதாக த்வனிக்கு வாந்தி நின்றபாடில்லை. அதனால் வேறு அவள் அவதிப்பட்ட, பாதி நேரம் சாப்பாடை பார்த்தாளே பிடிக்கவில்லை என்று சரியாக உணவு உண்ணாமல் அவள் அடம்பிடிக்க மீண்டும் கழுத்தில் கத்தியை வைப்பேன் என்று மிரட்டியே விக்ரம் அவளுக்கு உணவை நேரத்துக்கு ஊட்டிவிட்டு தான் அடுத்த வேலைப் பார்ப்பான்.


'ஏற்கனவே கோயில இருந்து சோந்து போய் வந்த, கால் வேற வீங்கிப்போய் இருக்கு, இப்ப சாப்டவும் முடியாம கஷ்டப்பட்டுறாளே' என்று யோசித்த விக்ரம் சட்டென எழுந்து சமையல் அறைக்குச் சென்றான்.


அடுப்பை பற்ற வைத்து, அதில் தோசைக்கல்லை வைத்து, ரெண்டு நாட்டு முட்டையை நன்றாக அடித்து, அதைக் கொதித்துக் கொண்டிருந்த தோசைக்கல்லில் ஊற்றி, கால் கிலோ வெங்காயம், அளவாகப் பச்சை மிளகாயையும் குட்டி குட்டியாக நறுக்கி, அதை முட்டை மேல் போட்டவன், மழைச்சாரல் போல் உப்பையும், மிளகுத்தூளை தூவி சுற்றிக் கொஞ்சமாக எண்ணெய் உற்றி, ஆம்லெட் வெந்ததும் அதை அப்படியே எடுத்துத் தட்டில் போட்டு எடுத்து வந்து த்வனி முன் நீட்டினான்.


தட்டில் இருந்த இட்லியையே பாவம் போல்

பார்த்திருந்தவள் முன், சூட சூட வெங்காயம், பச்சைமிளகாய் பளபளக்க, மிளகின் காரமான வாசனை மூக்கை துளைக்க, கிட்டத்தட்ட இருபது சென்டிமீட்டர் அளவுக்கு இருந்த ஆம்லெட்டை பார்த்த தவ்னி கண்கள் சட்டெனப் பெரிதாக விரிந்தது. அடுத்த நொடியே அந்த ஆம்லெட்டை ரோல் போல் சுருட்டி கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துத் திங்க வேண்டும் என்று த்வனியின் நாக்கில் எச்சில் ஊறினாலும், அவள் மனமே, 'ம்ம்க்கும் இவன் போட்ட ஆம்லெட்டை நான் திங்கணுமா… அதெல்லாம் முடியாது. கெத்த விட்றாத த்வனி' என்று அவள்‌ மனம் அடித்துக் கூறியது.


"ஏய் என்ன பாத்துட்டு இருக்க, சூடா இருக்கும் போதே சீக்கிரம் சாப்டு" என்ற விக்ரமை முறைத்த த்வனி,


"நான் உன்னைக் கேட்டனா? எனக்கு ஆம்லெட் வேணும்னு…?"


"ஏய் நீதானா லஷ்மிகிட்ட, காரமா எதாது வேணும்னு கேட்ட, எனக்கு வேற‌ எதுவும் செய்யத் தெரியாது, அதான் இத போட்டுக் கொண்டு வந்தேன்."


"நான் லஷ்மி ஆன்ட்டி கிட்ட தான்‌ கேட்டேன். உன்கிட்ட இல்ல… எனக்கு ஒன்னும் இந்த ஆம்லெட் வேணாம். நான் இந்த இட்லியயே தின்னுக்குறேன்" என்று விம்புக்கு சண்டைக்கு நிக்கும் மருமகளைப் பார்த்து சௌந்தர்யாவுக்குச் சிரிப்பு தான் வந்தது.


"ஏய்‌ ஒழுங்க இத சாப்டு, வேண்டா வெறுப்ப இட்லிய முழுங்கிட்டு அப்றம் வாந்தி எடுத்துட்டு இருக்காத…"


"போடா டேய். நீ சொல்லி அதை நான் கேட்ட, நான் த்வனியே இல்ல, பேசாம போடா" என்றவளில் குரல்‌ 'போ' என்பதிலேயே நிற்க, அவள் வாயில் ஆம்லெட்டை வைத்துத் தினித்திருந்தான் விக்ரம்.


