நிஜம் 35

 





நிஜம் 35


அந்த அழகிய சின்ன கோயிலில் அமைதியாக வீற்றிருக்கும் அகிலம் ஆளும் அம்மனின் முகத்தையே பார்த்திருந்த, விக்ரம் காதுகளில் டாக்டர் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலித்தது.


"த்வனி கண்டிஷன் கொஞ்சம் கிரிட்டிக்கல்ல இருக்கு மிஸ்டர். விக்ரம். ஏற்கனவே அவ உடம்பு ரொம்ப வீக்கா இருந்தது. இப்ப கீழ விழுந்ததில் நிலைமை இன்னும் மோசமாகிடுச்சு… இப்ப இருக்க சூழ்நிலையில், என்ன வேணும்னாலும் நடக்கலாம். மேக்ஸிமம் நாங்க ரெண்டு உயிரையும் காப்பாத்த ட்ரை பண்றோம். பட்… மீதி எல்லாம் அந்த கடவுள் கையில" என்று டாக்டர் விக்ரம் நெஞ்சில் இடியை இறங்கிவிட்டு போக, விக்ரம் முழுவதும் நொறுங்கி விட்டான்.


"இன்னும் என்னை என்ன எல்லாம் செய்யனும்னு நீ நெச்சிட்டு இருக்க... அப்படி நான் என்ன பெரிய தப்பு செஞ்சிட்டேனு சொல்லும்மா. நான் உயிர நேசிச்சவளை என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட… அது பத்ததுன்னு இப்ப மறுபடியும் அவளையும், அவளை கருவ சுமக்குறவளையே சேர்த்து என்கிட்ட இருந்து பறிச்சிக்க பாக்குறா இல்ல... ஏம்மா எப்பவும் நான் தனிமரமா தான் நிக்கணுமா… அது தான் உனக்கு வேணுமா... பாவம்மா என் ரென்யா‌, அவளை நீ சந்தோஷமா வாழவும் விடால, சாகும் போதும் அவளுக்கு நிம்மதி இல்ல. இப்ப செத்த பிறக்கும் ஏம்மா அவளை அழ வைக்ற… சரி அவளை விடு..‌. அல்ப ஆயுசுல போறது தான், அவளுக்கு விதிச்ச தலையெழுத்துனு சொல்லி விட்றலாம்… ஆனா, உள்ள வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவுல துடிச்சிட்டு இருக்காளே ஒருத்தி… அவ என்னம்மா தப்பு பண்ண? அவளுக்கு ஏன் இந்த கதி? எல்லாரும் நல்ல இருக்கணும்னு தானாமா அவ நெனச்ச… அவளை வெறுத்த எனக்குக் கூட நல்லது தானா நெனச்ச… அவளுக்கு ஏன் இந்த நெலம?" என்றவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் கருணை பொங்கும் கண்களால் விக்ரமை பார்த்து அழகாய் சிரித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் அன்னை அவள்.


"என் த்வனிக்கு என்னை தவிர யாரும் இல்ல, நீதான் அவளை பாத்துக்கணும் சொன்னீயே ரென்யா… என்னால நீ சொன்னத சரிய செய்ய முடியாம போய்டுமோன்னு பயமா இருக்கு… இப்ப அவ இருக்க நிலமைய பாத்த எ… எனக்கு…" என்றவன் அழுத்தி இமைகளை மூடித் திறந்து, நிமிர்ந்து அம்மன் முகத்தை பார்த்து,



