Posts

நிஜம் 35

Image
  நிஜம் 35 அந்த அழகிய சின்ன கோயிலில் அமைதியாக வீற்றிருக்கும் அகிலம் ஆளும் அம்மனின் முகத்தையே பார்த்திருந்த, விக்ரம் காதுகளில் டாக்டர் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலித்தது. "த்வனி கண்டிஷன் கொஞ்சம் கிரிட்டிக்கல்ல இருக்கு மிஸ்டர். விக்ரம். ஏற்கனவே அவ உடம்பு ரொம்ப வீக்கா இருந்தது. இப்ப கீழ விழுந்ததில் நிலைமை இன்னும் மோசமாகிடுச்சு… இப்ப இருக்க சூழ்நிலையில், என்ன வேணும்னாலும் நடக்கலாம். மேக்ஸிமம் நாங்க ரெண்டு உயிரையும் காப்பாத்த ட்ரை பண்றோம். பட்… மீதி எல்லாம் அந்த கடவுள் கையில" என்று டாக்டர் விக்ரம் நெஞ்சில் இடியை இறங்கிவிட்டு போக, விக்ரம் முழுவதும் நொறுங்கி விட்டான். "இன்னும் என்னை என்ன எல்லாம் செய்யனும்னு நீ நெச்சிட்டு இருக்க... அப்படி நான் என்ன பெரிய தப்பு செஞ்சிட்டேனு சொல்லும்மா. நான் உயிர நேசிச்சவளை என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட… அது பத்ததுன்னு இப்ப மறுபடியும் அவளையும், அவளை கருவ சுமக்குறவளையே சேர்த்து என்கிட்ட இருந்து பறிச்சிக்க பாக்குறா இல்ல... ஏம்மா எப்பவும் நான் தனிமரமா தான் நிக்கணுமா… அது தான் உனக்கு வேணுமா... பாவம்மா என் ரென்யா‌, அவளை நீ சந்தோஷமா வாழவும்...

தேடல் 16

Image
  தேடல் - 16 மனம் விரும்பிய காதல் கிளிகள் ரெண்டு இல்லறம் என்னும் இனிய பயணத்தை இனிதே தொடங்க திருமணம் என்ற பந்தத்தில் இணையும் நிகழ்வு அழகாய் நடந்தேறிக் கொண்டிருந்தது. மணமேடையில் துருவ்வின் மொத்தக் குடும்பமும் கூடி இருக்க, இத்தனை நாள் சின்னக் குழந்தை என்று மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த தன் செல்ல மகள் இன்று ஒருவனுக்கு மனைவியாக, ஒரு காலத்தில் தன்னை வேண்டாம் என்று விரட்டி அடித்த குடும்பத்திற்கு மூத்த மருமகளாகச் செல்லும் அளவு வளர்ந்து மணமேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மதிநிலாக்கு எதையும் நம்ப முடியவில்லை. கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. மனம் முழுவதும் மகிழ்ச்சி, அதன் உச்சம் தொட்டிருந்தது. மகளையும், மருமகனையும் கண் நிறையப் பார்த்துக் கொண்டிருந்த மதியின் கண்கள் அடிக்கடி மண்டபம் முழுவதையும் சுற்றி சுற்றி வந்து, யாரையோ ஆவலாகத் தேடி அலை பாய்ந்து கொண்டிருந்தது. மதியின் கண்கள் மண்டபத்தைச் சல்லடை போட்டு சலித்து யாரை தேடுகின்றதோ அந்த நபர், அபிநந்தன். தன்னைத் தேடும் தன்னவளின் உள்ளத் தவிப்பையும், தேடித் துடிக்கும் அவள் மீன் விழிகளையும், இதழில் புன்னகையோடு தூர நின்று ரசித்துப் பார்த்துக் க...

தேடல் 15

Image
  தேடல் - 15 நிலா இத்தனை நாள் எதற்காக, எந்த லட்சியத்துக்காக இங்கு வந்து காத்திருந்தாளோ, அதை இன்று கேட்டுவிட்டாள். கடைசியாகக் கேட்டே விட்டாள். ஆனால், அதற்கான பதிலைச் சொல்வது தான் யாருக்கும் சுலபமானதாக இல்லை. அது நிலாவுக்கு நன்கு புரிந்தது. நிலா மதியின் மகள் என்பது எல்லோருக்கும் அதிர்ச்சி என்றாள், அவள் இப்படி ஒன்றைக் கேட்டது அனைவருக்கும் பேரதிர்ச்சி… நிலாவையே பார்த்துக்கொண்டிருந்த யாரிடமும் நிலாவின் கேள்விக்கான பதில் இல்லை. அபிநந்தன் நிலாவை ஒரு மிரட்சியோடு பார்த்திருக்க‌, துருவ்வும் "இதுக்காகத் தான் நீ என்னை விட்டு விலகி போனீயா முகில்? உனக்கு உன் அம்மா முக்கியம்னு இவ்வளவு யோசிச்சு இருக்கயே? ஒரு நிமிஷம்! ஒரே ஒரு நிமிஷம்... நீ ஏன்டி என்ன நெனைக்காம விட்ட? நீ இல்லாம நா உயிரோட இருப்பேன்னு எப்டி நெனச்ச முகில்"? என்றவன் 'ஏன்டி இப்டி செஞ்ச'? என்று பார்வையாலேயே அவளைத் தாக்க அவன் பார்வையின் தாக்குதலை தாங்க முடியாமல் நிலா தலைகுனிந்து கொண்டாள். "என்னை மன்னிச்சிடு துருவ். நீ எனக்கு உலகம்னா எங்கம்மா தான் எனக்கு உயிர். அவங்கள விட எனக்கு எதுவும் பெருசு இல்ல. ஐ அம் சாரி துருவ் ஐ ...

