விழி வழி காதல் நுழைந்ததடி 16
விழி 16 கோவிலில் இருந்து வெளியே வந்த ஆதர்ஷ், தன்வி இருவரும் காரில் ஏறிக் கொண்டனர். தன்வி திடீரென்று தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தில் தடுமாறி இருந்தவள், ஆதர்ஷனின் முகத்தைப் பார்க்கத் தயங்கி சாலையை வெறித்தபடியே இருக்க, அவள் திரும்பி தன்னைப் பார்க்கப் போவது இல்லை என்று புரிந்து கொண்ட ஆதர்ஷ், "தன்வி" என்று ஆசைக் குரலில் அழைத்தான். பல வருடங்களாகக் கேட்டுப் பழகிய குரல் தான். ஆனால் இன்று ஏனோ அவன் வாய் மொழியில் தன் பெயரைக் கேட்டவள் காதில் அவன் குரல் தேனாய் தித்தித்தது. தனக்குள் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவளுக்கே தெரியவில்லை. சில மாதங்களாக அவனைப் பிரிந்திருந்ததால் ஒரு வேளை இப்படி எல்லாம் விசித்திரமாக உணர்வுகள் தோன்றுகிறதோ என்று எண்ணிக் கொண்டவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல், "ம்ம்ம்" என்று மட்டும் சொன்னாள். அதைப் பார்த்து, "ப்ச்ச்" என்று சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டியவன், "திரும்பி என்னைப் பாருடி" என்றான் கட்டாயக் குரலில். அவன் குரல் மாற்றத்தை உணர்ந்த தன்வி மெல்லத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். "ஒரு வாரமா விரதம் இருந்தியா?" என்று அவள் ...