"நான் எனக்கு எதிர இருக்க உன்னன நம்பலம்மா… நான் என் ரென்யாவை நம்புறேன். அவ குடுத்த வாக்க நம்புறேன். அவ கடைசிய சொன்னது அவளோட த்வனிக்கு புள்ளைய பொறந்து காலம் முழுக்க அவ கூடவே இருப்பேன்னு ரென்யா, த்வனிக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கா… அவ செஞ்ச சத்தியத்தை கண்டிப்பா அவ காப்பாத்துவானு நான் நம்புறேன். அவ நல்லபடிய இந்த பூமிக்கு வருவா... காலம் முழுக்க எங்க ரெண்டு பேர் கூடவும் இருப்பா… அப்டி இல்லாம, நீ மறுபடியும் என் வாழ்க்கையில வெளயாட நெனச்சு அவங்க ரெண்டு பேரை‌ என்கிட்ட இருந்து பிரிச்ச… அவங்க ரெண்டு பேரும் போற இடத்துக்கே நானும் போய்டுவேன். அப்ப உன்னால என்ன செய்ய முடியும்னு நானும் பாக்குறேன்" என்று அவன் அன்னையிடம் சண்டை போட்டுக்கொண்டிருக்க, வருண் அவனை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் வாய்பொத்தி அழுது கொண்டிருந்தான்.


பலமணி நேரமாக விக்ரம் இருந்த இடத்தைவிட்டு நகராமல் சாமியை பார்த்தபடியே அமர்ந்திருக்க, மூச்சு வாங்க அங்கு ஒடி வந்தாள் ஆருஷி.


"அ‌… அண்ணா…" என்று அவள் அழைக்க, விக்ரம் அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. 


வருண் ஆரு அருகில் வந்தவன், "என்னம்மா? என்னாச்சு? த்வனிக்கு ஒன்னு இல்லயே!" என்று பதட்டமாக கேட்க, ஆரு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே,


"த்… த்வனிக்கு குட்டிப்பாப்பா பொறந்திருச்சு… கேர்ள் பேபி" என்று சந்தோஷமாக சொல்ல, வருண் எதிரில் தெரிந்த அம்மன் முகத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, "நன்றிமா… ரொம்ப நன்றி" என்றவன் விக்ரம் அருகில் உட்கார்ந்து அவனை தோளை உலுக்கி,


 "டேய் விக்ரம் உனக்கு பாப்பா பொறுத்திருக்குடா… லயா மறுபடியும் வந்துட்டா… உன்கிட்டயே வந்துட்டா, வாடா எழுந்துவா" என்று அவன் கையைப் பிடித்து இழுக்க, விக்ரம் மெதுவாக திரும்பி வருணை பார்த்தவன், நிமிர்ந்து ஆருவை பார்த்தான்.


"ஆமா அண்ணா உங்களுக்கு பொண்ணு பொறந்திருக்கு… எழுந்து வாங்க" என்று பரபரக்க,


"அ… அவ… எப்டி இருக்கா? அவளுக்கு ஒன்னு இல்லயே?"


"குழந்தைக்கு ஒன்னு இல்ல, நல்லா தான் இருக்கு ண்ணா" 


"இல்ல, அவ… அவ எப்டி இருக்க? அவளுக்கு ஒன்னு இல்லயே?" என்றவன் முகத்தில் எங்கு த்வனிக்கு எதுவும் ஆகி இருக்குமோ என்று அப்படி ஒரு பயம்.


"ஆரு… இவன் த்வனிய பத்தி கேக்றான் போல? த்வனிக்கு எப்டி இருக்கு?" என்றதும் ஆரு முகம் சட்டென இருண்டுவிட, விக்ரமுக்கு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது.


"ஆ… ஆரு… அவளுக்கு என்னாச்சு? நல்லாதான இருக்க? சொல்லு… அவளுக்கு ஒன்னு இல்லன்னு சொல்லு" என்று ஆரு முன் மண்டியிட்டு விக்ரம் கெஞ்ச, 


"அய்யோ அண்ணா… என்ன இது எந்திரிங்க… த்வனிக்கு

ஆப்ரேஷன் முடிஞ்சிடுச்சு… ஆனா...," என்று இழுக்க,


"என்ன? என்னச்சு? அவளுக்கு என்னச்சு?" என்று கத்தியபடி எழுந்த விக்ரம், ஆரு தோளை பிடித்து உலுக்க, அந்த நேரம் அவன் முகத்தை பார்த்த ஆரு பயந்தே விட்டாள்.



