நிஜம் 15
இஷ்டமில்லா நிஜம் நீ பகுதி 15 விக்ரம், லயாவின் பழக்கம் காதலாக மலரும் தருணத்தை நெருங்கிக் கொண்டிருக்க, காலமும் அதற்குத் துணை போவதுபோல் த்வனி கொஞ்ச நாள் லயாவை விட்டு விலக இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. "த்வனி எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா?" என்று கேட்டபடியே வந்த லயாவின் தாய் பிரியா கையில் இருந்த பெரிய டிபன் பாக்ஸை பார்த்த த்வனி, "ம்மா என்னம்மா இது? நா என்ன வேற நாட்டுக்கப் போறேன், இங்க இருக்கச் சென்னைக்குத் தானா போறேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ பேக் பண்ணி இருக்கீங்க?" "என்னடி இங்க இருக்க சென்னை... மொத்தம் பத்துமணி நேரம் டிராவல் பண்ணும். வழியில உனக்குப் பசிக்குமில்ல. நீ நடுவுல எங்கயும் இறங்கி வெளிய ஹோட்டல்ல சாப்ட வேணாம்னு தான் கொஞ்சமா பேக் பண்ணி இருக்கேன். ஒழுங்கா எல்லாத்தையும் சாப்டு, வழியில எங்கயும் இறங்க கூடாது புரியுத" என்ற பிரியா டிபன் பாக்ஸை த்வனி பேக்கில் வைக்க, சங்கர் அவர் பங்கிற்குப் பிஸ்கட், குகீஸ், சாக்லேட் என்று வாங்கி வந்திருந்தார். த்வனி சென்னைக்குக் கிளம்பி தயாராக நிற்க, லயா அவளைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். "ஏய் லயா குட்டி, என்ன...