Posts

Showing posts from March, 2022

நிஜம் 36

Image
  நிஜம்‌ 36  த்வனி விக்ரமையே பார்த்திருக்க, அவன் குழந்தையை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். "நீ மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்து, ஒரு நிமிடம் எல்லாரும் பயந்துட்டாங்க, அதுலயும் நம்ம வருண்… சொல்லவே வேணாம். பாவம் மறுபடியும் ஹாஸ்பிடல்லயே பொழப்பு போய்டுமான்னு பொலம்பி தள்ளிட்டான்." என்று லேசாக சிரித்தவள்,  "அவனும் மத்தவங்களுக்கு பாவம் தான். ஒன்னு நீ ஹாஸ்பிடல்ல இருக்க, இல்ல நான் இருக்கேன். இல்லாட்டி ரெண்டு பேரும் வந்து படுத்துக்குறோம். அவங்க நம்மளுக்கு தேடுவு காக்க வேண்டி இருக்கு… நம்ம பாதி கதை ஹாஸ்பிடல்ல தான் நடந்திருக்கு" என்று குறும்பாக சொன்னவளை நிமிர்ந்து பார்த்த விக்ரம் முகத்தில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்க, த்வனி அதிசயமாக அவனை பார்த்து, "ஏய் உனக்கு சிரிக்க கூட தெரியுமா? நான் இதுவரை நீ இப்டி சிரிச்சு பாத்ததே இல்ல" என்று கிண்டல் செய்ய, விக்ரம் நிமிர்ந்து அவள் விழிகளை பார்த்து, மெதுவாக "தேங்க்ஸ்" என்று சொல்ல, த்வனி திரும்பி அவனை பார்த்து, "அப்ப நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லனுமா?" என்றாள். "நீ எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்?...

தேடல் Epilogue

Image
  Epilogue இரவு நேரம் கதவு வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, என்னமோ? ஏதோ என்று பதறி அடித்து எழுந்து வந்த நந்தன் வாசலில் கலங்கிய கண்களும், தெளிந்த முகமாகவும் இருந்த மதியைப் பார்த்து, "ஏய் மதி நீ? இந்த நேரத்துல இங்க? என்ன ஆச்சு, ஏன் கண்ணு கலங்கி இருக்கு"? என்று மூச்சு விடாமல் பேச. "ஏன் அபி எனக்குப் புடிச்ச மாதிரி ரூம்மை பாத்து பாத்துக் கட்டி வச்சிட்டு, இப்படி என்னையே உள்ள விடாம வெளியவே நிக்க வச்சு தான் பேசுவீயா நீ? ஏன் உள்ள கூப்ட்டு இந்தக் கேள்வி எல்லாம் கேட்டா சாருக்குக் கிரீடம் இறங்கிடுமோ"? என்று இடுப்பில் கை வைத்து முறைத்த மதியை கண் விரிய வியந்து பார்த்துக் கொண்டிருந்த நந்தனுக்குப் பதினாறு வயதில் அன்று மாந்தோப்பில் முதல் முதலில், மரத்தின் மேல் இருந்து தன் முன் குதித்த அந்த மதிநிலாவை இத்தனை வருஷம் கழித்துத் திரும்பப் பார்த்தது போல் இருந்தது. வாசலை விட்டு நகராமல் நின்ற நந்தன் தோளைப் பிடித்துத் தள்ளிவிட்டு அறைக்குள் வந்த மதி அந்த ரூம்மையே ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்திருக்கும் நந்தனுக்கு இப்போது மதியின் மன மாற்றத்தைக...

தேடல் 20

Image
  தேடல் - 20 அபிநந்தன் தன் வாய் திறந்து தன் மனதின் ஆசையை மதியிடம் சொல்லவில்லை. ஆனால், அவரின் ஒவ்வொரு செய்கையிலும் மதி மீது இப்போது சூரிய ஒளிபோல் சூடு குறையாமல் இருக்கும். தன் காதல் கொண்டு மதியின் மனதை சுட்டு எடுத்தார். மதிக்கும் மதி மயங்கி இருந்தாலும் சமுதாயம், மகள், வயது, நந்தனின் குடும்பமும், நிலாவும் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கண்டதையும் யோசித்தவர், மனதைக் கடிவாளம் போட்டுக் கட்டி வைக்க முயல, அது அவருக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. அபியைக் கண்டதும் அழுத பிள்ளை தாயைக் கண்டதும் ஆதரவு தேடி ஓடி தன் தாயின் காலைக் கட்டிக் கொள்வது போல் மதியின் மனது நந்தனின் காலடியில் கிடக்கத் தவித்தது. இருவருக்கும் ஒருவரின் ஒருவர் அருகாமை பிடித்திருந்தது. அந்த நிமிடங்களை வெகுவாக ரசித்தனர். வாழாமல் தொலைத்த வருடங்களை, கிடைத்த இந்த நிமிடங்களில் முழுதாய் வாழ்ந்தனர். அங்குத் தீண்டல் இல்லை, சின்னச் சின்னச் சீண்டல் இல்லை தெரியாமல் கூட இருவரின் உடைகளும் உரசிக் கொள்ளவில்லை. ஆனால், மனதும், பார்வையும் ஒரே நேர்கோட்டில் உரசும் போது ஏற்பட்ட காதல் நெருப்பில் இரு இதயமும் இதமாகக் குளிர் காய்ந்தது. இந்த நாட்கள், ...