"டா… டாக்டர்ஸ் அவளுக்கு கொஞ்சம் சீரியஸ்னு தான் சொல்றாங்க. ஆனா, உயிருக்கு பெருசா எந்த ஆபத்தும் இல்லயாம், இன்னும் கொஞ்ச நாள் நம்ம எல்லாரும் அவளை ரொம்ப கேர் புல்ல பாத்துக்கிட்ட சீக்கிரமே அவ பழைய மாதிரி ஆகிடுவான்னு சொன்னாங்க" என்றதும் தான் விக்ரமுக்கு போன உயிர் திரும்பி வந்தது.


"அவ எப்டி இருந்தாலும் பரவாயில்ல… அவ எங்க கூட பேசக்கூட தேவையில்ல. அவ உயிரோட எங்க கூட, எங்க கண்முன்னால இருக்கணும். அதுவே எனக்கும் என் ரென்யாவுக்கும் போதும். சாகுற வரை என் கண்ணுக்குள் வச்சு நான் அவளை பாத்துக்குவேன்." என்றவன் தன் உயிரையும், அதை தந்தவளையும் பார்க்க ஓடினான்.


ஆஷா, ஆரு, ஷாலினியோடு நர்ஸ் உட்பட யாரையும் நெருங்க விடாமல் விக்ரமே த்வனி மற்றும் குழந்தையை கவனித்துக் கொண்டான். த்வனிக்கு மருந்து கொடுப்பதில் இருந்து, உணவு ஊட்டுவதோடு, அவள் உடலை துடைப்பதில் இருந்து, அவளுக்கு உடை மற்றிவிடுவது வரை விக்ரமே தான் செய்தான். 


முதலில் அவன் தொடுகை த்வனிக்கு அசௌகரியமாக இருந்தாலும் போகப்போக, விக்ரமின் செயலில், அவளுக்கு துளியும் கல்லமோ, காமமோ தெரியவில்லை. அவன் குழந்தையை எப்படி பார்த்தானோ அதே பார்வையில் தான் த்வனியையும் பார்த்தான். அவள் உடலை துடைக்கும் போது கூட அவன் கண்களில் எந்தவித மாற்றத்தையும் இதுவரை அவள் கண்டதில்லை. ஒரு பெண்ணின் அதுவும் அவன் மனைவி, அவனால் ஒரு குழந்தைக்கு தாயாக மாறி இருப்பவளின் ஆடையில்லாத உடல் கூட அவனை சிறிதும் சலனப் படுத்தவில்லை என்பதே த்வனிக்கு அவன் மீது பெரிய மரியாதையை வர வைத்தது.


கிட்டத்தட்ட ஒரு மாத ஹாஸ்பிடல் இருந்த த்வனி அன்று தான் வீடு திரும்பி இருந்தாள். 


த்வனி மெல்லிய சிரிப்போடு, அமைதியாக கட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்க, அவளை முறைத்தபடி ஒரு பக்கம் லாவண்யா ஜுஸ்சை கலக்கிக் கொண்டிருக்க, அவள் அருகில் குட்டி லயாவை கொஞ்சியபடி த்வனியை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான் கதிர்.


தற்செயலாக கதிர் த்வனிக்கு ஃபோன் செய்ய, ஆஷா த்வனி கிழே விழுந்த விஷயத்தை சொல்ல, அடுத்த ஃப்ளைடில் மனைவி குழந்தையுடன் இந்தியா கிளம்பி வந்துவிட்டான் கதிர். 


ஹாஸ்பிடலில் த்வனியை பார்த்த கதிர் வாய்விட்டு கதறிவிட, லாவண்யா அவள் இருந்த அறை வாசலிலேயே உட்கார்ந்து இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள். 


"உன்னை இந்த நெலயில் பாக்கத்தான், நாங்க வரோம்னு சொன்னப்பா எல்லாம் எங்கள வரவேணாம்னு சொன்னீய" என்று கதறிய‌ கதிரை சமாதானம் செய்ய முடியாது தவித்தனர் அங்கிருந்தவர்கள்.