"ம்ஹூம்" என்று கைகளை ஆட்டியவள், அவன் ஊட்டியதை நன்றாக மென்று முழுங்கிவிட்டு,


"டேய்‌ யாரா கேட்டு எனக்கு ஊட்டி விட்ட நீயி… உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும்" என்று ஆரம்பித்தவளின் வார்த்தைகளும் மீண்டும் பாதியில் நின்றது.


த்வனி விக்ரமை தீயாக முறைக்க,


"ஏய்‌… சும்மா மொறச்சிட்டு‌ இருக்காத, மீதியயாது நீயா சாப்டுறீயாஆஆஆ... இல்ல நானே வாயில தினிச்சுவிடவா" என்றவனை வாய்க்கு வந்தபடி நன்றாகத் திட்டக் கொண்டே, மீதி இருந்த ஆம்லெட் அழகாகச் சுருட்டி கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துச் சாப்பிட‌ தொடங்க, விக்ரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.


"ஏய் மெதுவத் தின்னு, நல்லா மென்னு முழுங்குடி. தொண்டையில சிக்கிக்கப் போகுது. இது போதுமா, இல்ல இன்னொரு ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வரவா" என்ற விக்ரமை திரும்பி கூடப் பார்க்காமல் ஆம்லெட்டை வாயில் அதக்குவதிலேயே குறியாக இருந்தாள் த்வனி.


கடைசியாகத் தட்டில் சிதறி கிடந்த வெங்காயத்தைக் கூட விடாமல் சாப்பிட்டு முடித்து,


"அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஆம்லெட்டாம் பெரிய‌ ஆம்லெட். உப்பும்மில்ல, சப்பும்மில்ல. வாய்ல வைக்க முடியல. நல்லாவே இல்ல. இதுல இன்னொனு வேணுமாமாம். போடா டேய்" என்றவள் தட்டிலேயே கை கழுவிட்டு, தான் பெரிய‌ வாயிற்றைத் தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் மெதுவாக நடக்க, விக்ரம் வந்து அவளைத் தோளைப் பிடித்துக்கொண்டான்.


த்வனி அவனைத் திரும்பி பார்த்து முறைத்து,


"டேய் எனக்கு நடக்கத் தெரியும். நீ போடா அந்தான்ட…"


"ஒன்னு நான் உன்னை இப்டி புடிச்சிக்குவேன். இல்ல உன்னை‌ கைல தூக்கிக்குவேன். உனக்கு எது வேணும்" என்றவனைப் பார்த்து த்வனியால முறைக்க மட்டுமே முடிந்தது.


"நீ தூங்கிட்டு போறதுக்கு, கருமம் இதுவே பரவாயில்ல, வந்து தொலை" என்று த்வனி நடக்க, அவளைக் கைத்தாங்கலாக அவர்கள் ‌அறைக்கு அழைத்து வந்த விக்ரம், உணவு சீக்கிரம் ஜீரணம் ஆக வென்னீரில் சிறிது பெருங்காயத்தை போட்டு அவளை குடிக்க வைத்து, அவளுக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுத்த பின், அவளைப் படுக்க வைத்து, கட்டிலில் அமர்ந்தவன், அவள்‌ கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு மெதுவாக அமுக்கிவிட, அவனை முறைத்தபடியே,

ஏற்கனவே சோர்ந்து போயிருந்த த்வனி, இதமாக அவன் கால்களைப் பிடித்திவிட, படுத்தவுடனேயே உறங்கிவிட்டிருந்தாள்.


வருண் முகத்தில் சிரிப்புடன் எதிரில் அமர்ந்திருந்த ‌ஷாலினியையே பார்த்துக்கொண்டிருந்தான்.


"ஷாலு நீ நெஜமா சொல்ற?" என்றவன் குரலில் அப்டி ஒரு சந்தோசம்.


