விழி வழி காதல் நுழைந்ததடி 1
விழி 1 அழகாய் விடிந்த காலைப் பொழுதில், வழியில் வண்ண வண்ணமாகப் பூத்திருந்த அழகிய மலர்களைக் கூட ரசிக்காமல், அந்த எட்டு மாடிக் கட்டிடத்தின் உள்ளே வேகமாக நுழைந்தான் ஆதர்ஷன் விஜயராகவன். இன்றைய தேதியில், இந்தியாவில் பல தொழில்களில் முதலிடத்தில் இருக்கும் வி.வி இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் வீரராகவனின் பேரன். தன் தாத்தா உருவாக்கிய தொழிலை, ஆதர்ஷின் தந்தை உச்சத்தில் நிறுத்தி இருந்தார். அதை இன்று வரை முதல் இடத்திலேயே வைத்திருக்கும் இளம் தொழிலதிபன் ஆதர்ஷ். ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்தில், வசீகரிக்கும் கோதுமை நிறத்தில் பார்க்கும் அனைவரையும் கவரும் ஆண்மகன். தினமும் செய்யும் உடற்பயிற்சியில் வடித்து வைத்த கற்சிலை போன்றிருக்கும் அவன் தேகத்தை அவன் அணிந்திருந்த கறுப்பு நிறச் சட்டை இன்னும் கம்பீரமாகக் காட்ட, காற்றில் அலைந்தாடிய கேசத்தைத் தன் இடது கைகொண்டு கோதியபடியே வந்த அந்த முப்பது வயது அழகனைப் பார்த்து மரியாதையாக அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று, "குட் மார்னிங் சார்" என்று சொல்லத் தலையாட்டி அவர்களின் காலை வணக்கத்தை ஏற்றவன், அவனைப் பார்த்து ஆசையாகப் புன்னகைத்த பெண்களைப் பார்த்ததும் கண்களில் அத்தனை இறு...