விழி வழி காதல் நுழைந்ததடி. 33
விழி 33 அதீஷன் காட்டிய புகைப்படங்களைப் பார்த்து எச்சில் கூட்டி விழுங்கிய தன்வி, "இ..இது உங்களுக்கு எப்படிக் கிடைச்சிது…" என்று இழுத்தவள், "அப்..அப்ப என்னை நீங்க ஸ்பை பண்றீங்க இல்ல" என்று கோவமாகக் கேட்டாள். "என்னை வேற என்னடி செய்யச் சொல்லற? ஒரு வாரமா நீ என்கிட்டப் பேசல… ஆனா, நாள் முழுக்கவும் ஒன்னு ஃபோன் பேசிட்டு இருக்க, இல்ல எங்கயாவது வெறிச்சுப் பார்த்தபடி தீவிர யோசனையில் இருக்க… நான் உன் புருஷன்டி, உள்ளும் புறமும் உன்னை முழுசாய்ப் புரிஞ்சி வச்சிருக்க எனக்கு, அன்னைக்கு நீ சொன்ன உன்கிட்டப் பேச மாட்டேன்க்கு அர்த்தம் புரியாதுன்னு நினைக்கறயா?" என்றான் வலியோடு. அவனின் கேள்வியில் அவளின் கண்கள் கலங்கிவிட, "எ..எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியல" என்றாள் அழுகையோடு. "சரி, நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு, தர்ஷன் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை… அவன் அப்படி இருக்கும் போது, நீ மட்டும் என்னோட சந்தோஷமாய் இருக்க உனக்குக் கஷ்டமா இருக்கு… சோ, அவன் வாழ்க்கை சரியாகும் வரை என்னைப் பிரிஞ்சு இருக்க நினைக்கிற, ஓகே… ஒருவேளை, தர்ஷன் காலம் முழுக்க இப்படியே இருந்து...