"ஆமா வருண். அவ கொழுப்பு... அண்ணன் தங்கச்சி உங்க ரெண்டு பேருக்கு நடுவுல, நீ எதுக்குக் கொரியர் சர்வீஸ்னு கேக்குற தெரியுமா… இனிமே அவளுக்காக நீங்க எது வாங்கினாலும், முக்கியம சாப்பிட எது வாங்கினாலும், அதை நீங்களே கொண்டு வந்து அவகிட்ட தருவீங்கலாம். என்னை நம்பி குடுக்க வேணாம்னு உங்க கிட்ட சொல்ல சொல்லி என்கிட்டயே சொல்ற தெரியுமா…" என்ற ஷாலினியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் வருண்.


"ஏய்‌ என்னப்பா இது. அவ உன்ற வருங்காலப் பொண்டாட்டிய கழுவி ஊத்தி இருக்கான்னு நான் ரொம்ப ஃபீலிங்கா சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு சிரிச்சுகிட்டு இருக்க… இல்ல தெரியாம தான் கேக்குறேன். அண்ணாச்சியும், உங்க ஆருயிர் தங்காச்சியும் என்ன பத்தி என்ன‌ தான் நெனச்சிட்டு இருக்கீங்க." என்று இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.


"ஏய் லூசு, அவ சும்மா உன்னைக் கலாய்க்க சொல்லி இருக்கா… அத போய் நீ சீரியஸா எடுத்துட்டு இருக்க"


"ஹலோ ஹலோ மிஸ்டர். ரெடிமேட் அண்ணா… கொஞ்சம் அடக்கிவாசிங்க… என் ஃப்ரண்ட் பத்தி நீங்க எனக்கே சொல்றீங்களா… உங்கள விட அவளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ம்க்கும்" என்று உதட்டை சுழுத்து ஒழுங்கு காட்ட, அவள் உதட்டில் விரல் கொண்டு சுண்டிய வருண்,


"அதான் தெரியுது இல்ல. அப்புறம் எதுக்கு இங்க வந்து இப்டி பொலம்பிட்டு இருக்க?"


"ம்ம்ம் வேண்டுதல். போப்பா நீயி… நான் சொன்னதைக் கேட்டு யாரது என் வருங்காலத்தை வார்றதுன்னு நீ வரிஞ்சி கட்டிக்கிட்டு சண்டைக்குப் போவன்னு பாத்த, நீ உன்ற தங்கோச்சிக்கு சப்போட்டா வித்துட்டு இருக்க..‌. போடா டேய். நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட" என்று சலித்துக் கொண்டவளை பார்த்து குறும்பாகச் சிரித்தான் வருண்.


"நான் எதெதெக்கு சரிபட்டு வருவேன்னு உனக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் நல்லா புரிய வைக்குறேன்" என்று கண்ணடிக்க, அதைக் கேட்ட‌ ஷாலினி கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தது.


"ஒரு வகையில நம்ம த்வனிக்கு தான் தேங்ஸ் சொல்லனும். அவ இல்லாட்டி நம்ம ரெண்டு பேரும்‌ பாத்திருக்கவே முடியாது இல்ல ஷாலு.


"ஆமா வருண், நான் கூட மொதல்ல பயந்தேன். அவளுக்குத் தான் உங்கள புடிக்கதே, எங்க நம்ம‌ லவ் பத்தி தெரிஞ்ச என்கிட்ட கோச்சிக்குவளோன்னு‌. பட் தேங்க் காட், அப்டி எதுவும் நடக்கல. நீங்க கூட த்வனி நம்ம லவ்க்கு ஓகோ சொல்லுவான்னு எக்ஸ்பெக்ட் பண்ணல தானா வருண்" என்று கேட்ட ஷாலினிக்கு இடவலமாகத் தலையாட்டி இல்லை என்றான் வருண்.


"நீ என்னை விரும்புறேன்னு தெரிஞ்ச... அவ மொதல்ல யோசிக்குறது. என்னை மேரேஜ் பண்ண நீ சந்தோஷமா இருப்பியான்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான். நான் உன்னை நல்லா பாத்துப்பேன்னு அவளுக்குத் தெரியும். சோ கண்டிப்பா நம்ம லவ்க்கு ஓகோ சொல்லுவான்னு எனக்குத் தெரியும். விக்ரம் லவ் உண்மைனு தெரிஞ்சு அவன் காதலையே அக்செப்ட் பண்ணவா த்வனி‌. சோ… அவ என்னை ரிஜெக்ட் பண்ண நோ சான்ஸ்" என்ற வருணை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஷாலினி.


