நிஜம் 11

 






இஷ்டமில்லா நிஜம் நீ 

                 பகுதி 11




த்வனியை பார்த்துவிட்டு வெளியே வந்தவன் பின் வேகமாக ஓடிவந்த ஷாலினி, அது ஹாஸ்பிடல் என்பதால் அதிகம் சத்தமில்லாமல், "ஹலோ நில்லுங்க… நில்லுங்க" என்று கத்திக்கொண்டே வர, அது அவன் காதில் விழவில்லை போல, அவன் அதே வேகத்தோடு நடக்க, ஷாலினி கடுப்பில் "டேய் செவுட்டு முண்டம் நில்லுடா" என்று கொஞ்சம் சத்தமாகக் கத்திவிட, அவன் கால்களில் சடன் பிரேக் போட்டு நின்றதியவன், திரும்பி பார்த்து அங்கு அவனைத் தவிர யாரும் இல்லாததால் அவள் தன்னைத் தான் அழைத்தாள் என்பது தெரிந்தது, "ஏய் இப்ப நீ என்ன சொன்ன?" என்று முறைக்க, வேகமாக ஓடி வந்ததால் ஷாலினி அவன் முன் கைகாட்டி, "வெய்ட்" என்றபடி மூச்சு வாங்க நின்றவளை அவன் முளைத்துக் கொண்டிருந்தான்.


"ஏய்... உனக்கென்ன காது ஆவுட்டா என்ன? எத்தன தடவ உன்ன கூப்புறது?" என்று அவனை அவள் ஒருமையில் பேச, அவனும் அவளை ஏற இறங்க பார்த்தவன், "யாரு இவ…? என்ன திட்டுனதுக்குச் சாரி கூடக் கேக்காம… மறுபடியும் திட்டிடிருக்க? லூசா இவ...? ஒரு வேலை இது மெண்டல் ஹாஸ்பிடல?" என்று நினைத்தவன், "ஹலோ யார் நீ? நீ எதுக்கு என்னைக் கூப்டனும்? நீ கூப்ட நா ஏன் நிக்கணும்" என்று அவளை முறைக்க, "நிக்கணும். நின்றுதான் ஆகணும். பிகாஸ் எனக்கு உன்கிட்ட சில கொஸ்டின் கேக்கணும். அதுக்கு நீ பதில் சொல்ல… இல்ல இல்ல உண்மை சொல்லணும்." என்றவளை அவன் புரியாமல் பார்த்தான்.


"நா த்வனியோட ஃப்ரண்ட்" என்று ஷாலினி சொன்னது தான். அவன் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடிக்க, "ஏய்… நீ யாரா இருந்த எனக்கென்ன? அவயெல்லாம் ஒரு ஆளு… அந்த வெஷப்பூச்சிக்கு நீ ஒரு ஃப்ரண்டு. எனக்கு அவளையும் தெரியாது. உன்னையும் தெரியாது. போடி" என்று எறிந்து விழுந்தவன் அங்கிருந்து நகர, "உங்க கிட்ட ஃபோன்ல பேசினது நா தான். விக்ரம்கு பிளட் வேணும்னு கால் பண்ணேனே" என்றவளை புரியாமல் பார்த்தவன். "அப்ப நீ?" என்று கேட்க.


"நா ஷாலினி... டாக்டர். ஷாலினி. இந்த ஹாஸ்பிடல்ல தான் ஒர்க் பண்றேன்."


"ம்ம்ம்… ஓகே டாக்டர். ஷாலினி. இப்ப உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு என்னை இவ்ளோ மரியாதைய கூப்டிங்க?"


"நீங்க த்வனிகிட்ட பேசினதை நான் கேட்டேன்." என்றவளை அவன் முறைக்க, "ஹலோ நா ஒட்டெல்லாம் ஒன்னு கேக்கல, நா சும்மா என் போக்குல போகும் போது, நீங்க பேசினது அது வாக்குல வந்து என் காதுல விழுந்துச்சு" என்று திருட்டு முழி முழித்தபடி அவள் சொன்ன பதிலில் லேசாகச் சிரித்தவன், "சரி இப்ப உங்களுக்கு என்ன வேணும் டாக்டர்.?"


"எனக்கு த்வனி, விக்ரம் ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன பிராப்ளம்னு தெரியணும். ரெண்டு பேரும் ஏன் இப்டி இருக்காங்க? அப்டி என்ன தான் நடந்துச்சு.? இங்க யாருக்கும் எதுவும் தெரியல. ஆஷா அண்ணிக்கு கூடத் தெரியல, ஜெகனுக்கு" என்று அவள் ஆரம்பிக்க. இருவரும் ஒரே நேரத்தில் "சிம்பலி வேஸ்ட் நோ கமெண்ட்ஸ்" என்று சொல்ல, இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.


