நிஜம் 35
நிஜம் 35 அந்த அழகிய சின்ன கோயிலில் அமைதியாக வீற்றிருக்கும் அகிலம் ஆளும் அம்மனின் முகத்தையே பார்த்திருந்த, விக்ரம் காதுகளில் டாக்டர் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலித்தது. "த்வனி கண்டிஷன் கொஞ்சம் கிரிட்டிக்கல்ல இருக்கு மிஸ்டர். விக்ரம். ஏற்கனவே அவ உடம்பு ரொம்ப வீக்கா இருந்தது. இப்ப கீழ விழுந்ததில் நிலைமை இன்னும் மோசமாகிடுச்சு… இப்ப இருக்க சூழ்நிலையில், என்ன வேணும்னாலும் நடக்கலாம். மேக்ஸிமம் நாங்க ரெண்டு உயிரையும் காப்பாத்த ட்ரை பண்றோம். பட்… மீதி எல்லாம் அந்த கடவுள் கையில" என்று டாக்டர் விக்ரம் நெஞ்சில் இடியை இறங்கிவிட்டு போக, விக்ரம் முழுவதும் நொறுங்கி விட்டான். "இன்னும் என்னை என்ன எல்லாம் செய்யனும்னு நீ நெச்சிட்டு இருக்க... அப்படி நான் என்ன பெரிய தப்பு செஞ்சிட்டேனு சொல்லும்மா. நான் உயிர நேசிச்சவளை என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட… அது பத்ததுன்னு இப்ப மறுபடியும் அவளையும், அவளை கருவ சுமக்குறவளையே சேர்த்து என்கிட்ட இருந்து பறிச்சிக்க பாக்குறா இல்ல... ஏம்மா எப்பவும் நான் தனிமரமா தான் நிக்கணுமா… அது தான் உனக்கு வேணுமா... பாவம்மா என் ரென்யா, அவளை நீ சந்தோஷமா வாழவும்...