Posts

நிஜம் epilogue

Image
  நிஜம் 40 விக்ரம் மீட்டிங் முடித்து, சீக்கிரமே வீட்டுக்கு வந்ததுவிட்டான். "அடியேய் சீக்கிரம்டி, எவ்ளோ நேரம் தான் குளிப்ப… நீ என்ன‌ முகத்துக்குச் சோப் போடுறீய, இல்ல சுவர்ல முகத்தை வச்சு பரபரன்னு தேக்கிறீய? இவ்ளோ நேரம் ஆகுது. என்ன தேச்சாலும் இருக்குறது தான்டி இருக்கு, சீக்கிரம் வாடி, கெளம்பணும் டைம் ஆச்சு." என்றவன் டமார் என்று கதவு திறுக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் மூச்சடைத்து நின்றான். குளித்து முடித்து, கூந்தலில் துளிதுளியாகத் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்க, வெறும் டவலை மட்டுமே உடலில் சுற்றிக்கொண்டு, கோவத்தில் மூச்சுக் காற்றில் அனல் வீச, இடுப்பில் கைவைத்து, எதிரில் இருந்தவனை தீயாக முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள் த்வனி. "என்னடா சொன்ன நீ… நான் சுவத்துல மூஞ்ச வச்சு தேய்க்கணும்மா… என்ன செஞ்சாலும் இருக்குறது தான் இருக்குமா… எவ்ளோ தைரியம் இருந்த நீ அப்டி சொல்லுவ. என் அழகுக்கு என்னடா குறைச்சல்… காலேஜ்ல என் பின்னாடி சுத்தாத ஆளே இல்லனு உனக்குத் தெரியாது. ஏன் உன் ஃப்ரண்ட் ஒருத்தன்... அவன் பேரு என்ன? ஹான்… ரகு அது கூட எனக்கு நூல் விட்டுப் பாத்தது உனக்கும் தெரியும் இல்...

நிஜம் 39

Image
  நிஜம் 39 அழகான நீரோடை போல் விக்ரம், த்வனி வாழ்க்கை சலசலவெனச் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் நாளுக்கு நாள் அன்பும் புரிந்தாலும் எந்த அளவுக்கு வளர்ந்ததோ, அதோ அளவு வம்பு, சண்டையும் வளர்ந்தது. ஆஷா சொன்னது போல் அடிதடியாக, அழகாக இல்லறத்தை நடத்திய இருவரும் தாம்பத்தியத்தை மட்டும் தள்ளி வைத்தனர். திருமண முடிந்த இருவரும் இணைந்தே ஆகவேண்டும் என்பதை விடுத்து, இருவருக்கும் மனம் இசையும் வேளையில் அது இயல்பாக நடக்கட்டும் என்று இருந்துவிட, அன்பும் வம்புமாய் அழகாக அவர்கள் நாட்கள் நகர ஆரம்பித்தது ஒரு வருடம் ஓடி இருந்தது. "டேய் லூசு, இன்னைக்கு அந்த வீணா போன வருண் வருதுன்னு சொன்னீயே எப்ப வருதும் அது…" என்று மரியாதையாகக் கேட்ட தன் மனைவியைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான் விக்ரம். "ஏன்டி கேக்குறதை கொஞ்சம் ஒழுங்க கேட்ட தான் என்னவாம். அவன் தான் என் தங்கச்சி தங்கச்சின்னு டி‌.ஆர் மாதிரி உயிரையே விடுரான். நீ அவனுக்கு மறந்து கூட மரியாதை குடுக்க மாட்டுங்கிற… இன்னும் ரெண்டு நாள்ல அவனுக்கு ஷாலுக்கும் கல்யாணம், உன் ஃப்ரண்ட் புருஷனுன்ற முறைக்காது அட்லீஸ்ட் கொஞ்சம் பாத்து பேசுடி....

