நிஜம் 30
நிஜம் 30 ஷாலினி சொன்னதை கேட்ட த்வனிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. "ம்ம்ம் எப்டியே பிரச்சனை முடிஞ்ச சரி… இனி அந்த இம்சையோட தொல்லை இருக்காது இல்ல ஷாலு?" "இல்ல த்வனி, விக்ரம் விட்ட அறைல அவனுக்கு மேல ஒரு பல் அவுட்டு, அதுக்கு அப்புறம் நம்ம ஆரு விட்டாளே பாரு ஒரு அறை… ம்ம்ம்... அதுல அவன் கீழ் பல்லு ரெண்ட காணும்னா பாரேன்" என்று சிரிக்க, "இவ அடிச்சால ஷாலு? என்று த்வனி ஆர்வமாக கேட்க, "பின்ன அடிக்காம என்னடி பண்ணுவேன். அந்த ராஸ்கல் இது மாதிரி சூசைட் பண்ணீப்பேன்னு மிரட்டி என்னை மாதிரி நெறய பொண்ணுங்களை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணி லவ் பண்ணவச்சிருக்கான்டி. அவங்ககிட்ட இருந்து நெறய பணம், நகைனு புடிங்கி இருக்கான்… என்கிட்ட கூட அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி என்னோட செயின் பணம்னு நெறய ஆட்டய போட்டுட்டான் தெரியுமா… நேத்து விக்ரம் அண்ணா அவனை அடிச்சி கேக்கும் போது தான் தெரியுது, அந்த நாய்க்கு அம்மாவே இல்லயாம். அவங்க செத்து பத்து வருஷம் ஆகுதாம். அது தெரிஞ்சது வந்து எனக்கு வெறி… வூட்டேன் ஒரு அறை… பல்லு கழன்டு விழுந்துடுச்சு" என்றதும் முவரும் வாய்விட்டு சிரித்தனர். ...