நிஜம் 13
இஷ்டமில்லா நிஜம் நீ
பகுதி 13
த்வனியும் லயாவும் தங்கள் வகுப்பை தேடிப்பிடித்து வந்து சேர்வதற்குள் அவர்களுக்கு நாக்குத் தள்ளிவிட்டது.
"அய்யோ சாமி இதுக்கு மேல முடியாது. முதல் நாளே கண்ணு கட்டுது. இதுக்கு மேல ஆகாதுடா சாமி" என்று ஒரு வகுப்பை கட்டடித்துவிட்டு கேன்டீன் வந்த தோழிகள் இருவரும், பிஸ்கட்டை டீயில் குளிப்பாட்டி, சுத்தம் செய்து தங்கள் தொண்டைக்குள் இறக்கியபடி ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தனர்.
த்வனி தன் அருகில் யாரோ மிக நெருக்கமாக நிற்பது போல் உணர்ந்தவள், நிமிர்ந்து பார்க்க. அங்கும் அவளை எரிப்பது போல் முறைத்து பார்த்தபடி நின்றிருந்தான் விக்ரம் தேவ்.
விக்ரம் பின்னால் த்வனியிடம் அடிவாங்கிய ரகு, "டேய் விக்ரம் இவதான்டா என்னை அடிச்சது" என்று த்வனியை கை காட்டினான்.
"ஏய் லயா! இங்க பாருடி பால்வாடி பாப்பா போய் ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கு. ஏன்டா சின்னப் பையா வீட்ல பெரியவாங்க யாரும் இல்லயா?" என்று கிண்டலடித்தவளை பார்த்து தீயாய் முறைத்தான் விக்ரம்.
"ஏன்டி? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா? ஒரு ஆம்பளைய கை நீட்டி அடிச்சிருப்ப…" என்ற விக்ரமை பார்த்து நக்கலாகச் சிரித்த த்வனி,
"டேய் லூசாடா நீ! கைய நீட்டாம எப்படிடா அடிக்க முடியும்."
"ஏய் என்ன திமிர?? யாரா பாத்து டா போட்டு பேசுற?" என்று வருண் எகுற,
"ம்ம்ம்… இவன் என்ன டி போட்டு பேச யார்கிட்ட பர்மிஷன் லெட்டர் வாங்கினானே… அவங்ககிட்ட நானும் டா போட பர்மிஷன் வாங்கிட்டடேன். அதவிடு இப்ப மொத்த மந்தையும் இங்க எதுக்கு வந்திருக்கீங்க? முதல் அத சொல்லுங்க" என்ற த்வனியை கழுத்தை நெறிக்கும் அளவு கோபம் வந்தது விக்ரமிற்கு, ஏனோ முதல் சந்திப்பிலேயே த்வனியை விக்ரமிற்குப் பிடிக்காமல் போய்விட்டது.
"ஏய் என்ன பத்தி உனக்குத் தெரியாது. ஒழுங்கா இவனை அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு பேசாம இங்கிருந்து ஓடிடு. பொண்ணுன்னு பாக்குறேன்… இல்ல..." என்றவன் முன் எழுந்து அவனை நேருக்கு நேர் பார்த்தபடி நின்ற த்வனி,
"இல்லாட்டி... என்னடா பண்ணுவா? இல்ல என்ன பண்ணுவேன்னு கேக்குறேன். உன்னைப் பத்தி எல்லாம் என்னால தெரிஞ்சிக்க முடியாது. பிகாஸ் எனக்கு மொக்க மேட்டருக்கு எல்லாம் டைம் வேஸ்ட் பண்ற பழக்கம் இல்லை. ஒரு வேளை உனக்கு நீ யாருன்னு மறந்து போய் இருந்த ஃபோன் போட்டு உங்கப்பா, அம்மாகிட்ட கேளு... சொல்லுவாங்க. அண்ட் இந்தப் பொறுக்கி கிட்ட மன்னிப்பு! அதுவும் நான். த்த்து… நானே காலையில இருந்து, வெறும் ஒரு அடியோட இவனைச் சும்மா விட்டு வந்துட்டோமேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். இவனை எங்க போய்த் தேடுறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன். அவனே வந்து சிக்கிட்டான். இவனா…" என்ற த்வனி ரகுவை அடிக்கப் போக, விக்ரம் த்வனியை அடிக்க வர, லயா என்ன செய்வதென்று புரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவள், த்வனியை பின்னால இருந்து கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, கேன்டீனில் இருந்த சில மாணவர்கள் விக்ரமையும், அவன் நண்பர்களைப் பிடித்துத் தடுத்துக் கொண்டிருந்தனர்.
