நிஜம் 21
நிஜம் 21
த்வனியை பத்திரமாக அவள் ப்ளாட்டுக்கு அழைத்துச் சென்றனர், ஆஷாவும் சௌந்தர்யாவும்.
அவர்கள் வருவதற்கு முன்னேயே ஷாலினி, ஆருஷியும் ஒரு வாரத்திற்குத் தங்களுக்குத் தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு அங்கு வந்து சேர்த்திருந்தார்.
த்வனி எப்படியும் ஆஷாவுடன் செல்லமாட்டாள் என்று அறிந்த தோழிகள் இந்த நிலையில் த்வனியை தனியே விட விரும்பாமல், அவளுடன் இருக்க அவள் வீட்டுக்கு வந்து விட்டனர்.
த்வனியின் கர்ப்பம் பற்றிய விஷயம் கேள்விப்பட்ட ஜெகனுக்கு அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை. விக்ரம் த்வனி வாழ்க்கையே இங்குக் கேள்விக்குறியாக இருக்க, இவர்கள் சண்டைக்கு இடையில் இந்தக் குழந்தையின் வருகை, எப்படிபட்ட விளைவை ஏற்படுத்தும் என்று அவன் உட்பட அனைவருக்கும் புரியவில்லை. இருந்தாலும் தங்கை தாய்மை கொண்டதில் அவனுக்கும் சந்தோஷம் தான். கொஞ்ச நாள் ஆஷா மற்றும் விஷ்ணுவை த்வனியுடன் அவள் வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டான். ஜெகனுக்குத் தெரியும் த்வனி அவன் வீட்டுக்கு வரமாட்டாள் என்று அதற்காகவே ஆஷாவையும் குழந்தை விஷ்ணுவையும் அவளுடன் இருக்க வைத்தான்.
சௌந்தர்யா மனமே இல்லாமல் மருமகளை விட்டு மகனை பார்க்க வந்தவர், இன்னும் லயா புகைப்படத்தின் முன்பு உட்க்கார்ந்த படியே இருந்த மகனை பார்த்து உள்ளம் தணலில் இட்ட புழுவாகச் சுருண்டது.
மெதுவாக வருண் என்றழைக்க, விக்ரம் அறைக்கு வெளியே விக்ரமை கவனித்தபடி இருந்து வருண், சௌந்தர்யா அருகில் வந்தான்.
விக்ரமை பார்க்க ஹாஸ்பிடல் வந்த வருண், விக்ரம் இருந்த நிலையைப் பார்த்த பின் அவனை விட்டு செல்ல விரும்பாமல் தன் ஆபிஸில் மூன்று மாதங்களுக்குச் சிக் லீவ் எடுத்துக்கொண்டு விக்ரம் அருகிலேயே இருந்து அவனைக் கவனித்துக்கொண்டான்.
வருண் இருந்ததனால் தன் விக்ரம் இப்போது உயிரோடு இருக்கிறான் என்றே சொல்லாம். ஹாஸ்பிடலில் கண்விழித்த விக்ரம் ஒன்றிரண்டு முறை மீண்டும் தற்கொலைக்கு முயல, வருண் தான் அவனைக் காப்பாற்றி இருந்தான். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வருண் கழுகாக விக்ரம் கண் காணித்தான். அதனால் தான் விக்ரம் இப்போது உயிரோடு இருக்கிறான் என்று சொல்லாம். விக்ரமும் வருண் ஒருவனை மட்டுமே தன்னிடம் நெருங்க அனுமதித்தான். விக்ரம் லயா படத்தைப் பார்த்தபடியே மயங்கி சரியும் வேலையில் எல்லாம் அவன் தான் விக்ரமும் உணவை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடுவான்.
வருண் விக்ரமை திரும்பி பார்த்துவிட்டு சௌந்தர்யா அருகில் வந்தவன், "சொல்லுங்க ம்மா, என்ன விஷயம்?" என்று கேட்க,
"விக்ரம் இப்ப எப்படி இருக்கான் வருண்?" என்று கேட்டவர் குரலில் அப்படி ஒரு வலி.