"இதுலயே தெரியுது. உங்களுக்கு த்வனி பத்தி நல்லா தெரியும்னு. ப்ளீஸ் சொல்லுங்களேன். அவங்க ரெண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சனை?" என்ற ஷாலினி அவன் முகத்தையே பார்த்து நின்றாள்.


"அத தெரிஞ்சிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க டாக்டர்"


"என்ன கேள்வி இது‌? இது தான் ப்ராப்ளம்னு தெரிஞ்சிட்ட அதுக்குச் சொல்யூஷன் தேடி, ப்ராப்ளத்தைச் சால்வ் பண்ணிட வேண்டியது தானே. அப்றம் ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்கக் கோவம் கொறஞ்சிடும். என் ஃப்ரண்ட் லைஃப் சரியாகிடும்." எனறவளை அவன் ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்க்க… அந்தப் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவள். "சரி சரி… த்வனியோட சேத்து விக்ரம் லைஃப் கூடச் சரியாகிடும். அவர் நல்லா இருந்த நீங்களும் ஹாப்பித் தானே… என்ன நா சொல்றது கரெக்ட் தானா. சூப்பர் ப்ளான் இல்ல?? " என்று ஷாலினி சிரித்துக்கொண்டே தோளை குலுக்க, அவளைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தவன், " இட்ஸ் நாட் தட் ஈசி மிஸ். ஷாலினி. பிகாஸ் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குறது கோவம் இல்ல. அது கொறஞ்சு சமாதானமா போறதுக்கு. அது வெறுப்பு. அடி மனசுல இருந்து ஒருத்தரை ஒருத்தர் அடியோட வெறுக்குறாங் ரெண்டு பேரும். நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இங்க நடக்கச் சான்ஸ்ஸே இல்ல. ஏன்னா... கோவம் மாறும். ஆனா, வெறுப்பு நெவர்."


"ஏன்? ஏன்?? விக்ரம் ஏன் த்வனிய‌ இவ்ளோ வெறுக்குறாரு? இவ்ளோ அவள புடிக்காதவர் எதுக்கு அவள கார்னர் பண்ணி மேரேஜ் செய்யணும். இவரால எல்லாருக்கும் எவ்ளோ கஷ்டம்" என்று எரிச்சல் பட. "ஏய் நிறுத்து‌… என்னமோ எல்லாம் விக்ரம் தப்பு மாதிரி பேசிட்டிருக்க நீ... ஏன் உள்ள இருக்காளே உன் அருமை ஃப்ரண்ட் அவகிட்ட கேக்க வேண்டியது தானா, ஏன் விக்ரமை இவ்ளோ வெறுக்குறேன்னு. ஏன் அவன் வாழ்க்கைய நாசம் பண்ணேன்னு. ஏன் விக்ரம் மனச ஓடச்சேன்னு?..." என்று அவனும் கத்த‌,


"ஹலோ... த்வனி அப்டி பட்டவ இல்ல‌. அவள பத்தி தப்ப பேசாதீங்க."


"ஓஓஓ.‌‌.. அப்ப உன் ஃப்ரண்ட் நல்லவ, என் ஃப்ரண்ட் விக்ரம் மட்டும் கெட்டவன். அப்டி தானா.?"


"ஆமா அப்டித்தான். த்வனிய எனக்குச் சின்ன வயசுல இருந்து தெரியும். ஷி இஸ் எ ஜெம்."


"ஓஓஓ அப்டியா டாக்டர் மேடம்... சரி நாளைக்கே த்வனி மேல தான் தப்பு. விக்ரம் எந்தத் தப்பும் செய்யல… எல்லாத் தப்பும் த்வனி தான் செஞ்சான்னு தெரிஞ்ச நீங்க என்ன பண்ணுவீங்கலாம்.?? த்வனிய விட்டு விக்ரம்கு சப்போட் பண்ணுவீங்களா??" என்றதற்கு வேகமாக இல்லை என்று மறுப்பாகத் தலையை ஆட்டியவள், "அவ தப்பு பண்ண மாட்டா… இன்கேஸ்... பை சான்ஸ்... அவ மேலயே தப்பு இருந்தாலும் நா கடைசி வரைக்கும் அவளுக்குத் தான் சப்போட் பண்ணுவேன். பிகாஸ் ஷீ இஸ் மை ஃப்ரண்ட்" என்று சொல்ல, அவன் ஷாலினியை இமைக்காமல் பார்த்து நின்றான்.


