விழி வழி காதல் நுழைந்ததடி 20
விழி 20 திருமணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஆதர்ஷ், தன்வி இருவரும் சேர்ந்தே தேர்வு செய்தனர். உடுத்தும் உடையில் தொடங்கி அணியும் நகை வரை அவளுக்கான அனைத்தையும் ஆதர்ஷனே பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்தான். தன்வி எப்போதும் தன் உடைகள், மற்றும் நகை விஷயத்தில் கவனமாக இருப்பாள். அவள் தேர்வு செய்யும் அனைத்தும் எளிமையாக இருக்கும் அதே சமயம் மிகவும் அழகாக நேர்த்தியாக இருக்கும். அதை மனதில் வைத்து, தங்கள் பணவசதியை உடைகள், நகைகளில் காட்டாமல் அவள் விருப்பத்தைப் புரிந்து அனைத்தையும் எளிமையாக அதே சமயம் நேர்த்தியாகத் தேர்வு செய்தான். அந்த நாட்கள் இருவரின் இடையில் இருந்த அனைத்து இடைவெளிகளையும் குறைத்திருக்க, தன்விக்குக் கடந்த நாட்களில் அவன் மீதிருந்த மொத்தக் கோவமும் வருத்தமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. காலமும் நேரமும் யாருக்காகவும் காத்துக்கொண்டு நிற்காது என்பது போல் நாட்கள் வேகமாக நகர ஆதர்ஷ், தன்வி திருமண நாளும் வந்தது. தங்கள் குலதெய்வம் கோயிலில் மிக எளிமையாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார் வீரராகவன். எளிமையாக அலங்காரம் செய்து ஆதர்ஷ் அவளுக்காகத் ...