"அப்படியே தாம்மா இருக்கான். எந்தச் சேஞ்சும் இல்ல" என்று விரக்தியாகப் பெருமூச்சு விட்டவன்,
"ஏம்மா அவனுக்கு இப்படி நடக்கணும். ஏன் லயாவும் த்வனியும் அவன் வாழ்க்கை இவ்ளோ மோசமா விளையாண்டாங்க? அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டான் விக்ரம்? அந்த இறக்கமே இல்லாத ராட்சசி த்வனியால தான் இவனுக்கு இந்த நெலம, அவ எல்லாம் நல்லாவே இருக்கமாட்டா" என்று வருண் தன் ஆதங்கத்தை வார்த்தையில் கொட்ட, "போதும் நிறுத்து வருண்" என்று கட்டளையாக வந்த சௌந்தர்யாவின் வார்த்தையில் அவரைத் திருப்பிப் பார்த்தான் வருண்.
"யாரை பத்தி என்ன பேசுறேன்னு யோச்சு பேசு வருண். அவ இந்தச் சௌந்தர்யா மருமக, விக்ரமோட பொண்டாட்டி, அதை மறந்துடாத…" என்றவறை வருண் புரியாமல் பார்த்தான்.
"ஏம்மா உங்க புள்ளையோட இந்த நிலைக்கு அவதான் காரணம்னு தெரிஞ்சு எப்படிமா உங்ளால அவளுக்குச் சப்போட் பண்ண முடியது. எப்படிமா? எனக்குச் சத்தியமா புரியல" என்று சலிப்பாகச் சொல்ல,
" ப்ளீஸ் வருண்,
எனக்காக, தயவுசெஞ்சு இன்னொரு முறை அவளைப் பத்தி தப்பா பேசாத... அதவும் இந்த நிலையில் இருக்கவளை உன் வாயால சபிக்காத வருண்" என்ற சௌந்தர்யாவின் சொல்லில் வருண் அவரைப் புரியாத பார்வை பார்த்தான்.
"த்வனி கர்ப்பமா இருக்க வருண். இந்த வீட்டு வாரிசு, விக்ரமோட உயிர் அவளுக்குள் வளந்துட்டு இருக்குடா, ப்ளீஸ்டா இன்னொரு தடவை அவ நல்லா இருக்க மாட்டான்னு சொல்லாதடா" என்று கை கூப்பி நிற்க, வருணுக்கு என்ன சொல்வதென்று ஒன்றும் புரியவில்லை.
"அவளைக் கொண்டதற்காகத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளத் துடிக்கும் விக்ரம், கட்டயப்படுத்திக் கற்பை களவாடியவன் கையில் கிடைத்தால் கொல்லும் வெறியில் திரியும் த்வனி, இந்த ஜோடிக்கு இடையில் உலகம் தெரியாத ஒரு சின்ன உயிர். நினைக்கவே கண்ணைக் கட்டியது வருணுக்கு.
"என்னம்மா சொல்றீங்க, இந்த விஷயம் இந்தப் பையலுக்குத் தெரிஞ்ச எப்படி ரியாக்ட் பண்ணுவான்னே தெரியலயே" என்று தலையை அழுத்தி கோதியவன், "அந்த ராட்சசி" என்றவன் சட்டென நாக்கை கடித்துக்கொண்டு, "த்வனி இதை எப்படிமா எடுத்துக்கிட்ட?" என்று சந்தேகமாகக் கேட்டான்.
"அவ ரொம்பச் சந்தோஷமா இருக்க வருண். ஷாலினி விஷயத்தைச் சொன்னதும் அவளுக்கு அப்படி ஒரு சந்தோசம், நிம்மதி. அவ முகம் அப்படியே ஜொலிக்க ஆரம்பிச்சிடுச்சு டா" என்று மகிழ்ச்சியாகச் சொல்ல,
வருணுக்குக் குழப்பமாக இருந்தது.
