Posts

Showing posts from December, 2021

காதல் Epilogue

Image
 காதல்  இறுதி அத்தியாயம் இன்றோடு ஷரவன், மிருதுளா கல்யாணம் முடிந்து  ஒரு வாரம் ஓடிவிட்டது.  நிலவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றவன், இன்று தான் ஊருக்கு திரும்பி இருந்தான்.  வீட்டிற்குள் நுழைந்ததும் லட்சுமி, லட்சுமியின் தங்கை பிரியா, சிந்து, விஷ்வா என்று எல்லோரும்  எங்கேயோ அவசரமாக கிளம்பி கொண்டிருந்ததை பார்த்து, "என்ன குடும்பமே எங்கயோ மொத்தமா கிளம்பிட்டீருக்கீங்க போல?" என்று கேட்டபடி சோஃபாவில் அமர்ந்தவனை பார்த்தான் விஷ்வா. "டேய் நாங்க கிளம்புறோம், நீ வீட்டை பார்த்துக்க" என்ற விஷ்வாவை முறைத்தான் நிலவன். "டேய் முதல்ல நீங்க எங்க போறீங்க? அதை சொல்லு முதல்ல"   "டேய் உனக்கு மேட்டர் தெரியாதுல்ல… நம்ம வால்டியூப்க்கு கல்யாணம் நடக்கப்போகுது டா. இன்னைக்கு கல்யாணம் பத்தி பேசுறாங்க, யூ.எஸ் ல இருந்து ஆகாஷ் வந்திருக்காரு, நாங்க எல்லாரும் தனு வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கோம். செல்வகுமார் சார் எங்க எல்லாரையும் கண்டிப்பா வர சொன்னாரு, ஷரவனும், அமுல்பேபியும் கூட வராங்க" என்று சொன்னவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.  நிலவனுக்கு தனுவிற்கு கல்யாணம்...

காதல் 23

Image
  காதல் 23 அவர்கள் வாழ்வின் அனைத்து பிரச்சனையும் முடிந்து இவ்வருவரின் பிரிவிற்கும் அழகிய முற்றுப்புள்ளியை வைத்து, இனி வரும் வருங்காலத்திற்கு பிள்ளையார் சுழியை போட்டது காலம். இருபது நாட்களில் ஷரவன் உடல் முழுதாக தேறி இருந்தது. மிருதுளா தானே ஷரவனுடன் இருந்து அவரை பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியாகச் சொல்லிவிட, யாரும் அதை மறுக்கவில்லை. ஷரவனை  குழந்தை போல் கவனித்துக் கொண்டாள் அவன் உயிரானவள். மிருதுளா ஷரவனுக்கு காலை உணவை ஊட்டி கொண்டிருந்தவள் முகம் ஏனோ  வெகுவாக வாடி இருந்தது. ஷரவனும் நேற்றில் இருந்து அவளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். நேற்று டாக்டர், ஷரவனை நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்று சொன்னதில் இருந்து தான் அவள் முகம் இப்படி வாடி இருக்கிறது என்றும், அதற்கு என்ன காரணம் என்றும் புரிந்தவன், தன் தந்தையை அழைத்து சில விஷயங்களை சொல்லிவிட்டு அமைதியாக இருந்து விட்டான்.  காலைப்பொழுதே அனைவரும் ஹாஸ்பிடல் வந்துவிட ஷரவனும் வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தான். முக்தா ஷரவன் மடியில் உட்கார்ந்திருந்தவள், "ப்பா.. "ப்பா என்று ஷரவன் மீசையை பிடித்து இழுக்க,  "என்னடா முக்த...

காதல் 22

Image
  காதல் 22 அனைவரும் ஆபரேஷன் தியேட்டர் கதவுக்கு வெளியே கண்களில் கண்ணீருடனும், மனதில் பயத்துடனும் நின்றிருக்க, மிருதுளா மட்டும் ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தவள், "அவர பார்க்கணும்" என்ற வார்த்தைகளை மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தாள். இரண்டு மணிநேர கழித்து ஆப்ரேஷன் முடித்து வெளியே வந்த டாக்டரை அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.  "ஆப்ரேஷன் முடிஞ்சு போச்சு. ஆனா, அவர் உடம்பு எங்க ட்ரீட்மென்டுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்குது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவருக்கு நினைவு வந்தே ஆகணும். இல்லன்னா அவர் கோமா ஸ்டேஜ்க்கு போக நெறைய வாய்ப்பிருக்கு. அப்டி அவர் கோமாக்கு போய்ட்டா அப்றம் ரொம்ப கஷடமாகிடும். நீங்க எல்லாரும் அவர் கிட்ட பேசுங்க. உங்க குரல் அவருக்கு கேட்டுட்டே இருக்கணும். நீங்க பேசுறதுக்கு அவர் ரியாக்ட் பண்ணியே ஆகணும் இல்லன்னா" என்று தலையை இடவலம் ஆட்டிய டாக்டர் அங்கிருந்து சென்றுவிட, ஷரவனின் அம்மா அங்கேயே கத்தி அழத்தொடங்கிவிட, பிரதாப் உள்ளுக்குள்ளே உடைந்து நொருங்கினார்.  அனைவரின் முகத்திலும் ஷரவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயம்  அப்பட்டமாய் தெரிய, ஊரில் உள்...