தேடல் 14

Image
  தேடல் - 14 அபிநந்தனை கல்யாணத்தைச் சாக்காக வைத்து ஊருக்கு அனுப்ப ப்ளான் போட்ட முத்துவேல், மதிநிலாவின் பாட்டி ராஜத்தையும், அவள் மாமன் சேதுராமனையும் தன் தோட்டத்திற்கு அழைத்திருந்தார். "என்ன சேது உன் அக்கா பொண்ணுக்கு நல்ல பெரிய எடமா பாத்துப் பழகு. அப்ப தான் வசதியா வாழ முடியும்னு சொல்லிக் குடுத்து என் பையனோட பழக விட்டீருக்கீங்க போல நீயும் உன் அம்மாவும்"? என்று வார்த்தையில் விஷத்தைத் தடவி கத்தியாய் வீசியவர், "உன் பேத்திக்கு அல்ப ஆயுசுல போகணும்னு எழுத்தி இருக்கு போலயே" என்று மிரட்ட துடித்துப் போயினர் மதியின் பாட்டியும், மாமனும். "அய்யா, அவ சின்னப் பொண்ணு. வெவரம் தெரியாம இப்டி புத்தி கெட்டதனமா செஞ்சிட்டா. அவள விட்டுடுங்கய்யா. நாங்க இந்த ஊர விட்டே போய்டுறோம்" என்று மதியின் பாட்டி கெஞ்ச, சேது "ஆமாங்கய்யா நாங்க நாளைக்கே இந்த ஊர விட்டுப் போய்டுறோம். அவ இனி உங்க பையன் இருக்க தெச பக்கம் கூட வரமாட்டாய்யா" என்று கைகூப்பி வணங்கிக் கேட்டனர். "நீங்க இந்த ஊரவிட்டு போய்டுவீங்க சரி. ஆனா, என் புள்ள அவளத் தேடி வருவானே? அப்ப என்ன செய்வீங்க? அதெல்லாம் சரியா வராது. ...

தேடல் 13

Image
  தேடல் - 13 அபிநந்தன், மதிநிலாவின் உண்மை காதல் அந்த கிராமத்தின் ஆறு, குளம், கோயில், வயல்வெளி என்று அனைத்து இடங்களிலும் அழகாக வளர்ந்தது. நந்தன் தன்னை மறந்தான். தன் அந்தஸ்தை மறந்தான். அனைத்தையும் மறந்து தன் மனம் முழுவதிலும் தன் மதியை மட்டும் நினைத்து வாழ்ந்தான். மதிக்கு உலகமே அவனாகிப் போனான். அவனைத் தாண்டி அவள் நிழல் கூட விழாத அளவு அவனுடன் ஒன்றிப் போனாள். இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்து கல்யாணம், குழந்தை, பேரன், பேத்தி கல்யாணம் என்று ஒரு நிறைவான வாழ்க்கை கனவிலேயே வாழ்ந்தனர். இளம் தென்றல் வீசும் அந்தி சாயும் வேளையில் தன்னவள் மடியில் கண்மூடி நந்தன் படுத்திருக்க, அவன் தலைமுடியை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள் அவன் மனதின் மதி. "அபி.." “ம்ம்ம்” "ஓய் அபி" என்று அவள் அவனை உலுக்க, “சொல்லுடி” "நா உன் கிட்ட பேசணும். கொஞ்சம் எந்திரியேன்". "அதெல்லாம் முடியாது. எது சொல்றதா இருந்தாலும் இப்படியே தலையைக் கோதிக்கிட்டே சொல்லு" என்றவன் மீண்டும் அவள் கையை எடுத்து தன் தலைமீது வைத்துக் கொள்ள, "அபி" என்று அவள் மறுபடியும் இழுக்க, "ஏய் என்னடி? அப்போபுடிச...

