நிஜம் 7








இஷ்டமில்லா நிஜம்‌ நீ‌

பகுதி 7


மூன்று நாட்கள் அமைதியாக கழிய, விக்ரமுக்கு த்வனியின் டென்ஷன் நிறைந்த வாடிய முகம் அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.


  

அன்று காலை டைனிங் டேபிளில் சௌந்தர்யாவுடன் அமர்ந்து அமைதியாக காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்தவள் எதிரில் வந்து அமர்ந்த விக்ரம். "ம்க்கும்" என்று தொண்டையை செருமியவன். "யாரோ இன்னு மூனு நாளா அந்த கான்ட்ராக்ட் என் கைக்கு வரும்னு சவால் விட்டாங்களே?? உங்களுக்கு ஞாபகம் இருக்க?" என்று சௌந்தர்யாவிடம் கேட்டவன். "உன்னால ஒன்னு கிழிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்டி." என்று நினைத்தவன் பார்வை முழுவதும் த்வனி மீதே இருக்க… த்வனி ஒரு நிமிடம் திரும்பி விக்ரமை மேலிருந்து கீழாக அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள். அடுத்த நிமிடம் தட்டில் இருந்த வடையை காலி செய்துவிட்டு, "ஆன்ட்டி இன்னைக்கு லட்சுமி அம்மா சமையல் சூப்பர். அதுவும் மெதுவடை செம்ம.‌ இதோட ரெண்டாவது வடை உள்ள போகுது" என்றவள். "லட்சுமிம்மா நீங்க தினமும் இப்டியே சமச்சிட்டு இருந்தீங்க‌. இனிமே நா ஆபீஸ்கு போக என்னோட பைக் சரிப்படாது. லாரி தான் வாங்கணும்" என்று சொல்லி சிரிக்க. அவள் சிரிப்பு சமையல்காரி லட்சுமியம்மா மனதில் நிறைவை கொடுக்க‌, அந்த சிரிப்பை பார்த்து உள்ளுக்குள் கருவிக்கொண்டிருந்தான் விக்ரம். 



"ம்ம்ம்… ஆமா லட்சுமி இனிமே மூனு வேளையும் இப்டியே சமச்சு போடுங்க. இவ வீட்ல உக்காந்துட்டு நல்லா வயிரு முட்ட தின்னட்டும். இனி மேடமோட வேலையே அதுதான். இனி ஆபீஸ் போக வேண்டிய அவசியம் இருக்காது" என்றவன் த்வனியை பார்வையால் எரிக்க… த்வனி எதையும் கண்டுகொள்ளாமல் வடையிலேயே குறியாக இருக்க, விக்ரம் முகம் கடுகடுவென மாறியது… 


அந்த நேரம் அவன் ஃபோன் மணி அடிக்க. ஃபோனை அட்டென் செய்து அந்த பக்கம் சொன்ன செய்தியை கேட்டவன் முகம் இறுக ஆரம்பிக்க… த்வனி அவன் முக மற்றத்தை பார்த்து இதழ் சுழித்து சிரித்து தட்டிலேயே கை கழுவி எழுந்தவள். "ஆன்ட்டி நேந்து டிவில ஒரு படம் பாத்தேன். உங்ளுக்கு ரஜினி சார், சத்யராஜ் சார் நடிச்ச பாரத் படம் நெனவு இருக்க ஆன்ட்டி? அதுல ஒரு சூப்பர் டைலாக் வருது. நான் தான் பெரியவன்னு எவனும் நெனச்சிடக்கூடாது..‌.? ஏன்னா? அவனுக்கு அப்பனும் பொறந்திருப்பான்னு. நீங்க கேட்டிருக்கீங்களா? செம்ம டைலாக் இல்ல ஆன்ட்டி" என்றவள் விக்ரமை பார்த்து "நா எப்பவும் சொன்னத செஞ்சு காட்டுவேன். அது என் கூடவே பொறந்த குணம். இத உங்க புள்ளைக்கு நா சொன்னேன்னு சொல்லிடுங்க ஆன்ட்டி" என்றபடி, தன் கூலர்ஸை எடுத்து ஸ்டைலாக கண்களில் போட்டவள். "கடுப்புல உங்க புள்ள சாப்டாம‌ போய்ட போகும்‌.‌ நல்லா முழுங்கிட்டு அடுத்த ப்ளான் யோசிக்க சொல்லுங்க. எஸ்பெஷல்லி அந்த வடைய மறக்காம திங்கச் சொல்லுங்க" என்றவள். "டைமாச்சு வர்ட" என்று விக்ரமை பார்த்து நக்கலாக கையாட்டியவள். விசிலடித்தபடியே தன் புல்லட் சாவியை எடுத்துக் கொண்டு வாசல் வரை சென்றவளுக்கு உள்ளே விக்ரம் டைனிங் டேபிள் மேலிருந்த பாத்திரங்களை தூக்கிப்போட்டு உடைக்கும் சத்தம் தெளிவாக கேட்க. அவள் உதடுகள் லேசாக வளைந்தது. ஆனால், அந்த நொடி உள்ளுக்குள் அவள்‌  என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கும் புரியவில்லை பாவம்.



