நிஜம் 12
இஷ்டமில்லா நிஜம் நீ பகுதி 12 த்வனிக்கு தூங்க மருந்து கொடுத்து படுக்க வைத்த ஷாலினி அவள் நன்றாக உறங்குகிறாள், இனி மாலை போல் தான் அவள் மயக்கம் தெளியும் என்பதை உணர்ந்த பிறகு உடனே வருணை ஃபோனில் அழைத்தவள், "வருண் நா டாக்டர். ஷாலினி பேசுறேன்" என்று சொல்ல, வருணும், "ம்ம்ம் சொல்லு ஷாலு" என்று உரிமையோடு பேச, அவள் ஃபோனை கையால் முடியவள். "பாரு ஆரு இந்தக் கொரங்குக்குத் திமிர… என்னமோ அவன் பொண்டாட்டிய கூப்புற மாதிரி சொல்லு ஷாலுன்னு செல்லமா கேக்குறான்" என்று அவள் பல்லை கடித்தாள். "ஏய் ஷாலு விடுடி… இப்ப நமக்கு அவனோட ஹெல்ப் ரொம்ப முக்கியம். எதுவும் திட்டிகிட்டி வச்சிடாத, ப்ளீஸ் நமக்கு இருக்க ஒரே ஹோப் அவன் தான். பாத்து பேசுப்பா" என்க, ஷாலினி எல்லாம் "என் தலையெழுத்து, இதெல்லாம் கேட்கவேண்டி இருக்கு" என்று தலையில் அடித்துக்கொண்டவள், "வருண் எனக்கு ஒரு எமர்ஜன்ஸி. ப்ளீஸ் ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கெஞ்சலாகக் கேட்டாள். "என்னாச்சு ஷாலு? எதும் ப்ராப்ளமா? நா என்ன செய்யணும்" என்று அவன் கேட்க, "நா உங்களுக்கு ஒரு அட்ரஸ் மெச...