நிஜம் 34

Image
நிஜம் 34 மாலை நேரம், த்வனி தன் ரூம் வாசலையே பார்த்திருந்தாள்.  "என்ன த்வனி நாங்க ரெண்டு பேர் இங்க இருக்கேம். நீ என்ன வாசலயே பாத்துட்டு இருக்க?" "இல்ல ஷாலு… இது நான் வாக்கிங் போற டைம், அதான் என்ன‌ இன்னும் அந்த கொரங்க காணும்னு பாக்குறேன்." "ஓஓஓ" என்று இழுத்த ஆரு, "சரி அண்ணா இல்லாட்டி என்ன, அதான் நாங்க ரெண்டு பேர் இருக்கோம் இல்ல, வா நாங்க கூட்டிப்போறோம்" "இல்ல ஆரு, அவனே வரட்டும். இல்லாட்டி வந்தது ஏன் நான் இல்லாம போனேன்னு வல்லுவல்லுன்னு விழும்" என்றவள் பார்வை இன்னமும் வாசலிலேயே இருக்க, ஆருவும்‌ ஷாலும் ஒருவரை ஒரு அர்த்தப் பார்வை பார்த்துக்கொண்டனர். "ஏன் த்வனி அண்ணா வந்த கத்துவருன்னு யோசிக்கிறீயா? இல்ல… அவர் கூட தான் போகணும்னு ஆசப்படுறீயா?" என்ற ஆருவை த்வனி முறைக்க,  "சும்மா மொறக்காத த்வனி. உன் மனசு தொட்டு சொல்லு… நான் சொன்னது உண்மை இல்லான்னு?" என்றவளுக்கு பதில் சொல்லாமல் த்வனி அமைதியாக இருக்க, அவள் நாடியை பிடித்து தூக்கி தான்‌ முகத்தை பார்க்க வைத்த ஆரு, "சொல்லு த்வனி... நீ அண்ணா கூட இருக்க ஆசப்படல? என் கண்ண பாத்து சொ...

தேடல் 12

Image
  தேடல் - 12 அந்த அழகிய கிராமத்தில், எங்கு பார்த்தாலும் திருமணம் முடிந்த புதுப் பெண்ணின் முகம் நாணத்தில் தலைகுனிந்து பூமி பார்ப்பது போல் செழித்து விளைந்திருந்த நெல்லின் எடை தாங்காமல் கதிர்கள் தலைகுனிந்து பூமித்தாயை பார்த்திருந்தன. அந்த ஊரில் உள்ள விளை நிலமாகட்டும், அரிசி மில், சர்க்கரை ஆலை, இல்லை வேறு எந்தத் தொழிலாக இருந்தாலும் அது சொந்தமாக இருப்பது ஒரே ஒருவருக்குத் தான்... அது முத்துவேல். முத்துவேலிடம் பணத்தோடு சேர்ந்து, அது கொடுத்த ஆணவம், அகங்காரமும் நிறைத்திருந்தது. தன்னிடம் வேலை செய்பவர்கள் தனக்கு அடிமை என்ற எண்ணம் கொண்ட முரட்டு ஃபீஸ். அவர் மனைவி காமாட்சி, கணவன் எது செய்தாலும் பொறுத்துப் போகும் அக்மார்க் கிராமத்து மணம் மாறாத குடும்பத் தலைவி. இந்தத் தம்பதிகளின் மகன்கள் அபிநந்தன், அடுத்து ரகுநந்தன், மகள்கள் அகல்யா, ரம்யா. என்ன தான் முத்துவேலின் பிள்ளைகளாக இருந்தாலும் இளையவர்கள் நால்வரும் குணத்தில் அப்பாவைப் போல் இல்லாமல் அனைவரையும் மதித்து நடக்கும் நல்லபிள்ளைகள். ஐந்து வருஷம் கழித்துத் தன் பாட்டி வீட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அபிநந்தனுக்கு வயது பதினெட்டு. அரும்பு மீசை, உடற்...

தேடல் 11

Image
  தேடல் - 11 அன்று ஒரு ப்ராஜெக்ட் சைட்டைப் பார்க்க அபிநந்தன் நிலாவை தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்த சைட்டைப் பார்த்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் நிலா அங்கு கட்டப்போகும் அப்பார்ட்மெண்ட் எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு ப்ளாட்டும் எந்த அளவில் இருக்கவேண்டும், எப்படி இருந்தால் காற்றும், வெளிச்சமும் நன்றாக வீட்டிற்குள் வரும், வாஸ்துப்படி வாசல், கதவு, ஜன்னல் எங்கெங்கு இருக்க வேண்டும் என்பதைத் தன் லேப்டேப்பில் தெளிவாக வடிவமைத்து அதை நந்தனிடம் காட்ட அவர் அசந்தே விட்டார். "நீ தாம்மா எங்க வீட்டுக்குச் சரியான மருமக. துருவ் சாய்ஸ் சூப்பர் மட்டும் இல்ல. அன்பீட்டபிள் மா" என்க, நிலாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "சார் நீ" “…………” “நீங்க...”? "இப்ப என்ன சொன்னீங்க?? என்று திருதிருவென முழித்த படி கேட்க. நந்தன், "இங்க எதுவும் பேசா வேணாம் நிலா. பக்கத்துல ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்க போய் பேசுவோம் வா" என்று அவர் முன்னே நடக்க, நிலா வெட்டப் போகும் ஆடுபோல் மிரண்டு போய் முழித்தவள், 'இருக்கு, இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு' என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவர் பின்னா...