ஆபீஸில் ஆருவும், ஷாலினியும் த்வனியையே வியப்பாக பார்த்துக்கொண்டிருக்க. "ஏய் இப்ப எதுக்குடி ஐஸ்கிரீம் பாத்த கொழந்த மாதிரி என்னை இப்டி வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்கீங்க?"



"எப்டி த்வனி‌? எப்டி இது நடந்துச்சு? சொன்ன மாதிரி மூன் நாள்ல கான்ட்ராக்ட் உனக்கு வந்திடுச்சு!! எப்டிடி" என்ற ஆருஷியை பார்த்து சன்னமாக சிரித்தவள்.



"எல்லாம் விக்ரமை வச்சு தான்" என்றவளை தோழிகள் ஆச்சரியமாக பார்க்க…



இங்கு விக்ரம் யாருக்கு த்வனியின் டெண்டர் பற்றிய தகவல்களை கொடுத்தனோ அந்த உதய்யை உதை உதை என்று உதைத்துக் கொண்டிருந்தான். 


"ஏன்டா இடியட்… ஏன்டா இப்டி பண்ண? நா எவ்ளோ கஷ்டப்பட்டு அவ லாப்டாப்ல இருந்து அந்த டீடெயிஸ் எடுத்து தந்தேன்னு உனக்கு தெரியுமாடா…? தெரியுமா??? ஏன்டா இப்டி பண்ண? கான்ட்ராக்ட் தான் உனக்கு கெடச்சிதில்ல… மூடிட்டு ஒழுங்க அந்த வேலைய பாக்க வேண்டியது தானா? எதுக்குடா இந்த கான்ட்ராக்ட் உன்னால செய்யமுடியாதுன்னு வாபஸ் வங்குனா…? நீ வேணாம்னு சொன்னதும் கான்ட்ராக்ட் ஆட்டோமேட்டிக்க அவளுக்கு போய்டுச்சேடா… எப்டிடா? எப்டி?" என்று கத்த…



"என்ன விக்ரம் ஒன்னு தெரியாத மாதிரி பேசுற. நீ உன் பொண்டாட்டி பக்கம் சாஞ்சனால தான் நா இப்டி செஞ்சேன்‌." என்றவனை விக்ரம் புரியாமல் பார்த்தவன். "என்னடா ஒலர்ர. யாரு யாருக்குடா பொண்டாட்டி. இன்னொரு வாட்டி அவள எம் பொண்டாட்டின்னு சொன்ன உன்ன கொன்னுடுவேன் ராஸ்கல்" என்று உதயின் சட்டையை பிடிக்க.