"ம்ம்ம்... அந்த ராட்சசிக்கு மட்டும் எப்டி தான் இப்டி பட்ட ஃப்ரண்ஸ் கிடைக்குதோ… இந்த வகையில ஷீ இஸ் வெரி லக்கி" என்று நினைத்தவன், "லிசன் ஷாலு. அவங்க பிரச்சனை என்னன்னு நா சொன்னாலும் உன்னால ஒன்னு செய்ய முடியாது. நீயென்ன!! யார் நெனச்சாலும் ஒன்னு செய்யமுடியாது. இன்கிளுடிங் காட். சோ நீ உன்ன டைம். பிரைன்…" என்றவன் சற்று நிறுத்தி, "அது இருக்க இல்லயான்னு தெரியல, இன்கேஸ் இருந்த அதையும் வேஸ்ட் பண்ணாத!!!" என்றவனைத் தீயாக முறைத்தவள், "ஹலோ மிஸ்டர்." என்று அவள் அவனைத் திட்ட ஆரம்பிக்கும் முன், "வருண். மை நேம் இஸ் வருண்." என்றவன், "பை ஷாலு. டே கேர் ஆஃப் மை ஃப்ரண்ட்" என்றவன் அவளைப் பார்த்து அழகாய் சிரித்துவிட்டு செல்ல… போகும் அவனையே கண்களைச் சுருக்கி கோவமாகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் அவன் அவளை "ஷாலு" என்று அழைத்தது நினைவு வர, "அடிங்கு... இவனுக்கு எவ்ளோ கொலஸ்டிரால் இருந்த என்னைச் செல்லமா கூப்டுட்டு போவான். இதுல இவன் ஃப்ரண்டை நா பாத்துக்கணுமாம்‌. இன்னும் நா அந்தப் பிரண்டையைத் துவையல் ஆக்காம விட்டிருக்கனேன்னு சந்தோஷப்படுடா வெண்ணா." என்று அவனைத் திட்டிக்கொண்டே சென்றாள்.


இரண்டு நாட்கள் கழித்து த்வனியை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய, ஆஷா அவள் மருந்துகளை எடுத்துவைத்து கொண்டிருதவள், "த்வனி நா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன். டைமாச்சுக் கெளம்பு" என்க, "ஆஷு நா என்னோட ஃபிளாட்க்கு போறேன்" என்றவளிடம் ஆஷா ஏதோ பேச வாயெடுக்க, "ப்ளீஸ் அண்ணி. ஐ வாண்ட் டு பி அலோன் பார் சம் டைம். ப்ளீஸ்" என்றவள் குரலில் வலியை உணர்ந்த ஆஷாவால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.


த்வனியை அழைத்துக்கொண்டு ஆஷா, ஷாலினி, ஆருஷி த்வனியின் ஃபிளாட்க்கு வந்தனர். த்வனி அவள் சொந்த சம்பாத்தியத்தில் முதல் முதலில் வாங்கிய வீடு அது‌. கடந்த சில வருடங்களாக அவள் அங்குத் தான் தனியாக இருந்தாள். அவளுக்குத் திருமண ஏற்பாடு நடக்கும் வேலை அவளை வம்படியாகத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டிருந்தாள் ஆஷா. ஒரு வருடம் பூட்டிக்கிடந்த வீடு என்று சொல்லமுடியாதபடி த்வனி ஆள் வைத்து அந்த வீட்டினை பராமரித்திருந்தாள்.


த்வனி வீட்டுக்குள் நுழைய, அங்கு எங்குப் பார்த்தாலும் அவளும் அவள் தோழியும் இருக்கும் புகைப்படங்களாக இருக்க, அவள் வீட்டு ஹாலில் மாட்டி இருந்த பெரிய ஃபோட்டோவின் முன் போய் நின்றவள். மனது முழுவதும் தீயிட்ட சிதையாய் பற்றி எரிந்தது.


"ஏன்டி? ஏன் எனக்கு மட்டும் இப்டி நடக்குது.? எந்தத் தப்புக்குடி எனக்கு இப்டி ஒரு தண்டனை. அப்டி நா என்னடி பாவம் பண்ணேன். வாழ்க்கையில் ஆசப்பட்ட எல்லாத்தையும் இழந்தேன். நிம்மதி, சந்தோஷம், சிரிப்புன்னு எல்லாத்தையும் தொலச்சிட்டேன். அது போதாதுன்னா இப்ப இப்டி... எ… என்… என்னையே அவன்கிட்ட" என்றவள் இதயத்தில் அன்றைய நாளின் நினைவுகள் நெஞ்சில் இடியாய் இறங்க, இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர், அவள் கண்களில் மழையாகப் பொழியத் தொடங்க, முகத்தில் அடித்துக்கொண்டு கதறி அழுதவளை ஷாலினியும், ஆருவும் தாங்கிப்பிடிக்க, ஆஷா வந்து அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.