"சரிம்மா எது நடந்தாலும் அது நல்லத மட்டும் நடக்கட்டும். மீதி கடவுள் விரும்பும். இப்போதைக்கு இந்த விஷயம் விக்ரம்கு தெரிய வேணாம். கொஞ்ச நாள் போகட்டும்" என்றதுக்குச் சௌந்தர்யாவும் சரி என்றார்.
ஆனால் விதி, யாருக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று நினைத்தார்களோ அவனுக்கு அன்றைய நாளே த்வனி விஷயம் தெரிந்தது விதியின் ஆட்டமா, இல்லை கடவுளின் விளையாட்டா???
அன்று இரவு சௌந்தர்யா பரபரப்பாகச் சமையல் கட்டில் தன் மருமகளுக்காகப் பார்த்து பார்த்துப் பலகாரங்களைச் சமைத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் அங்கு வந்தார் அந்த வீட்டில் வேலை செய்யும் லட்சுமி.
லட்சுமிக்கு த்வனி மீது எப்போதும் தனி அக்கறையும் பாசமும் உண்டு என்று தெரிந்த சௌந்தர்யா, அவரிடம் த்வனி தாயாகப் போகும் விஷத்தை சொல்ல, அதுவே த்வனி வயிற்றில் வளரும் கருவுக்குக் காலனாக மாறக் காரணமானது.
"அம்மா நம்ம த்வனி பாப்பாக்கு, நான் செய்ற பால் பாயசம் ரொம்பப் புடிக்கும்மா, நான் காலையில் சீக்கிரம் பாயாசம் செஞ்சு வைக்குறேன். நீங்க நாளைக்கு அங்க போகும் போது த்வனி பாப்பாகிட்ட நான் குடுத்தேன்னு சொல்லி குடுத்துடுங்கம்மா" என்று ஆசையும், ஆர்வமாகவும் கேட்க, சௌந்தர்யா சிரித்துக்கொண்டே சரி என்று தலையாட்டினார். அப்போது அவர் அறியவில்லை அது பாயசம் அல்ல பாய்சன் என்று.
பத்துமணி போல் சௌந்தர்யா சமைத்து வைத்த அனைத்தையும் பேக் செய்து வைத்தவர், டைனிங் டேபிளில் லட்சுமி அம்மா செய்து வைத்த சூடான பாயசத்தையும் எடுத்துக் கொண்டு வருணிடம் சொல்லிவிட்டு த்வனி வீட்டுக்கு கிளம்பி இருந்தார்.
வருண், "ம்ம்ம் எல்லாம் நல்லபடிய நடக்கணும் கடவுளே" என்று கடவுளை வேண்டியபடியே குளிக்கச் சென்றவன், அரைமணி நேரத்தில் தயாராகி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன் பாதியிலே அசந்து நின்றுவிட்டான்.
குளித்து முடித்து, ப்ளூ ஷார்ட் அண்ட் பிளாக் பண்ட் போட்டு, தலைக்குக் குளித்தால் காற்றில் அலையாயும் தன் முடியை கோதியபடியே வருண் முன் வந்து நின்ற விக்ரமை பார்த்து வருண் திகைத்து நின்றான்.
"என்ன வருண் அப்படியே நின்னுட்ட, வா டிபன் சாப்டலாம். எனக்குப் பயங்கரமா பசிக்குது" என்ற விக்ரம் டைனிங் டேபிளில் போய் உட்கார, அவனை மிரட்சியுடன் பார்த்தபடியே அவனுக்கு முன்னிருந்த சேரில் உட்கார்ந்தான் வருண்.
லட்சுமி அம்மா வைத்த அனைத்து உணவையும் மிச்சம் வைக்காமல் உண்ட தன் நண்பனை பார்த்து வருணுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், இன்னொரு பக்கம் தீடிரென எப்படி இந்த மற்றும் என்று குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது.
