Posts

Showing posts from August, 2023

விழி வழி காதல் நுழைந்ததடி 12

விழி 12 வீட்டுக்கு வந்த ஆதர்ஷன் மனமே இல்லாமல் பார்ட்டிக்க் கிளம்பிச் சென்றான். தன்வி இல்லாமல் ஆதர்ஷ் கலந்து கொள்ளும், முதல் தொழில் ரீதியான ஆட்கள் கலந்து கொள்ளும் பார்ட்டி அது. அதனாலேயே அவனைப் பற்றியும் தன்வியைப் பற்றியும் தெரிந்த சிலர், "என்ன ஆதர்ஷ் அதிசயமா இருக்கு! பிசினஸ் பார்ட்டிக்கு தன்வி இல்லாமல் நீ தனியா வந்திருக்க? எப்பவும் தன்வியையும் கூட்டிட்டு தானே வருவ? தன்வியும் வேண்டா வெறுப்பா ஒரு சேர்ல உக்கார்ந்து எங்க எல்லாரையும் உர்ருன்னு வெறுப்பாப் பார்த்துட்டு இருப்பாங்களே… இன்னைக்கு என்ன ஆச்சு? மேடம் மிஸ்ஸிங்?" என்று பிசினஸ் வட்டத்தில் அவனுக்கு நெருங்கிய ஒருவர் விளையாட்டாகக் கேட்க, ஆதர்ஷன் கடனே என்று அவரைப் பார்த்துச் சிரித்தவன், "அவளுக்குக் கொஞ்சம் ஹெல்த் இஸ்யூஸ், அதான் வரல" என்று சமாளித்தான். "ஓஓஓ… இஸ் இட்…! டேக் கேர் ஆஃப் ஹர் ஆதர்ஷ், நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க" என்றவர் அங்கிருந்து சென்றுவிட ஆதர்ஷனுக்கு அங்கு இருக்கவே முடியவில்லை. அவன் எண்ணம் முழுவதும் தன்வி மேலேயே இருந்தது. இன்று செல்வம் சொன்னதைக் கேட்ட பிறகு தான் தன்வியின் இப்போதைய நடவடிக்கைகளுக்க...

கண்ட நாள் முதல் Epilogue

  Epilogue சூர்யா வீடே பரபரத்தது... அனைவரும் படு பிசி.  தேவியும் சந்தியாவும் ஓடி ஓடி வேலை பாரக்க, அதை பார்த்தவர்களுக்கு நல்லா நாளும் அதுவுமா இன்னைக்கு மேகத்தை பொத்துக்கிட்டு மழை வருமே என்ற பயம் தொற்றிக் கொண்டது.  இன்று தேனு, அரவிந்த் நிச்சயதார்த்தம். தனம்மா விரும்பி கேட்டதால் சூர்யாவின் வீட்டிலேயே நெருங்கி உறவினர்கள் மட்டும் அழைத்து நடத்த முடிவு செய்தனர். அனைத்து வேலைகளும் நல்லபடி நடக்க. தேவிக்கு மட்டும் சின்ன சந்தேகம். "கொஞ்ச நாளா தன் தோழிகளும் சூர்யா, அரவிந்த்தும் தனக்கு தெரியாமல் ஏதோ ப்ளான் போடுறாங்களோ?" என்று பெரிய சந்தேகம். ஆனால், அது என்ன என்று தெரியவில்லை.. சந்தியாவை கேட்டதற்கு அவளும், "ஆமாக்கா ஏதோ பெருசா ப்ளான் பண்றாங்க. ஆனா, நா கேட்ட பதில் இல்லக்கா" என்று சோகமாக சொல்ல, தேவி என்ன ப்ளான் என்று யோசிக்க ஒன்னும் புரியவில்லை. நிலா தேவி கையில் அழகிய பட்டு புடவையை கொடுக்க, "என்ன நிலா இது.?? இப்ப எனக்கு எதுக்கு புடவை?" என்று கேட்க "அத போய் உன்னோட அருமை அண்ணாக்களை கேளு… நிச்சயத்துக்கு நம்ம நாளு பேருக்கும் ஒரே மாதிரி புடவை தான் கட்டணுமாம். அவங்களே போய் ...

