விழி வழி காதல் நுழைந்ததடி 28
விழி 28 ஆதர்ஷ் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன்வி, தன் கணவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தின் முன் சொடுக்கிட்ட ஆதர்ஷ், "பதில் சொல்லு தன்வி. நான் எடுத்த உன்னோட கல்யாண முடிவு சரியா? அவன் உன்னை நல்லாப் பார்த்துக்குறானா? என் மேலயோ அவன் மேலயே உனக்கு கோவம் வரலியா?" என்று கேட்டான் பதிலைத் தெரிந்து கொண்டே. தன்வி தன்னவன் மீதிருந்து பார்வையைத் திருப்பாமலே, "0 % ரெக்ரெட்ஸ் பாஸ். என் புருஷன் என்னை அவ்ளோ நல்லாப் பார்த்துக்குறாரு… வழக்கம் போல உங்க முடிவு இப்பவும் தப்பாப் போகல… அவரு என்னை ஏமாத்தினது மட்டும் தான் அவர் செஞ்ச தப்பு. மத்தபடி ஹீ இஸ் தி பெஸ்ட் ஹஸ்பெண்ட் இன் தி வேர்ல்ட்" என்று கரகரத்த குரலில் மனதில் இருந்து பதில் சொன்னவள் திரும்பி ஆதர்ஷனின் முகத்தைப் பார்த்தாள். அதில், ‘என்னை விடவா அவன் உன்னை அன்பாப் பார்த்துகிட்டான்?' என்ற கேள்வி இருக்க, "உங்களைவிட இல்ல தான், ஆனா உங்களைவிட எங்கயும் என் புருஷன் என்மேல வச்ச அன்பு குறைந்தது இல்ல. நீங்க என்மேல வச்ச அன்பு எப்படிப் புனிதமானதோ, அதே மாதிரி என்னோட தஷ் என் மேல வச்ச காதலும் மழைத்துளி மாதிரி...