தேடல் 19

Image
  தேடல் - 19 "இன்று" நந்தன் கட்டிலில் அமர்ந்திருக்க, மதி அவர் எதிரில் சேரில் உட்கார்ந்து, இமைக்கும் நேரம் கூட வீணாக்காமல் ஒருவரை ஒருவர் ஆழமாக, அர்த்தமாக, ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  இத்தனை வருட‌ம் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் தன் நினைவுகளின் துணைவனிடம் சொல்லித் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்ட மதி, நந்தனின் கடந்த காலத்தைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். உடலால் பிரிந்திருந்தாலும், இருவரின் மனதிற்கு இடையில்தான் எத்தனை ஒற்றுமை. இப்படி உள்ளம் ஒன்றுபட்ட காதலர்களைக் காலம் ஏன் பிரித்து வைத்தது என்று எண்ணும்போது காலத்தின் மீது கோபப்படாமல் இருப்பது கடினம் தான். இயற்கை தோன்றிய போதே உருவானது தான் காதல். எப்படி நாம் நம்ம சுயநலத்திற்காக இயற்கையை அதன் தன்மையில் இருந்து மாற்றி அதன் அழகையும், அமைதியையும் ஆழித்தோமோ அது போல இன்று சில பேர் காதலின் உண்மை அர்த்தம் புரியாது, பார்த்தும் ஒருவரின் புறத்தோற்றம் பிடித்து அவர்கள் மீது வரும் ஆசைக்கு பேர் தான் காதல் என்று தப்பாகப் புரிந்து கொண்டு காதலின் உண்மையையும், நேர்மையையும் கெடுக்கின்றார்களே என்று இப்படி ஒரு காதலை, காதலர்களை உலகிற்...

தேடல் 18

Image
  தேடல் - 18 ரம்யா நிலா தனக்கு மருமகளாக வருவதற்குச் சம்மதித்தால், அபிநந்தன், மதிநிலா கல்யாணத்திற்கு அனைவரும் ஒத்துக் கொள்வதாக சொல்ல, தவித்துப் போன நிலா, மாப்பிள்ளை யாரென்று தெரியாமல் துருவ்வை தவிப்பாய் பார்க்க அவனோ சித்தி தனக்காகத் தான் நிலாவுக்கு இப்டி ஒரு செக் வைத்திருக்கிறார் என்று புரிந்து, அம்மாவுக்காக நிலா தன்னை வேண்டாம் என்று சொன்ன கோவத்தில் அவளை முறைத்துக் கொண்டு கல்லாக நிற்க, அவள் அபிநந்தனை துணைக்கு அழைக்க, அவரோ ரம்யாவிற்கு ஆதரவாகப் பேச நிலா ஏற்கனவே துருவ் தனக்கில்லை என்ற வருத்தத்தில் இருந்தவள்... இப்போது அபிநந்தனும் இப்படிச் சொல்ல தன் இயலாமையை நினைத்துக் கலங்கியவள் தன் மொத்தக் கோபத்தையும் நந்தன் மீது கொட்டி விட்டாள். தன் மாமாவை நிலா கண்டபடி பேசியதை பொறுக்க முடியாத துருவ், "யார பார்த்து என்னடி சொன்ன"? என்று நிலா கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டான். "உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, என் அபிய தப்பா பேசுவ? அவர பத்தி உனக்கு என்னடி தெரியும்? ஓகே நா ஒத்துக்குறேன், உங்க அம்மா கிரேட் தான். ஐ அக்செப்ட்… ஆனா, அதுக்காக நீ என் அபியோட காதலை அண்டர் எஸ்டிமேட் பண்ணாத. உனக்கு...

தேடல் 17

Image
  தேடல் - 17 எங்கள் வீட்டுக்கு இரண்டு லட்சுமிகள் வந்திருக்கிறார்கள் என்பதை அந்த வீட்டின் வாசலில் கொட்டி இருந்த ஆலம் கரைத்த நீர் தம்பட்டமடிக்க, இரு நிலவுப் பெண்களும் ஒரே நேரத்தில் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்து இதுவரை அந்த வீட்டில் இருந்த இருளை விரட்டி அடித்தனர். அகல்யா தன் புது மருமகளை விட, தனது வருங்கால அண்ணியை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார். ரம்யாவோ வீட்டில் மதி நுழையும் போது அவர் கையைப் பிடித்தவர் அதன் பின் கையை விடவே இல்லை. இரு பெண்களும் இப்படி என்றால் அபிநந்தன் தம்பி ரகுநந்தன் வார்த்தைக்கு வார்த்தை மதியை அண்ணி அண்ணி என்று உரிமையோடு அழைக்க மதிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. "ஏன் நீங்க என்ன அண்ணின்னு கூப்புடுறீங்க"? என்று புரியாமல் மதி கேட்க. "நீங்க நந்து அண்ணாவ கல்யாணம்" என்று ரகு வாய் தவறி உலறத் தொடங்க, அனைவரும் அதிர்ந்து விட நிலாவுக்கு நெஞ்சே அடைத்துக் கொண்டது. "ஆத்தாடி இந்த சித்தப்பா முதலுக்கே மோசமாக்கிடுவாரு போல இருக்கே. ரம்யா அத்த ஏதாவது பண்ணுங்க, அட்ஜஸ்ட் அட்ஜஸ்ட்" என்று நிலா கையாட்ட "இரு டி வரேன்" என்ற ரம்யா. "அது…...