நிஜம் 38

Image
நிஜம் 38 த்வனி ஒரு நிமிடம் தூங்கும் மகளின் முகத்தைக் கண்களில் தேக்கிக்கொண்டவள், "பாப்பாவை நல்லா பாத்துக்க, நீயும் ஒழுங்க சாப்டு" என்று விக்ரமை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தரையைப் பார்த்து சொல்லிவிட்டு சென்றவள், இடது கை கதவின் கைப்பிடியில் இருக்க, அவள் வலது கை விக்ரமின் கைப்பிடிக்குள் இருந்தது. த்வனி திரும்பி அவனைப் பார்க்காமல் அமைதியாக நிற்க, "நான் அப்டி என்னடி பாவம் பண்ணேன். ஏன் எல்லாரும் என்னை விட்டு விட்டு போறீங்க… முதல்ல அம்மா, அப்றம் ரென்யா, இப்ப நீயும் போற இல்ல… ஏன் உங்க யாருக்குமே என்னைப் புடிக்கலிய? நான் அப்டி என்ன பாவம் செஞ்சேனு எல்லாரும் என்னை விட்டு விலகி போறீங்க" என்று உயிர் இல்லாமல் வந்த விக்ரமின் வார்த்தைகள் த்வனியை உயிரோடு வதைக்க, கண்களை இருக்க மூடி, உதட்டை கடித்து, அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக நின்றாள். விக்ரம் தன் பிடித்திருந்த அவள் கையில் அழுத்தத்தைக் கூட்டி,  "போகாதடி… நீயும் என்னைவிட்டு போய்ட்டா எனக்குன்னு யாருமே இல்லடி… பாப்பாவோட நானும் உன்னோடவே இருக்குறேனே ப்ளீஸ்… நீ என்னைவிட்டு போன நான் அநாதை ஆகிடுவேன்டி" என்றவன் வார்த்தை...

நிஜம் 37

Image
  நிஜம் 37 த்வனி அமைதியாகத் தன் மடியில் பால் குடித்துவிட்டு, நிம்மதியாக லேசாக வாயைத் திறந்தபடி தூங்கிக் கொண்டிருந்த, தன் மகளைப் பார்க்க பார்க்க அவளுக்கு நெஞ்சம் கணத்தது. த்வனிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அதிகமாக நேரம், விக்ரம் அணைப்பிலேயே இருந்த குழந்தை அவன் கை சூட்டுக்கு நன்கு பழகி விட, இப்போது அவனின் ஸ்பரிசம் இல்லாமல் பாதி நேரம் அழுதுகொண்டே இருந்தது. அதை நினைத்து த்வனியின் கவலையில் இருக்க, அந்த நேரம் சௌந்தர்யா தவ்னிக்கு ஃபோன் செய்திருந்தார். த்வனியும் குழந்தையும் சென்ற நாளில் இருந்து, விக்ரம் அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை என்றும், உணவு கூட எடுத்துக்கொள்ளாமல், என்னேரமும் குழந்தையின் தொட்டிலை பார்த்தபடியே அழுதுகொண்டு இருக்கிறான் என்று சொல்ல, த்வனிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு பக்கம் குழந்தை விக்ரமை பார்க்காமல் அழுது கொண்டிருக்க, அங்கு விக்ரமின் நிலையே இதை விட மோசமாக இருக்கிறது. இதற்கு என்னன செய்யலாம் என்று யோசித்தவள், கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள். "த்வனி" என்ற கதிரின் குரல் கேட்க, "உள்ள வா கதிர்" என்றாள். "தவ்னி எனக்கு உன்னை இப்டி பாக்க...

நிஜம் 36

Image
  நிஜம்‌ 36  த்வனி விக்ரமையே பார்த்திருக்க, அவன் குழந்தையை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். "நீ மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்து, ஒரு நிமிடம் எல்லாரும் பயந்துட்டாங்க, அதுலயும் நம்ம வருண்… சொல்லவே வேணாம். பாவம் மறுபடியும் ஹாஸ்பிடல்லயே பொழப்பு போய்டுமான்னு பொலம்பி தள்ளிட்டான்." என்று லேசாக சிரித்தவள்,  "அவனும் மத்தவங்களுக்கு பாவம் தான். ஒன்னு நீ ஹாஸ்பிடல்ல இருக்க, இல்ல நான் இருக்கேன். இல்லாட்டி ரெண்டு பேரும் வந்து படுத்துக்குறோம். அவங்க நம்மளுக்கு தேடுவு காக்க வேண்டி இருக்கு… நம்ம பாதி கதை ஹாஸ்பிடல்ல தான் நடந்திருக்கு" என்று குறும்பாக சொன்னவளை நிமிர்ந்து பார்த்த விக்ரம் முகத்தில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்க, த்வனி அதிசயமாக அவனை பார்த்து, "ஏய் உனக்கு சிரிக்க கூட தெரியுமா? நான் இதுவரை நீ இப்டி சிரிச்சு பாத்ததே இல்ல" என்று கிண்டல் செய்ய, விக்ரம் நிமிர்ந்து அவள் விழிகளை பார்த்து, மெதுவாக "தேங்க்ஸ்" என்று சொல்ல, த்வனி திரும்பி அவனை பார்த்து, "அப்ப நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லனுமா?" என்றாள். "நீ எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்?...