காதல் 21

Image
  காதல் 21 லட்சுமியோடு மிருதுளா ஊட்டி வந்தாள். அந்த வீட்டில் மிருதுளாவுக்கு துணையாக ஒரு பெண்ணையும், காவலுக்கு ஒரு வாட்ச்மேனும் நியமித்து இருந்தான் ஷரவன்.  லட்சுமியும் அங்கிருந்த ஒரு சின்ன மருத்துவமனையில் தற்காலிகமாக வேலைக்கு சேர்த்திருந்தார். நாட்கள் செல்ல செல்ல மிருதுளா வயிற்றில் ஷரவனின் உயிர் வளர தொங்கியது. மிருதுளா இந்த குழந்தை தனக்கு சொந்தம் இல்லை, நாம் வெறும் வாடகை தாய் தான் என்பதை தனக்கு தானே  பலமுறை சொல்லி மனதில் பதிய வைத்துக் கொண்டாலும், தனக்குள் அசையும் அந்த சின்னஞ்சிறு உயிரின் ஸ்பரிசத்தில் அடிக்கடி தன்னை தொலைத்து விடுவாள், அவளை மறந்து வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசிக்கொண்டிருப்பாள்.  வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் மேலே படுத்துக் கொண்டு, வேலையும் பார்த்தாள் மிருதுளா. இடைப்பட்ட நாட்களில் ஷரவன் அடிக்கடி மறைந்திருந்து மிருதுளாவின் தாய்மையில் முன்பைவிட அழகாய் மிளிரும் அவள் முகத்தையும், தன் உயிரை சுமந்து மேடிட்ட வயிற்றுடன் மெதுவாக அவள் நடக்கும் அழகையும் ரசிப்பான். நாட்கள் அதன் போக்கில் அழகாய் நடக்க, மிருதுளாவின் ஒன்பதாவது மாதம் வீட்டில் வேலை செய்யும் பெண்ணி...

காதல் 20

Image
  காதல் 20 "ஏழு வருஷத்துக்கு முந்தி தான் ஷரவன்  தம்பிய  நான் மொத முறைய பார்த்தேன். ஒரு நாள் உன்னை பத்தி பேச என்னை பார்க்க நம்ம வீட்டுக்கு வந்திருந்தாரு, உன்னை அந்த தம்பி முதன் முதல்ல ஊட்டில வச்சு பார்த்திருக்காரு. பார்த்த உடனே அவருக்கு உன்ன புடிச்சி போச்சு. அதுக்கு அப்புறம் உன்ன பத்தி முழுசா விசாரிச்சு தெரிஞ்சுகிட்டு என்னை பார்க்க வந்தாரு." என்றவர் நினைவுகள் அந்த நாளை நோக்கி சென்றது. "சார், எனக்கு மிருதுளாவை பார்த்தும் புடிச்சு போச்சு. அவதான் என் லைஃப்னு முடிவு பண்ணிட்டேன். அதை பத்தி பேச தான் உங்களை பார்க்க வந்தேன்" என்றவனை செல்வகுமார் கேள்வியாய் பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவன்,  "நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது சார். மித்து பத்தி அவங்க வீட்டுல தானே போய் பேசணும், இங்க ஏன் வந்திருக்கேன்னு நீங்க நினைக்கிறீங்க? மித்து குடும்பத்த பத்தி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல. எனக்கு மித்து பத்தி எல்லா விவரமும் தெரியும். அவளை பொறுத்தவரை நீங்களும் உங்க  வைஃப்பும் தான் அவளுக்கு அப்பாவும், அம்மாவும், அதான் உங்களை பார்த்து பேச வந்தேன்" என்றவன் தன்னை பற்றிய...