"வாவ் வருண். நீ இப்ப சொன்னதையே தான் த்வனியும் சொன்ன தெரியுமா!! வருண் ஷாலுக்கு நல்ல மேட்ச். அவரை எனக்குக் காலேஜ்ல இருந்து தெரியும். ஷாலுக்கு வருண் பர்ஃபெக்ட் மேட்ச்னு சொன்னா" என்றவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.



விக்ரமும் வருணும் அப்போது தான் முக்கியமான மீட்டிங்கை முடித்து விட்டு வந்தனர்.


"தேங்க் காட் வருண்… நீ இந்தக் கம்பெனிலயே ஜாய்ன் பண்ணிட்ட. இந்த நேரத்தில் நீ‌ மட்டும் இல்லாட்டி எனக்கு ரொம்பக் கஷ்டமா போயிருக்கும். நீ இருக்கத் தெம்புல தான் நான் அந்த ராட்சிய சரிய கவனிக்க முடியுது. தோள் கொடுப்பான் தோழன்னு நீ நிருபிச்சிட்ட வருண்"


"ஹலோ பாஸ். ரொம்ப எல்லாம் பழமொழிய புழியாதீங்க. நான் ஒன்னு உனக்காகத் தோள குடுக்கவும் இல்ல, தோள உறிக்கவும் வர்ல. நான் என் தங்கச்சிக்காகத் தான் வந்தேன். சோ, இந்தச் சிட்டுவேஷன்னுக்கு மலை ஏறப் போனாலும் மச்சான் தயவு வேணும்னு சொல்லுவாங்களே… அந்த ப்ரூட் லாங்குவேஜ் தான் செட் ஆகும். அதை வேணும்னா சொல்லு" என்ற வருணை விக்ரமுக்கு மட்டும் பவர் இருந்திருந்தால் தான் பார்வையாலே தந்தூரி சிக்கன் மாதிரி சுட்டெடுத்திருப்பான்.


"டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா."


"ஆமா ஓவர் தான் அதுக்கு இப்ப என்னங்குற நீ. வேணாம்னா சொல்லு நான் இப்பவே ரிசைன் பண்ணிடுறேன்" என்று கால் மேல் கால் போட்டு நக்கலாகச் சிரிக்க, விக்ரம் அவனைச் செல்லமாக முறைத்தான்.


"எல்லாம் என் நேரக் கெரகம்டா… சரி… நானும் கேக்கணும்னு நெனச்சேன். எங்க உன் ஆளு அந்த டாக்டரம்மாவ கொஞ்ச நாளா இந்தப்பக்கம் ஆளையே காணும். நீ அந்த ராட்சசிக்கு வாங்கி வச்சிருக்கப் பொருளை வாங்கிட்டுப் போய், டெலிவரி பண்ண அடிக்கடி இங்க வருமே. இப்ப எல்லாம் அதிகம இங்க பாக்கமுடியல… என்ன உன்ற தங்கச்சிக்கு, இப்ப எல்லாம் நீ ஒன்னும் வாங்குறது இல்லயே, ஃபுல் ல உன் ஆளுக்குத் தான் போகுது போல…" என்று வம்புக்கு இழுத்தவன் மேல் அங்கிருந்த ஃபைல் லை தூக்கி அடித்த வருண்,


"வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங் மேன் … நான் ஏன் மேன் என் தங்கச்சி வாங்குறதை ஷாலினிகிட்ட குடுத்துக் குடுக்கச் சொல்லனும். நோ வே மேன். இப்ப எல்லாம் நேரா, நாட்டாமை டூ பங்காளி, பங்காளி டூ நாட்டாமை தான்" என்றான் கெத்தாக.


"எதே!!! இது எப்படா நடந்துச்சு?" என்று கேட்ட விக்ரமிடம் நடந்ததைச் சொன்னான் வருண்.