தேடல் Epilogue

Image
  Epilogue இரவு நேரம் கதவு வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, என்னமோ? ஏதோ என்று பதறி அடித்து எழுந்து வந்த நந்தன் வாசலில் கலங்கிய கண்களும், தெளிந்த முகமாகவும் இருந்த மதியைப் பார்த்து, "ஏய் மதி நீ? இந்த நேரத்துல இங்க? என்ன ஆச்சு, ஏன் கண்ணு கலங்கி இருக்கு"? என்று மூச்சு விடாமல் பேச. "ஏன் அபி எனக்குப் புடிச்ச மாதிரி ரூம்மை பாத்து பாத்துக் கட்டி வச்சிட்டு, இப்படி என்னையே உள்ள விடாம வெளியவே நிக்க வச்சு தான் பேசுவீயா நீ? ஏன் உள்ள கூப்ட்டு இந்தக் கேள்வி எல்லாம் கேட்டா சாருக்குக் கிரீடம் இறங்கிடுமோ"? என்று இடுப்பில் கை வைத்து முறைத்த மதியை கண் விரிய வியந்து பார்த்துக் கொண்டிருந்த நந்தனுக்குப் பதினாறு வயதில் அன்று மாந்தோப்பில் முதல் முதலில், மரத்தின் மேல் இருந்து தன் முன் குதித்த அந்த மதிநிலாவை இத்தனை வருஷம் கழித்துத் திரும்பப் பார்த்தது போல் இருந்தது. வாசலை விட்டு நகராமல் நின்ற நந்தன் தோளைப் பிடித்துத் தள்ளிவிட்டு அறைக்குள் வந்த மதி அந்த ரூம்மையே ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்திருக்கும் நந்தனுக்கு இப்போது மதியின் மன மாற்றத்தைக...

தேடல் 20

Image
  தேடல் - 20 அபிநந்தன் தன் வாய் திறந்து தன் மனதின் ஆசையை மதியிடம் சொல்லவில்லை. ஆனால், அவரின் ஒவ்வொரு செய்கையிலும் மதி மீது இப்போது சூரிய ஒளிபோல் சூடு குறையாமல் இருக்கும். தன் காதல் கொண்டு மதியின் மனதை சுட்டு எடுத்தார். மதிக்கும் மதி மயங்கி இருந்தாலும் சமுதாயம், மகள், வயது, நந்தனின் குடும்பமும், நிலாவும் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கண்டதையும் யோசித்தவர், மனதைக் கடிவாளம் போட்டுக் கட்டி வைக்க முயல, அது அவருக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. அபியைக் கண்டதும் அழுத பிள்ளை தாயைக் கண்டதும் ஆதரவு தேடி ஓடி தன் தாயின் காலைக் கட்டிக் கொள்வது போல் மதியின் மனது நந்தனின் காலடியில் கிடக்கத் தவித்தது. இருவருக்கும் ஒருவரின் ஒருவர் அருகாமை பிடித்திருந்தது. அந்த நிமிடங்களை வெகுவாக ரசித்தனர். வாழாமல் தொலைத்த வருடங்களை, கிடைத்த இந்த நிமிடங்களில் முழுதாய் வாழ்ந்தனர். அங்குத் தீண்டல் இல்லை, சின்னச் சின்னச் சீண்டல் இல்லை தெரியாமல் கூட இருவரின் உடைகளும் உரசிக் கொள்ளவில்லை. ஆனால், மனதும், பார்வையும் ஒரே நேர்கோட்டில் உரசும் போது ஏற்பட்ட காதல் நெருப்பில் இரு இதயமும் இதமாகக் குளிர் காய்ந்தது. இந்த நாட்கள், ...