அர்ஜூன் & ஆத்யா 3
மெய் 3 இவ்வளவு நேரம் நடந்த கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த அர்ஜூன், "என்ன சித்தி உங்களுக்கு ஆத்யாவை ரொம்பப் பிடிக்கும் போல? இங்க ஒருத்தன் இருக்குறதை கூடக் கவனிக்காம அவளுக்குச் சப்போர்ட் பண்ணி ஆன்ட்டியை திட்டிட்டு இருக்கீங்க" என்ற அர்ஜூன் குரலை கேட்ட அபிராமி, "டேய் அர்ஜூன், நீ இங்க என்ன பண்ற?" என்றவர் அவன் கையில் இருந்த கட்டை பார்த்து, "டேய் என்னடா இது?? எப்டி அடிப்பட்டுச்சு?" என்று அவன் கையை பார்க்க, ஆத்யா சொன்ன பொய்யையே அர்ஜூன் அபிராமியிடம் சொல்ல, அபிராமி ஆத்யாவை சந்தேகமாக பார்க்க, அவள் கண்ணாலேயே "சாரி அத்த சாரி" என்று கெஞ்சினாள். "உனக்கு எதுவும் அடிபட்டுச்சா அத்துமா" என்று அபிராமிக்கு ஆத்யா "இல்லை" என்று தலையாட்டினாள். "ஏன்டா ?? அடிபட்டதும் நேர வீட்டுக்கு வரவேண்டியது தானே.? நான் டாக்டரை வர சொல்லியிருப்பேன் இல்ல?!" "இல்ல சித்தி, ஆத்யா தான் என் வீடு பக்கத்துல தான் இருக்கு, அங்க போய் மருந்து போட்டுக்கலாம்னு சொன்னா, அதோட ரத்தம் வேற வந்தது, நம்ம வீட்டுக்கு வரதுக்குள்ள நிறைய ரத்தம் போய்டு...