"த்வனி ப்ளீஸ்டி பிரச்சனை எதும் வேணாம் வந்துடுடி, மறுபடியும் அப்பாவால தமக்கு இன்னொரு காலேஜ் தேடி அலைய முடியாதுடி ப்ளீஸ். ஃபார் டாட்ஸ் செக், அமைதியா இருடி" என்று லயா கெஞ்சிக் கொண்டிருக்க, த்வனி அடங்குவதாக இல்லை.
"நீ சும்மா இரு லயா. இந்த ஏமனோட வெஹிக்ள்'ஸ் எல்லாம் ரொம்ப ஓவரா தான் ஆடுதுங்க. இன்னைக்கு இதுங்க மண்டைய ஒடச்சி உள்ள இருக்க மூளைய வெளிய எடுத்து டஸ்பின்ல கடாசல என் பேரு த்வனி இல்ல" என்றவள் டேபிள் மீது கால் முட்டியை ஊன்றி எட்டி, கையை நீட்டி ரகுவின் சட்டையைப் பிடித்து இழுத்தவள், அவன் தலை முடியை இறுக்கி பிடித்து உலுக்கினாள்.
விக்ரம் த்வனியை நோக்கி வர, "டேய் விக்ரம், பிரின்சிபால் வரருடா" என்று வருண் எச்சரித்தான்.
"இந்த மனுஷனுக்கு என்ன சக்கரவியாதிய? எப்பாரு நடந்துட்டே இருக்காரு… அதும் தப்பான் நேரத்துல கரெக்டா வந்துடுறாரு." என்று பிரின்சிபாலை திட்டி த்வனியை முறைத்த லயா, "ஏய் கொஞ்சம் உன் திருவாய மூடிட்டு வாடி" என்றவள் த்வனி கையில் இருந்து ரகுவின் முடியை காப்பற்றிவிட்டு, அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப, த்வனி திரும்பி விக்ரமை பார்த்து முறைக்க, அவனும் போகும் த்வனியை அனல் தெறிக்கும் விழியால் எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு, அவன் நண்பர்களும் கூட அங்கிருந்து சென்றான்.
"ஹலோ… ஹலோ மிஸ்டர் நாட்டாமை, ஹலோ பஞ்சாயத்து தலைவரே கொஞ்சம் நில்லுங்க" என்று தன் பின்னால் கேட்ட குரலில் விக்ரம் திருப்பிப் பார்க்க, அவன் முன் வந்து மூச்சு வாங்க நின்றாள் லயா.
"என்னங்க இவ்ளோ ஸ்பீடா நடக்குறீங்க? நடக்குற இதே ஸ்பீடுல தான் சண்டையும் போடுறீங்க" என்றவளை புரியாமல் பார்த்த விக்ரம், "நீ யாரு?" என்று கேட்ட,
"அய்யோ" என்று லயா தலையில் கை வைத்தவள், "சரிய போச்சு போங்க… அது கூடத் தெரியாம தான் பஞ்சாயத்து தலைவர் ஆலமரத்தடிக்கு, ஐ மீன் கேண்டீன் வந்தீங்களா… சூப்பர்ங்க, ரொம்பச் சூப்பர். இப்ப கொஞ்சம் முன்ன நடந்துதே ஒரு சம்பவம், அதங்க நீங்க சண்ட செய்ய வந்தீங்களே, அந்தச் சண்ட சம்பவமே எனக்காகத் தான்" என்ற லயாவை குழப்பமாகப் பார்த்த விக்ரம். "நீ சொல்றது சுத்தமா எனக்குப் புரியல? எதுவ இருந்தாலும் தெளிவ சொல்லு" என்றான்.
