விழி வழி காதல் நுழைந்ததடி 13
விழி 13 அன்று இரவெல்லாம் பிரசன்னா, தன்வியைக் கல்யாணம் செய்யக் கேட்டது பற்றியே யோசித்துக் கொண்டிருந்த ஆதர்ஷனுக்கு அவன் சொன்னதை நினைத்து அத்தனைக் கோவம். "ஒரு நாள்! ஒரே ஒரு நாள் பாத்ததுல இவருக்குத் தன்வியைப் புடிச்சிப் போச்சாம்… கல்யாணம் பண்ணா அவளைத் தான் பண்ணுவேன்னு முடிவே பண்ணிட்டாராம்… இவன் யாரு முடிவு பண்ண? தன்வி விஷயத்தில் முடிவு செய்யும் உரிமையை இவனுக்கு யாரு கொடுத்தது, இடியட்!" என்று வாய் ஓயாமல் அவனைத் திட்டிக்கொண்டே இருந்தவன், விடியும் வேளையில் தான் தூங்கத் தொடங்கி இருந்தான். யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டு மெல்ல விழிகளைத் திறந்தவனுக்கு, சரியான தூக்கம் இல்லாததால் கண்கள் எல்லாம் எரிந்தது. கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தான். மணி எட்டு என்று சொன்னது கடிகாரம். 'யாரு கதவு தட்றது.?" என்று யோசித்தவனுக்கு, 'ஒருவேளை தன்வியாக இருக்குமோ' என்ற எண்ணம் வந்த உடனே, 'இல்லயே… இன்னைக்கு கவர்ன்மென்ட் ஹாலிடேவாச்சே ஆஃபிஸ் லீவ் தான்… ஆஃபிஸ் லீவ் டைம்ல தன்வி இவ்ளோ சீக்கிரம் எழுப்ப மாட்டாளே!' என்று யோசித்தபடியே கதவைத் திறந்தவன் அங்கு நின்ற தன்வியைப் பா...