"என் விக்ரம்... உங்க புருஷன், பொண்டாட்டி வெளயாட்டுக்கு நா தான் கெடச்சான?? நீ ஒன்னும் சொல்லாமய ரெண்டு நாள் முன்னாடி த்வனி மேடம் என்ன வந்து பார்த்தாங்க" என்றதும் விக்ரம் திரும்பி உதய்யை கூர்மையாக பார்த்தவன். "அவ என்ன சொன்னா? என்றதற்கு உதய் சொன்ன பதிலில் குரோதத்தின் உச்சிக்கு சென்றான் விக்ரம். "ஹவ் டார் யூ. எவ்ளோ தைரியம் இருந்த நீ அப்டி சொல்லியிருப்ப…? நீ எனக்கு பொண்டாட்டியாடி. நீ எனக்கு ச்சீ..‌. அந்த தகுதி உனக்கில்லடி. உனக்கு இல்லவே இல்லடி" என்று கத்தியவன். அங்கிருந்த பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்தான்.



இங்கு தோழிகள் இருவரும். "ப்ளீஸ் த்வனி என்ன ஆச்சுன்னு சொல்லுடி" என்று அவளை நச்சரிக்க.



"சிம்புள்டி‌. நேர அந்த திருட்டு நாய் உதய்கிட்ட போய். எனக்கும் என் புருஷனுக்கு ஆயிரம் இருக்கும் இன்னைக்கு அடிச்சிக்குவோம் நாளைக்கு சேந்துக்குவோம். நடுவுல கொலட்ரல் டேமேஜா (தவிர்க்கமுடியாத சேதம்) நீ வந்து மாட்டிக்கிட்டியே‌ உதய்… இப்ப பாரு எனக்கும் விக்ரமுக்கும் நடுவுல இருந்த ப்ராப்ளம் சால்வ் ஆகிடுச்சு. இப்ப அவரு எனக்கு துரோகம் பண்ணிட்டத ஃபீல் பண்ணி அழறாரு. நா வேணும்னா உண்மைய வெளிய சொல்லவன்னு கேக்குறாருன்னு... சொன்னது தான் அந்த திருட்டு நாய் மூஞ்ச பாக்கணுமே.!! சட்டுன்னு விக்ரம் சார் தான் வலிய வந்து டெண்டர் டீடெயிஸ் எனக்கு தந்தாரு. நா மாட்னா, அவரும் தான் மாட்டிக்குவாருன்னு... அப்டி இப்டின்னு பேசிட்டிருந்தான். விக்ரம் சொன்ன உனக்கு எங்கடா போச்சு புத்தி… நீ ஒழுங்கானவன‌ இருந்திருந்த நேர்மைய இந்த கான்ட்ராக்ட்டை வாங்கி இருக்கணும். அதவிட்டு திருட்டு வேலைய‌ பண்ற...  விக்ரம் சொல்றதில்ல மிஸ்டர்.உதய். நா இங்க வந்துல இருந்து நம்ம பேசிட்டிருக்கிற‌ இந்த நிமிஷம் வரை எல்லாம் என்னோட பென் கேமரால ரெக்காடாகிட்டு இருக்கு. இதுல நீயே என்னோட டீடெயிஸ் காப்பி ஆடிச்சு தான் இந்த கான்ட்ராக்ட் வாங்கி இருக்கன்னு ஒத்துக்கிட்டு இருக்க. இதுல விக்ரம் பேர மட்டும் எடிட் பண்ணணிட்டு நம்ம பிசினஸ் கவுன்சில்ல குடுத்து கம்பிளைன் பண்ண என்ன ஆகும்னு சொன்னது தான். பயபுள்ள அடுத்த நிமிஷம் எங்க கம்பெனி பேர் கெட்டுப் போய்டுமோன்னு பயந்து கான்ட்ராக்ட் வேணாம்னு எழுதி தந்துட்டு ஓடிடுச்சு. அப்றம் ஒரு எம்.பிய வச்சு இந்த கான்ட்ராக்ட் எனக்கு வர்ர மாதிரி செஞ்சேன்‌. நியாயம இது எனக்கு வரவேண்டியது தான்னு அவரும் ஹெல்ப் பண்ணாரு" என்று நடந்ததை சொல்லி முடிக்க.‌..



"அடியேய் எப்டிடி. விக்ரம் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டடான்னு உனக்கு தெரியுமில்ல?"