"ரொம்ப நல்லதாப் போச்சு வருண். உனக்குத் தான் தெரியுமே, அந்த ஜெகன் பத்தி. இப்ப அவளுக்காக நீ இருக்குறது, அவளுக்குப் பெரிய மாரல் சப்போட்டா இருக்கும். அதோட உங்க அம்மாக்கு தெரிஞ்ச‌ நாட்டு வைத்தியத்தை வச்சு அடிக்கடி அவளுக்குச் செஞ்ச தர்ர மருந்துக்கு, அவளோட ஹெல்த் டெவலப்மென்ட்ல பெரிய ரோல் இருக்கு தெரியுமா..." என்று தலையைக் கோதியவாறு,


"ம்ஹீம் எல்லா உறவும் நல்லபடிய அமஞ்ச அந்த ராட்சசிக்கு அண்ணன், புருஷனனுன்ற ரெண்டு உறவு மட்டும் தான் சரியா அமையாம போச்சு" என்ற விக்ரமை சட்டென நிமிர்ந்து பார்த்தான் வருண்.


"விக்ரம் நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும். கேக்கலாமா?"


"என்ன இது, பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு, சும்மா கேளுடா."


"உனக்கும் த்வனிக்கு நடுவுல இருக்க இந்த உறவுக்கு என்னடா‌ அர்த்தம். நோ… நெஜமாவே உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதாவது உறவுன்னு ஒன்னு இருக்கடா முதல்ல?" என்ற வருணை நிதானமாக ‌பார்த்த விக்ரம்,


"அவளுக்குப் புடிச்ச ஸ்வீட் எதுன்னு உனக்குத் தெரியுமா வருண்?" என்று‌ கேட்டவனைப் புரியாமல் பார்த்தான் வருண்‌


"டேய்… நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன பேசிட்டு இருக்க?"


"ப்ஸீஸ் வருண் சொல்லு தெரியுமா, தெரியாத?"


"ம்ம்ம் தெரியும் ரசகுல்லா தான் த்வனிக்கு ரொம்பப் புடிக்கும். அதான் ஷாலினி அடிக்கடி அவளே வீட்ல சுத்தமா செஞ்சு த்வனி கொண்டு போய்க் குடுப்ப. இப்ப அது எதுக்குடா?"


"ம்ம்ம் இப்ப நான் அவளுக்குப் புடிக்கும்னு அதை வாங்கிட்டு போய் அவ முன்னாடி வச்ச அவ என்ன பண்ணுவா"


"ம்ம்ம் என்ன பண்ணுவா… அப்டியே அத எடுத்து உன் தலையில கொட்டுவா… நீ அவள படுத்துனா பாட்டுக்கு வேற என்ன செய்வாளாம்…"


"கரெக்ட் வருண். அவ அதைத் தான் செய்வா, பட்… அதே நான் இது உன் வாயித்துல இருக்கப் பாப்பாக்கு நல்லது, நீ சாப்டு தான் ஆகணும்னு அவளுக்கு என் கையால ஊட்டிவிட்ட, அவ என்ன பண்ணுவானு?"


"என்ன பண்ணுவா, கம்முன்னு ரசகுல்லாவ நல்லா மெனு முழுங்குவா. அந்தப் பாப்பா ஒன்னு தானா உங்க ரெண்டு பேரையும் லிங்க் பண்ற‌ ஒரே பாயிண்ட்" என்ற வருண் முகம் சட்டென் மாற, திரும்பி விக்ரமை பார்த்தான்.


"இதுதான் வருண் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்க ரிலேஷன்ஷிப். அந்தக் குழந்தைக்கு அவ அம்மா, நான் அப்பா. பட், எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல" என்றவன் கண்களை அழுத்தி மூடித் திறந்து, 


"நாளைக்கு அவளுக்கு வீட்ல வளைகாப்பு. அம்மா, தங்கச்சிய கூட்டிட்டுச் சீக்கிரம் வந்துடு" என்றவன் தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்ப, போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.


"கூடிய சீக்கிரம் அவளுக்குப் புருஷன்ற‌ உறவும் நல்லாபடி தான் அமஞ்சிருக்குன்னு இந்த ஊரே சொல்லும்னு நான் நம்புறேன் விக்ரம்." என்ற வருண் அவன் நினைத்து நடக்க வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக்கொண்டான்.