விக்ரம் மெதுவாக கதிர் அருகில் வந்தவன், "அவளுக்கு யார் அழுதாலும் புடிக்காதுனு உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன். பிளீஸ் ஸ்டாப் கிரையிங்க. உங்கள பாக்க குட்டி லயா காத்துட்டு இருக்க… போங்க போய் குழந்தைய பாருங்க. அவ இன்னும் கொஞ்ச நாள்ல வீட்டுக்கு வந்துடுவா… அப்ப நீங்களும் உங்க லைஃப்பும் அவள‌ டீல் பண்ணிக்கோங்க. இப்ப ரெண்டு பேரும் அழதீங்க. ஆஸ் அ டாக்டர் உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லனு நெனைக்குறேன்." என்று அமைதியாக அதே சமயம் அழுத்தமாக சொன்ன விக்ரமை ஒரு நிமிடம் ஆழமாக பார்த்தான் கதிர். 


"டூ யூ திங்க் யூ டிசர்வ் ஹெர்?" என்ற கதிரை பார்த்து இடவலமாக தலையாட்டினான் விக்ரம். 


"அவளுக்கு நான் தகுதியான ஆள் இல்ல மிஸ்டர். டாக்டர்... பட், என்னோட லைஃப்க்குள்ள வர்ர தகுதி... ரென்யாக்கு அடுத்து உள்ள படுத்துட்டு இருக்காளே, இவ ஒருத்திக்கு மட்டும் தான் இருக்கு… அத என் ரென்யாவே சொல்லிட்டா…" என்றவன்,


 "போய் குழந்தைய பாருங்க… பாத்துட்டு அவ பாக்க எப்டி இருக்கான்னு என்கிட்ட வந்து சொல்லுங்க" என்றவனை கதிர் குழப்பமாக பார்த்தான்.


 வருண் கதிர் அருகில் வந்து, 

"கதிர் சார், விக்ரம் இன்னும் குழந்தைய பாக்கல. த்வனி கண்ணுமுழிச்சு பிறகு அவளோட சேந்து தான் பாப்பாவை பாப்பேன்னு சொல்லிட்டான்." என்றதும் கதிர் சட்டென திரும்பி விக்ரமை பார்க்க, அவன் கண்ணாடி வழியே த்வனியை பார்த்தபடி நின்றிருந்தான்.


"யூ டிசர்வ் ஹெர் விக்ரம்… லயா சரியா தான் சொல்லி இருக்க, என் த்வனிக்கு நீதான் பர்ஃபெக்ட் மேட்ச்' என்றவன் தோளில் கைவைத்து அழுத்திய வருண்,


 "யூ ஆர் டைட். தே ஆர் மேட் ஃபார் ஈச் அதர்… ஆனா, அதை அவங்க ரெண்டு பேரும் இன்னும் உணரல… வாங்க குழந்தைய பாக்க போலாம்" என்று கதிரையும் லாவண்யாவை குழந்தை இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.


அங்கு தொட்டியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த குட்டி லயாவை பார்த்த கதிர், லாவண்யாவின் கண்கள் லயாவின் நினைவில் நனைந்து. 


வருண் மூலம் நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்ட கதிருக்கு கூட விக்ரம் மேல் இருந்த கோபம் போய் அவன் மேல் மதிப்பு வந்தது. த்வனிக்கு குழந்தை பிறந்த விஷயம் தெரிந்த உடனே சென்னைக்கு வந்த லயாவின் தாய், தந்தைக்கு கூட விக்ரமுடன் வாழ தங்கள் மகளுக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணம் தான் தோன்றியது.


ஹாஸ்பிடலில் த்வனி கண்விழித்த‌ அடுத்த நொடி அவளை பார்க்க ஓடினான் விக்ரம்.


"உ… உனக்கு இப்ப எப்டி இருக்கு? நீ நல்லா இருக்க இல்ல? வலி எதுவும் இருக்க? டாக்டரை வரச் சொல்லவா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவனை வழக்கம் போல் முறைத்தாள் த்வனி.


