Posts

இதயம் 9

  இதயம் 9 மறுநாள் காலையில் நேரத்துக்கே தயாராகி ஆதர்ஷன், தர்ஷினி இருவரும் போக வேண்டிய இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வந்த வேலை முழுவதும் சிறப்பாக முடிந்திருக்க, ஆதர்ஷின் கம்பெனியோடு தொழில் தொடர்பு வைத்துக் கொள்வதாக முடிவு செய்து, அனைவரும் கையெழுத்திட்டிருக்க, ஆதர்ஷனுக்கு அவன் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் போனது.  அந்த நேரம் தர்ஷினி, “கங்கிராஜுலேஷன்ஸ் தர்ஷன்” என்று தன் வலக்கையை நீட்டிப் புன்னகை முகமாக அவன் முன் நிற்க, மகிழ்ச்சி மிகுதியில் இருந்த ஆதர்ஷ், அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன், “தேங்ஸ் வினி… தேங்க்யூ சோ மச்” என்று உற்சாகம் நிறைந்த குரலில் சொல்ல, பாவம்! அவள்தான் அவன் சொன்னதை உணரும் நிலையில் இல்லை. ஆதர்ஷ் அவளை அணைத்த கணமே அவள் மனம் அவளது கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆகாயத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட, அவனது ஒற்றை அணைப்பில் உலகம் மறந்து நின்றாள், அவன் மேல் பித்தம் கொண்ட பேதை அவள். அவள் நிலையை உணராத ஆதர்ஷ் அவளை அணைத்தபடியே, “இதெல்லாம் உன்னால தான் வினி… இது என்னோட பல வருஷக் கனவு… இன்னைக்கு இது நிறைவேற நீயும் ஒரு முக்கியமான காரணம்” என்றவனின் பிடி இறுகிய போ

இதயம் 8

இதயம் 8 தங்களின் அறைக்கு வந்த இருவருமே பயணக் களைப்புடன், இவ்வளவு நேரம் தங்கும் அறைக்கான பிரச்சனையில் ஹோட்டல் லாபியில் காத்திருந்ததும் சேர்ந்து சோர்ந்து போயிருக்க, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகக் குளித்து முடித்து இரவு உடைக்கு மாறினர். ஆதர்ஷன் இரவு உணவை அறைக்கே வரவைத்திருக்க, தர்ஷினி அவனுக்கு உணவை எடுத்து வைத்துவிட்டுத் தானும் உண்டவள், “ஓகே சார்… ரெண்டு பேரும் செம்ம டயர்டா இருக்கோம். சோ நெக்ஸ்ட் ரெஸ்ட்டு” என்று வடிவேலு பாணியில் சொன்னவளைப் பார்த்து ஆதர்ஷன் இதழ் பிரித்துச் சிரிக்க, அவனது சிரித்த முகத்தைப் பார்த்துத் தாவிக் குதித்த தன் மனதை தலையில் தட்டி அடக்கி, “குட் நைட் தர்ஷன்” என்று சொன்னவள், அந்த அறையில் இருந்த இன்னொரு படுக்கையறையில் சென்று படுத்து விட்டாள்‌. ஆனால் தூக்கம் தான் அவளை நெருங்காமல் ஆதர்ஷனின் நினைவுகளை அவள் நெஞ்சில் ஓடவிட்டு அவளைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது. வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் தான் வந்த பாடில்லை. அவனின் சிரித்த முகமே மனக்கண் முன் வந்து வந்து அவளை இம்சை செய்ய, சட்டென எழுந்து படுக்கையில் உட்கார்ந்தபடி தலையைப் பிடித்துக் கொண்டவள், ‘

இதயம் 7

 இதயம் 7 ஆதர்ஷ் கத்திய கத்தலில் இங்கு அதீஷனுக்கு காதில் சவ்வு கிழிந்திருக்குமோ என்ற சந்தேகமே வந்துவிட்டது. “டேய்… கத்தாம கொஞ்சம் பொறுமையாப் பேசு” என்றவன் மட்டும் இப்போது ஆதர்ஷின் முன்னால் இருந்திருந்தால் அதீயின் கதி அதோகதிதான் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு கோபத்தின் உச்சியில் இருந்தான் ஆதர்ஷ். “பொறுமையா? எப்படிடா பொறுமையாப் பேசுறது… நீ பண்ண வேலைக்கு இப்ப மட்டும் நீ என் எதிரில் இருந்திருந்த…” என்று பல்லைக் கடித்தவன், “ஏன்டா இப்படி பொறுப்பில்லாம இருக்க… நான் எத்தனை முறை சொன்னேன், ரூம் விஷயம் எல்லாம் ஓகேவான்னு… அப்ப எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு இப்ப இப்படிப் பண்ணி வச்சிருக்கயேடா ராஸ்கல்… இப்ப என்னடா பண்றது?‌” என்றவனின் கோபத்தை எச்சில் விழுங்கியபடி ஒரு பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி. ’அம்மாடி! எவ்ளோ கோவம் வருது இவருக்கு. இவர் கோபப்பட்டு இன்னைக்கு தான் பார்க்குறேன்’ என்றவள், ‘ம்ம்ம், சும்மா சொல்லக் கூடாது… கோவத்தில் கூட செம்ம அழகாதான் இருக்காரு’ என்று வாய்க்குள் முணுமுணுக்க, அந்த நேரம் ஆதர்ஷ் அவளைப் பார்க்க, சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். “சாரி தர்ஷா… முதல்ல நீயும், ந

இதயம் 6

  இதயம் 6 காகிதம் போல் ஒரு மாத காலம் பறந்திருந்தது, தர்ஷினி அங்கு வேலையில் சேர்ந்து.  என்னதான் இரு மனநிலையில் ஆதர்ஷன் அவளை வேலைக்கு வைத்திருந்தாலும் அவளின் வேலை செய்யும் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது என்று அடிக்கடி ஆதர்ஷனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தவள், தன் காதலை உணர்த்தவும் தவறவில்லை. வாய் வார்த்தையாகவோ செயலாகவோ இல்லாமல் கண் பார்வையில், அவனுக்காகச் செய்யும் சின்னச் சின்னக் காரியங்களில், அவனது தேவையறிந்து நடப்பது என்று தன்னுள் அவன் எந்தளவுக்கு நிறைந்திருக்கிறான் என்று நேரம் அமையும் போதெல்லாம் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள் தர்ஷினி. ஆதர்ஷனுக்கும் இதெல்லாம் புரிந்தாலும் அவள் கண் பேசும்  மொழியை மொழி பெயர்க்க விரும்பாமல், ஒன்றும் அறியாதவன் போலவே அவன் நடந்து கொள்ள, அதை நினைத்துச் சற்றும் சோர்ந்து போகாமல் தன் முயற்சியையும், காதலையும் சளைக்காமல் தொடர்ந்தாள் தர்ஷினி. அன்று யாரோ அவனை உற்றுப் பார்ப்பது போல் தோன்ற சட்டென நிமிர்ந்து தன் எதிரில் இருந்த தர்ஷினியைப் பார்த்தான். அவளோ லேப்டாப்பில் தன் வேல் விழிகளைத் தவழ விட்டபடி, தன் வெண்டைப் பிஞ்சு விரலால் எதையோ தீவிரமாக டைப் செய்தபடி அம