கிட்டதட்ட ரெண்டு மாதங்களுக்குப் பிறகு வயிறு முட்ட உண்ட விக்ரம், ஹாலில் இருந்த சோஃபாவில் சென்று அமர, வருண் அவன் அருகில் வந்தவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஏன்டா வருண் அப்படிப் பாக்குற? என்று கேட்ட விக்ரம், "ஒஒஒ ரொம்ப வருஷம் கழிச்சு என்னைப் பாக்குற இல்ல, அதான் நான் எப்படி எல்லாம் மாறியிருக்கேன்னு இன்ச் பை இன் செக் பண்றபோல" என்று சொல்லி சிரித்தவன், " இங்க வந்து உக்காரு வருண் டைம் வர்ர வரை ரெண்டு பேரும் பேசிட்டு இருப்போம்" என்று உள்ளர்த்தம் மறைத்து பேச வருணுக்கு மூளை குழம்பியது.
"ம்ம்ம் சொல்லு வருண், நீ எப்படி இருக்க, வீட்ல அம்மா, சிஸ்டர் எல்லாம் எப்படி இருக்காங்க" என்று கேட்க, வருண் அவன் கேட்டதற்குப் பதில் சொல்ல கொஞ்ச நேரம் அவர்களின் பேச்சுத் தெரிந்தது.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து, வருண் ஃபோன் அடிக்க, சௌந்தர்யா தான் அழைத்திருந்தார்.
ஃபோனை அட்டென் செய்து காதில் வைத்த வருணுக்கு, சௌந்தர்யா சொன்ன செய்தியில் உடல் அதிர்ந்தது. மெதுவாகத் திரும்பி அவன் விக்ரமை பார்க்க, விக்ரம் முகத்தில் ஒரு குரூரப் புன்னகை படந்தது.
"விக்… விக்ரம்… நீயா இதைச் செஞ்ச? ஏன்டா? ஏன் இப்படி..." என்று வருண் தட்டுத்தடுமாறி கேட்க,
"நீ கேட்ட கேள்விக்குப் பதிலை சொல்லவேண்டிய இடத்தில், கேக்க வேண்டியவங்கள வச்சிட்டு சொல்றேன். வா கெளம்பு, நீயும் கூட வா" என்ற விக்ரம் வருணை அழைத்துக்கொண்டு எங்கே கிளம்பினான்.
த்வனி அந்தப் பெரிய சோஃபாவில் சோர்ந்து போய் விஷ்ணு மடியில் படுத்திருக்க, அவள் கண்களில் துளி துளியாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
"அத்த உனக்குச் சீக்கிரம் சரியாகிடும்" என்றபடியே அவளின் கண்களைத் தன் பிஞ்சு கரம் கொண்டு துடைத்துவிட்ட விஷ்ணு அவள் தலையை மெதுவாக அழுத்தி விட்டுக் கொண்டிருந்தான்.
ஆஷா, சௌந்தர்யா கண்கள் வெகுவாகக் கலங்கி இருக்க, ஷாலினி, ஆருஷி இருவரும் த்வனியையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.
"என்ன ஷாலு இது? இவளுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது. ஏன் கடவுள் இவளை இந்தப் பாடுபடுத்துறாரு, பாவம்டி இவ." என்ற ஆருஷிக்கு அதற்குமேல வார்த்தை வராமல் தொண்டை அடைத்துக்கொள்ள, ஷாலினி அவளைச் சமாதானம் செய்தாள்.
"இப்ப நம்ம கையில ஒன்னு இல்ல ஆரு. ஒருநாள் எல்லாம் சரியாகிடும்னு நம்பு, அதை விட்ட நமக்கு வேற வழி இல்ல" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கதவை யாரோ வேகமாகத் தட்டும் ஓசை கேட்க, அரை மயக்கத்தில் இருந்த த்வனி விழித்துக் கொண்டாள்.
ஆஷா சென்று கதவை திறக்க, அங்கு நின்று கொண்டிருந்தான் விக்ரம்.
விக்ரம் சொன்னதைக் கேட்ட பிறகு, அவனின் அரக்க செயலில் கோவத்தில் எல்லைக்கே சென்ற த்வனி, அங்கிருந்த பழங்கள் வெட்டும் கத்தியை எடுத்துக்காட்டு விக்ரம் மீது பாய்ந்தாள்.