லயா 'எதே' என முட்டை கண்ணை உருட்டி முழித்தவள், "கிழிஞ்சுது… ஏங்க? என்னங்க இது? என்ன நடந்துன்னு தெரியாமய, சண்டைக்கு வந்தீங்க? கடவுளே, ஓகே இப்ப தெரிஞ்சிக்கோங்க, உங்க ஃப்ரண்டை அடிச்சிட்டான்னு பின்னாடி நாய் தொறத்துனா மாதிரி த்வனிய அடிக்க ஓடி வந்தீங்களே... அதுக்கு முன்ன உங்க இந்தப் பொறுக்கி பிரண்டு என்ன பண்ணுச்சின்னு கேட்டீங்ள?" என்றதும் விக்ரம் சட்டென் திருப்பி ரகுவை பார்க்க,
"அது"
"அது வந்து விக்ரம். நான் சும்மா ஃபன் னுக்குத் தான்" என்று வார்த்தையை மென்று முழுக்கியவன், "அதுக்கு அவ என்னை அடிப்பாளா?" என்றவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்த விக்ரம், "டேய் ஒழுங்கு மரியாதை என்ன நடந்துன்னு சொல்லிடு, இல்ல…" என்று விக்ரம் கத்த,
"அதை நான் சொல்றேன். நான் பாட்டுக்கு என்னோட கிளாஸ் தேடிட்டு போய்ட்டு இருந்தேன். அப்ப இது என்ன கூப்டு உன் பேர் என்னன்னு கேட்டுச்சு, நானும் சொன்னேன். அதுக்கு இந்தப் பன்னி மாடு, என் பக்கத்துல வந்து, பாக்க சின்னப் பொண்ணு மாதிரி இருக்க? ஆன, காலேஜ் படிக்கிற?! உண்மையா உன் வயசு என்னன்னு தப்பு தப்ப பேசி என்ன தொட வந்துச்சு, அதான் த்வனி செவுல்லயே ஒன்னு விட்ட" என்றது தான் விக்ரம் கோவமாகத் திரும்பி பார்க்க அங்கு ஒருத்தனையும் காணவில்லை.
"ஹலோ அங்க என்ன பார்வை. நான் ஃப்ளாஷ்பேக் ஆரம்பிச்ச உடனேயே பயபுள்ளைங்க எல்லாம் தெறிச்சு ஓடிடுச்சிங்க" என்ற லயாவை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தான் விக்ரம்.
"லிஸன். அவங்க பண்ணது பெரிய தப்பு தான். ஐ அக்ரீ. பட் அட் தீ சேம் டைம் உன் ஃப்ரண்ட் பண்ணதும் சரியில்ல. என்ன பேச்சு பேசுறா அவ. சொல்லி வை அவகிட்ட, இன்னைக்குப் பிரின்சிபல் வந்தனால அவ தப்பிச்ச, இன்னொரு முறை அவ என் கண்ணுல பட்டன்னு வையேன்" என்றவன் முகம் இறுகியது.
