Posts

Showing posts from February, 2026

கன்னத்தில் காதல் முத்தம் 2

 காதல் 2 'வீக் எண்ட்' என்று இளைஞர்களால் அழைக்கப்படும் வார விடுமுறை நாள் நாளை என்பதைக் கூட மறந்து அந்த வெள்ளிக்கிழமை நாளில், அலுவலகம் பரபரப்பாக இருக்க, அங்கு வேலை செய்யும் சில ஆட்கள் முகத்தில் ஒருவிதப் பீதியுடன் அந்த 'கான்பரன்ஸ்' அறையின் வாசலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். 'கான்பரன்ஸ்' அறையின் கதவைத் திறந்து கொண்டு கௌதம் உள்ளே வர,‌ கௌதம் பின்னால் வேகமாக நடந்து வந்த அவன் கால் ‘ஷூ’ வின் சத்தமே அங்கிருந்தவர்களின் மனதில் பயத்தைக் கிளப்பியது. ஆறடி உயரத்தில் மாநிறத்திக்கு சற்று கம்மியான நிறம் தான் என்றாலும், அதுவும் அவனுக்கு அழகாகத் தான் இருந்தது. தீர்க்கமான கருப்பு வைரம் போன்ற கண்கள், அதில் எப்போதும் ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். எந்தவித கெட்ட பழக்கம் இவனுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்லும் இளஞ்சிவப்பு நிற உதடுகள், நுனியில் கோபத்தை சுமந்திருக்கும் கூர் மூக்கு, 'சிக்ஸ் பேக், எய்ட் பேக்' என்றெல்லாம் இல்லாமல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்து உடலை உறுதியாக ஆரோக்கியமாக வைத்திருந்தான். எப்போதாவது சிரித்தால் அத்தி பூத்தாற்போல், அவன் வலப்பக்கம் விழும் ஆளை இழுக்கு...

கன்னத்தில் காதல் முத்தம் 1

  காதல் 1 காலை வேளையில்‌ விடிந்தும் விடியாமல் இருந்த வானத்தில், சூரியன் இருக்கிறானா? இல்லையா? என்று தேடும் அளவுக்கு,‌ மார்கழி மாதத்தின் பனி மெல்லிய திரையாக படர்ந்து வெளிச்சத்தை மறைத்துக் கொண்டிருந்த நேரம், அந்த வீட்டின் பூஜை அறையில் ஒலித்துக் கொண்டிருந்த சுப்ரபாதத்தின் சத்தம் மெலிதாக மாடிப்படி ஏறி, தட்டாமல் கதவைக் கடந்து சென்று, அமைதியான சூழலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்ணவள் காதுகளில் செல்லமாகச் சிணுங்க, கண்களை மூடியபடியே மெல்லிதாக அவள் இதழ்கள் விரிந்தது. கைகளை நீட்டி சோம்பல் முறித்தபடி மெல்லப் புரண்டு படுத்தவள், மெதுவாகக் கண்களைத் திறந்தாள். அவள் ஆராத்யா பிரியதர்ஷினி. கண்விழித்தவளின் பார்வையில் அங்குச் சுவரில் மாட்டி இருந்த கடிகாரம் விழுந்தது. அந்த கடிகாரம் இப்போது காலை மணி ஆறு என்று காட்டியது. சட்டென அதிர்ந்த படி போர்வையை விலக்கி விட்டு எழுந்து மெத்தையில் பொத்தென்று உட்கார்ந்தவள், "ச்சீ மணி ஆறு தான் ஆகுது அதுக்குள்ள முழிச்சிட்டேனே…" என்று தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்தாள். "எல்லா இந்த அத்தையால வருது. விடியக் காலையில் இப்டி சுப்ரபாதம் போடாதீங்க… போடாதீங்கன்னு ஆய...