"த்வனி ஒன்னு இல்லடா, ஒன்னு இல்ல. எல்லாம் சரியாகிடும். எல்லாம் மாறிடும். அண்ணி உன் பாக்கதுலயே தான் இருக்கேன். நீ அழாதடா, அழாத என்று அவள் கண்களைத் துடைத்து விட, "இல்ல… இல்ல அண்ணி. எதுவும் சரியாகது. எதுவும் மாறாது. யாராலையும் எதையும் மாத்த முடியாது. முடியாது அண்ணி." என்று ஆஷாவை இறுக்கி அணைத்தவள், "ஏன் லயா, ஏன் எனக்கு இப்டி நடந்துச்சு. வொய் லயா? ஐ நீட் யூ லயா‌‌. ஐ நீட் யூ வெரி பேட்லி. நீ எப்ப வருவ? " என்றபடியே மயங்கி சரிந்தாள்.


(விதியின் விளையாட்டு எப்போது

முடியும் தெரியாதே...

விடியும் திசை என்ன இப்போது

அதுவும் தெரியாதே...

நாளை எது வாழ்க்கை

அன்பே நீ சொல்லி நடப்பாயோ

பாசம் தாளாமல் அங்கேயும்

உள்ளம் துடிப்பாயோ...)


ஆஷா, ஷாலினி, ஆருஷி மூவரும் ஹாலில் அமர்ந்திருக்க, "யாரு அண்ணி இந்த லயா.? அவ்ளோ பெரிய இன்சீடென்ட் நடந்து ஹாஸ்பிடல்ல நம்ம எல்லாரும் கதறி அழும்போது கூடக் கல்லு மாதிரி இருந்த த்வனி… இந்த ஃபோட்டோவை பாத்ததும் இப்டி மொத்தமா ஒடஞ்சு போய்ட்ட. யாரு அண்ணி இந்தப் பொண்ணு.? எங்க பாரு த்வனியும் இந்தப் பொண்ணும் சேந்திருக்க ஃபோட்டோஸ் தான் இருக்கு. யாரு இந்த லயா?"


"இந்தப் பொண்ணு த்வனியோட ஃப்ரண்ட் ஆரு. ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரை இவங்க ஒன்னா தான் படிச்சங்கலாம். த்வனிக்கு இந்தப் பொண்ணுன்னா ரொம்ப உயிரு."


"ம்ம்ம்… இப்ப இந்த லயா எங்க இருக்காங்க‌ அண்ணி. அவங்க கண்டாக்ட் நம்பர் இருந்த தாங்களேன். அவங்க இங்க வந்த த்வனிக்கு ஒரு மாரல் சப்போட்டா இருக்கும்."


"அந்தப் பொண்ணு இந்தியால இல்ல ஷாலு. அவளுக்குக் கல்யாணமாகி இப்ப யூ.எஸ் ல அவ ஹஸ்பெண்ட் கூட இருக்கா. த்வனி ஃபோன்ல அந்தப் பொண்ணு நம்பர் இருக்கும். த்வனி வருஷத்துக்கு ஒரு முறை யூ.எஸ் போய் ஒரு வாரம் இந்தப் பொண்ணு கூட இருந்துட்டு வருவா. "


"ம்ம்ம்... சரி அண்ணி. அந்தப் பொண்ணை இங்க வர வைக்க டிரை பண்ணுவோம். இன் தீ மீன் டைம். த்வனி, விக்ரம் நடுவுல என்ன பிரச்சனைனு கண்டு புடிப்போம்"


"அது எப்டி ஷாலு முடியும். த்வனி வாயத் தொறக்க மாட்ட. விக்ரம், ம்ம்ம்... சொல்லவே வேணாம். அப்றம் எப்டிடி"


"முடியும் ஆரு. ஒருத்தனால முடியும். அவன் நெனச்ச நடந்ததை நமக்குச் சொல்ல முடியும்."


"அது யாரு ஷாலு?" என்று ஆஷா ஆர்வமாகக் கேட்க‌.


"வருண்" என்றாள் தீர்க்கமான குரலில்.