"ஹலோ இதை நான் சொல்லணும். பிரின்சிபல் வந்து த்வனிய காப்பாத்தல, உங்க ஃப்ரண்டை தான் காப்பத்தி இருக்காரு. அவர் மட்டும் அந்த நேரம் அங்க வராம இருந்திருந்த, இன்னேரம் என்ன தொட வந்தவன் கைய ஒடச்சிட்டு, அவன் தலையில ஒரு முடி இல்லாம பிச்சு போட்டுட்டு தான் மறுவேல பாத்திருப்பா… அப்பறம் எங்கப்பா மறுபடியும் எங்களுக்கு வேற காலேஜ்ல சிட் தேடி அலைய வேண்டி இருந்திருக்கும். தேங் காட்" என்று மேலே நோக்கி கும்பிட்டவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம்.
பேசும் போது தன் பெரிய கண்களை உருட்டி, பிஞ்சு விரல்களை அவன் முகத்திற்கு முன் ஆட்டி ஆட்டி அவள் பேசும்போது, உள்ளே இருந்த விக்ரமின் மனமும் லேசாக ஆட்டம் கண்டது. கோபமாகப் பேசும்போது குவியும் அவள் ரோஸ் நிற உதடுகளோடு, அந்தக் கோவத்தில் அவள் முறைக்கும் போது அவள் கொழு கொழு கன்னத்தில் விழும் குழியில் விக்ரம் இதயம் விழுந்து தவித்தது.
"சரி நான் கெளம்புறேன். ஹான்… அப்புறம் இப்ப ஓடிப் போச்சே உங்க நட்பு, அதுகிட்ட சொல்லி வைங்க, கொஞ்ச நாள் த்வனி கண்ணுல படாம இருடான்னு. சரியா. ஓகே டாடா" என்றவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, ஆடவன் அவனின் ஆழப்பார்வையில் மங்கை அவளின் மனதும் காற்றில் ஆடும் கொடியாகச் சற்று ஆடித்தான் போனது.
"நான் போறேன்" என்று மெல்லிய குரலில் சொன்னவள் அங்கிருந்து நகர, விக்ரம் சுய உணர்வுக்கு வந்தவன், "ஓய் குட்டி பொண்ணு உன் பேர் என்ன? என்று கத்தி கேட்க,
லயா திரும்பி விக்ரமை பார்த்து இடுப்பில் கைவைத்து அவனைச் செல்லமாக முறைத்தவள், "நான் ஒன்னு குட்டி பொண்ணு இல்ல. அதைத் தெரிஞ்சுக்கோங்க ஃபர்ஸ்ட்." என்றவளை பார்த்துச் சத்தமாகச் சிரித்த விக்ரம், "சரிங்க மேடம். தெரிஞ்சுக்கிட்டேன். இப்பவாது உங்க பேரை சொல்லுங்க"
"ம்ம்ம் அது... குட் பாய். என் பேரு லயா… தீ கிரேட் லாரண்யா." என்று இல்லாத கலரை தூக்கிவிட்டுக் கொண்டவள், "தங்க திருநாமம் என்னவோ?" என்று குறும்பாகக் கேட்க,
அவனும் அவள் ஸ்டைலிலேயே, "தேவ்… விக்ரம் தேவ்" என்றான்.
"ஓகே விக்ரம் தேவ். டாடா நான் போரேன்" என்றவள் வந்த வழியே திரும்பி நடக்க, அவள் எண்ணம் மட்டும் விக்ரமை விட்டு நகராமல் நின்றது.
"விக்ரம் தேவ்… ம்ஹூம் இல்ல... தேவ். ம்ம்ம் இது நல்லா இருக்கு" என்ற லயா, தேவ்வை எண்ணத்தில் இருத்திக்கொள்ள,
"லாரண்யா… ரென்யா" என்று அவள் பெயருக்கு கூட வலிக்காமல் உச்சரித்துப் பார்த்தவன், அவளைத் தான் இதயத்தில் நிரப்பிக்கொண்டான்.
இங்கு வீட்டில், "ஸ்டாப் இட் லயா. தட்ஸ் எனாஃப்" என்று கத்திய த்வனி லயாவை தீயாக முறைத்துக் கொண்டிருக்க, லயா முகம் வாடி நின்றாள்.