"ஆமா விக்ரம் எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டான் தான். ஆன, அது எனக்கு... நமக்கு தானா தெரியும். அந்த டெண்டர் திருடணுக்கு தெரியாதே!!!" என்று‌ தோளைக் குலுக்க.



"ம்ம்ம் செம்மடி. எந்த விக்ரமால கான்ட்ராக்ட் போச்சோ அவன் பேர வச்சே, அத திரும்ப புடிச்சிட்டியே சூப்பர் தான். ஆன, எந்த தைரியத்துல விக்ரமும் நீயும் சமாதானம் ஆகிட்டீங்கன்னு சொன்ன…"



"ம்ம்ம் எல்லாம் எங்கள பத்தினா உண்மை அந்த டெண்டர் பார்ட்டிக்கு தெரியாதுன்ற தைரியத்துல தான்" என்று சிரித்தவள் மகிழ்ச்சி கோழிகளையும் தொற்றிக்கொள்ள… "அது சரி ஷாலு. நீ காலையில எதோ பேசணும்னு எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தீயே? என்ன மேட்டர்டி. ஆரு உன்னோட அம்மா கூட எனக்கு கால் பண்ணாங்க. கொஞ்சம் பிஸி அதான் பேசமுடியல… என்ன விஷயம்டி." என்றவள் தோழிகளை பார்க்க,  ஷாலு ஆருவை பார்க்க,  ஆருஷி தலைகுனிந்தபடி டேபிளில் விரல் வைத்து எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.



"ஏய் என்னடி? இங்க ஒருத்தி கேட்டுட்டு இருக்கேன். ரெண்டு பேரும் வாய மூடிட்டிருக்கீங்க? என் ஆச்சு‌. ஏய் ஆரு அம்மா எதுக்கு எனக்கு கால் பண்ணாங்கன்னு உனக்கு தெரியுமா?"



"அதெல்லாம் ஒன்னு இல்ல த்வனி. அம்மா சும்மா உன்கிட்ட பேச கால் பண்ணியிருக்காங்க" என்றவளை முறைத்த ஷாலினி. "இவ பொய் சொல்றடி. இவளால வீட்ல பயங்கர பிரச்சன. அதான் அம்மா நம்ம ரெண்டு பேருக்கும் ஃபோன் பண்ணி இருந்தாங்க" 


"ஏய் என்ன ஆச்சு என்ன ப்ராப்ளம்?" என்ற த்வனி கேள்விக்கு ஆருஷி அமைதியாக இருக்க.


"ஏய் இங்க ஒருத்தி கேட்டுட்டு இருக்கேன் இல்ல. என்னடி பண்ணி தொலச்ச?"


"அத என்கிட்ட கேளு த்வனி. இந்த அரலூசு ஒரு முழு லூச லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்குறது தான் இப்ப பிரச்சனையே. இவ அப்பா, அம்மா இவளுக்கு ஒரு நல்ல வரன் பார்த்திருக்காங்க. ஆன, இந்த நவீன் அனார்கலி கட்டுன அந்த  சலீமை தான் கட்டுவேன்னு பெனாத்திட்டு திரியுது. அதனால வீட்டுல ரொம்ப டென்ஷன்." என்றது தான் த்வனி திரும்பி ஆருவை தீயாக முறைத்தவள். "ஏன்டி எரும. உனக்கு எத்தன முறை தான்டி சொல்றது. அந்த நாய் சரியில்ல. அது உனக்கு வேணாம். ஒழுங்க வேற வேலய பாருன்னு. கொஞ்சம் நாள் நா விக்ரம் பிரச்சனையில பிஸிய இருக்கவும். நீ உன் வேலைய மறுபடியும் காட்ரியா? செவுலு பிஞ்சிடும் ராஸ்கல் என்னடி நெனச்சிட்டு இருக்க நீ?"



