நிஜம் 6
இஷ்டமில்லா நிஜம் நீ பகுதி - 6 த்வனி தன் லாப்டாப் திரையில் தெரிந்த மெயிலை நூறாவது முறையாகப் படித்துப் பார்த்துக்கொண்டிருக்க , ஜெகன் அவளைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான். "என்னமோ பெருசா எல்லாத்தையும் நா பாத்துக்றேன்… நா பாத்துக்றேன்னு சொன்னீயே… இதுதான் நீ பிஸ்னஸை பாத்துக்குற லட்சணமா த்வனி. எவ்ளோ பெரிய கான்ட்ராக்ட். ஜஸ்ட் லைக் தட், நம்ம கைய விட்டு போய்டுச்சு. இந்த ஒரு கான்ட்ராக்ட் மட்டும் நமக்குக் கெடச்சிருந்த... கிட்டதட்ட பிப்டி க்ரோஸ் நமக்கு லாபம் கெடச்சிருக்கும். ஆன, இப்ப உன்னோட ஓவர் கான்ஃபிடன்ஸ்சால… கான்ட்ராக்ட் நம்ம கைய விட்டு போய்டுச்சு… இதுக்கு என்ன சொல்ற நீ??" என்ற ஜெகனை நிமிர்ந்து தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவள். "தி இஸ் மை பிஸ்னஸ் மிஸ்டர். ஜெகன். இந்தப் பிஸ்னஸ் லாஸ்ல போனப்போ, நீங்க இத விக்க டிரை பண்ணீங்க. அப்பா ஆரம்பிச்ச பிஸ்னஸ் நம்ம காலத்துல வித்துட்டத இருக்கக் கூடாதுனு, இத நா கைல எடுத்தேன். அதுக்கும் நீங்க என்கிட்ட பணம் வாங்கிட்டீங்க மிஸ்டர். ஜெகன் மறந்து போச்ச… இது நம்ம ஃபேமிலி பிஸ...