கண்ட நாள் முதல் final

Final episode ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அனைவர் மனதில் நிம்மதி குடி கொள்ள. இது இப்படியே தொடர வேண்டும் என்று  இறைவனை வேண்டிக் கொண்டனார்.   நிலா கண்களை துடைத்து எழுந்தவள். அனைவரையும் பார்த்து,  இவ்ளோ நாள் இந்த உண்மையை உங்ககிட்ட சொல்லாமல் இருந்ததுக்கு என்ன எல்லாரும் மன்னிச்சிடுங்க" என்று கைகூப்பி கேட்க… தனம்மா அவளருகில் வந்த நிலாவின் தலையை கோதிவிட்டவர், "நிலா... நீ இன்னையோட  பழசெல்லாத்தையும் மறந்துடு. இனி நீ அண்ணா, அண்ணிக்கு மட்டும் இல்ல எனக்கும் உன் மாமாவுக்கும் கூட இனி நீதான் மக. நாங்க நாளு பேரும் தான் உனக்கு அம்மா, அப்பா. சோ இனி நீ அழவே கூடாது ஓகே" என்று அவள் கண்ணீரை துடைக்க நிலா தனத்தை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.  பின் நிலா அரவிந்த் அருகில் வந்தவள். "ஹலோ மரவேதாளம் உன் மேல செம்ம காண்டுல தான் இருந்தேன். ஆனா, தெரிஞ்சோ தெரியமயோ நீ எனக்கு நல்லது தான் செஞ்சு இருக்க. அதனால உன்னை சும்மா விடுறேன். ஆஹான் அப்றம்  சூர்யா கிட்ட  உங்களுக்கு நான்  ஃப்ரண்டா  இருந்த போதுன்னு சொன்னீயாமே உண்மையா?" என்று கேட்க..?? அரவிந்த் "ஆமாம்" என்று தலையா...

கண்ட நாள் முதல் 31

அத்தியாயம் 31 மனதில் ஏற்பட்ட வேதனை, தூக்கத்தை தூர  விரட்ட. நிலா, சூர்யா இருவருக்கும் அன்றைய இரவு தூக்கமின்றி கழிந்தது.  காலை கண்விழித்ததும் முதல் வேலையாக சூர்யா நிலாவை காண செல்ல. அங்கு அவள் இல்லாத அந்த காலி அறைதான் அவனை வரவேற்றது. வீடு முழுவதும் தேடி நிலா வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தவன். "இவ்ளோ காலையில எங்க போய் இருப்ப?" என்று அவன் மூளை பலவாறு சிந்திக்க. "ஒருவேள நாம அவகிட்ட உண்மையை மறச்சதுக்கு கோவப்பட்டு என்ன விட்டு போய்ட்டாளா?" என்று மூளை யோசித்ததை முழுதாய் யோசிக்க முடியாமல் மனம் பதைபதைக்க.. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அழகாய் பூத்து அருமையாக வசம் வீசிக்கொண்டிருந்த இவர்கள் காதல் மலர் இன்று ஒரே நாளில் வாடி வதங்கி விட்டது. இனி அது மலருமா, மணம் கமழுமா.?? ஆண்டாண்டு காலம் தேடி அரும்பொருளாய் கிடைத்த என் காதலியே! எங்கே சென்றாயடி என்னை விடுத்து. சூரியன் வந்த பின் இரவு விடியும் என்றால், என் நிலவை பார்த்த பின் விடியுமாடி என் விடியல், உன் முகம் பார்க்காத இவ்விடியல் ஒளி இல்லா சூரியனாய் இருள் சேர்க்குதடி என் மனதில் நிலா எங்கே, கோவத்தில் தன்னை விட்டு சென்...