"த்வனி இது என்னோட பெர்சனல் மேட்டர். ப்ளீஸ் ஸ்டே அவுட்‌ ஆப் திஸ்" என்றவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்ட த்வனி. "செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல். என்ன நெனச்சிட்டு இருக்க நீ. இப்டி எல்லாம் பேசினா! நா கோவத்துல உன்ன தொலஞ்சு போன்னு விட்டுவேன்னு நெனச்சிய. நீ என்ன திட்னாலும் சரி... இல்ல என்னோட பிரெண்ட்ஷிப்போ வேணாம்னு என்ன வெறுத்தாலும் சரி. ஐ டோண்ட் கேர். பட், ஒரு நாளும் அந்த பொறுக்கி கூட உன்ன சேர விடமாட்டேன். ஞாபகம் வச்சிக்க... நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். அதுதான் எனக்கு முக்கியம்."



"த்வனி ப்ளீஸ் ஐ லவ் ஹீம்" 



"ஸ்டாப் இட்... லவ் பத்தி என்கிட்ட சொல்றீய... உண்மையான, பைத்தியக்காரத்தனமான காதலோட எக்ஸ்ட்ரீம் பாத்தவ, பாத்துட்டு இருக்கவடி நான். நீ காதல் பத்தி எனக்கு கிளாஸ் எடுக்காத. நீ அவனை உண்மையா லவ் பண்ண கூட அவன் உனக்கு சரியானவன் இல்லைங்கிறப்போ. சத்தியமா இத நா நடக்க விடமாட்டேன். எனக்கு உன்னோட ஃப்யூச்சர் தான் முக்கியம். அப்டி இருக்க அந்த நாய் சூசைட் பண்ணிக்குவேன்னு மிரட்டி உன்ன லவ் யூ சொல்ல வச்சிருக்கு. அந்த பன்னாடைக்கு உன்ன கட்டு தருவோம்னு நீ எப்டி நெனச்ச. ஒழுங்க வீடுல பாக்குற‌ பையனை  கட்டிக்க. அப்டி இல்லாம வேற எதாவது ஏடாகூடமாக செய்ய நெனச்ச... அப்றம் உனக்கு கட்டய கல்யாணம் தான்டி. அந்த நாய் மாதிரி நானும் ஷாலும் எங்க கழுத்துல கத்திய வச்சிட்டு உன்ன பிளாக்மெயில் பண்ணி உன் மேரேஜை நடத்த வேண்டி வரும்" என்று மிரட்டியவளை முறைத்த ஆரு. உட்கார்ந்திருந்த சேரை எட்டி உதைத்தவள். "ஐ ஹேட் யூ த்வனி" என்று கத்திவிட்டு செல்ல.



"ஏன்டி உன் கழுத்துல கத்தி வைப்பேன்னு சொன்ன சரி. அது என்னடி என்னை கூட கேக்காம என் கழுத்துல கத்தி வைப்பேன்னு நீயே கமிட் பண்ற?" என்று ஷாலினி முறைக்க...



"அது ஒரு  ப்லோ வந்துடுச்சுடி. சீன் கொஞ்சம் சென்ட்டிமென்ட்ட இருக்கட்டும்னு உன்னையும் ‌கமிட் பண்ணிட்டேன். எல்லாம் நம்ம ஆருக்காக தானடி. பிரெண்ட்ஷிப்காக நீ உன் உயிர கூட தரமாட்டீய என்ன?"



"எது உயிர தருணுமா... போடிங்கு. உயிர் வேணுமாம் இல்ல உயிரு. அந்த லூசு புத்தி கெட்டு ஒரு பக்கிய லவ் பண்ணும் இதுக்கு நாங்க உயிர தரணுமாக்கும். போடி போ. நா இன்னையோட உங்க பிரெண்ட்ஷிப்ப டிவோஸ் பண்றேன்" என்றவள். "கொஞ்ச‌ நேரத்துல என்ன கொல்லப்பாக்குறளே கொலகாரி" என்று புலம்பியபடியே வெளியே சென்றவளை பார்த்து த்வனி வாய்விட்டு சிரித்துக்கொண்டிருக்க, அவள் சிரித்தற்கு பத்து மடங்காக அவளை அழ வைக்க காலம் அவள் ஃபோன் வழியே அடுத்த குண்டை போட்டது.