'போடா டேய்… வேள்விக்கு பொறந்தவனே. சும்மா கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு... இவன் கேள்விக்கு பதில் சொல்ற‌ தெம்புலய நான் இருக்கேன். நானே அந்து நொந்து கெடக்கேன். வந்துட்டான் லூசுபய' என்று மனதில் அவனை திட்டியவள், 


"பா… பாப்பா எப்டி இருக்கு… நல்ல இருக்கு தானா? என்ன மாதிரி அழக இருக்க, இல்ல உன்ன மாதிரி சுமாரா இருக்க, முகம் லயா மாதிரி தானா இருக்கு, சிகப்ப இருக்க… இல்ல லயா மாதிரி மாநிறமா அழக இருக்க? சொல்லுடா பாப்பா எப்டி இருக்கு? என்று மூச்சு வாங்க கேட்டவளை விக்ரம் நிதானமாக பார்த்தான்.


"டேய்‌ கேட்டுட்டு இருக்கேன் இல்ல... சொல்லுடா, பாப்பா எப்டி இருக்கு?" என்று கேட்டவளுக்கு,

"நா இன்னு பாக்கல" என்ற விக்ரமின் வார்த்தையை கிரகிக்கவே சில நிமிடங்கள் பிடித்தது.


"ஏ..."


"ஏன்?"


"ஏன்டா?" என்ற த்வனியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய,


"முதல் முதல்ல லயா நம்ம பாக்கும்போது, நம்ம ரெண்டு பேரும் சேந்து ஒன்ன இருக்கணும் நெனச்சேன். அதுதானே அவளோட ஆசையும். அதான் நீ கண்ணு முழிச்சதும் உன்னோட சேந்து பாக்கலாம்னு" என்றவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் த்வனி.


"விக்ரம்" என்று ஆழமாக வந்த அவள் அழுத்தமான குரலில், அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, "நர்ஸ் கிட்ட சொல்லி பாப்பாவ தூக்கிட்டு வரச் சொல்லு" என்னும்போதே, 


"அதெல்லாம் வேணாம் த்வனி, நானே என் மருமகளை தூக்கிட்டு வந்துட்டேன்" என்று உற்சாகமாக சொன்னபடி உள்ளே வந்த ஷாலினியும், வருணும் குழந்தையை த்வனி, விக்ரம் இருவர் கையிலும் கொடுத்தனர்.


குழந்தையை கையில் வாங்கி, தன் மடியில் வைத்துக்கொண்ட, அடுத்த நொடி த்வனி நெஞ்சத்தில் அப்படி ஒரு நிம்மதி. அந்த நிம்மதி... கடவுளை கண்டவன் இதயத்தில் எழும் நிம்மதி. இனி இந்த உலகில் அடைய எதுவும் இல்லை என்ற போது வரும் நிம்மதி. அதில் அவள் இதயம் நிறைய அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர், அவள் கன்னம் தொட்டு கீழ் இறங்கி குழந்தையின் ‌பட்டு கன்னத்தில் பட்டு தெறிக்க, அது தன் பிஞ்சு கால்களை அசைத்து, தன் தாயின் நெஞ்சில் உதைக்க, அது த்வனிக்கு குழந்தை அழதே என்று அவளை மிரட்டுவது போல் இருக்க, கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டாள். 


த்வனி இப்படி இருக்க, விக்ரமோ வாயில் தன் விரலை வைக்க முயற்சி செய்துகொண்டிருந்த குழந்தையின் முகத்தையே இமைக்காமல் பார்த்தவன் இதயத்தில் ஏதோ ஒருவித அழுத்தம் தோன்ற, மெல்ல தன் விரல் கொண்டு குழந்தையின் கன்னத்தை தொட்டு பார்த்தவன் உணர்ச்சி மிகுதியில், "ரென்யா" என்று முனங்கியபடி அப்படியே மயங்கிச் சரிந்தான்.