இடுகைகள்

கண்ட நாள் முதல் Epilogue

  Epilogue சூர்யா வீடே பரபரத்தது... அனைவரும் படு பிசி.  தேவியும் சந்தியாவும் ஓடி ஓடி வேலை பாரக்க, அதை பார்த்தவர்களுக்கு நல்லா நாளும் அதுவுமா இன்னைக்கு மேகத்தை பொத்துக்கிட்டு மழை வருமே என்ற பயம் தொற்றிக் கொண்டது.  இன்று தேனு, அரவிந்த் நிச்சயதார்த்தம். தனம்மா விரும்பி கேட்டதால் சூர்யாவின் வீட்டிலேயே நெருங்கி உறவினர்கள் மட்டும் அழைத்து நடத்த முடிவு செய்தனர். அனைத்து வேலைகளும் நல்லபடி நடக்க. தேவிக்கு மட்டும் சின்ன சந்தேகம். "கொஞ்ச நாளா தன் தோழிகளும் சூர்யா, அரவிந்த்தும் தனக்கு தெரியாமல் ஏதோ ப்ளான் போடுறாங்களோ?" என்று பெரிய சந்தேகம். ஆனால், அது என்ன என்று தெரியவில்லை.. சந்தியாவை கேட்டதற்கு அவளும், "ஆமாக்கா ஏதோ பெருசா ப்ளான் பண்றாங்க. ஆனா, நா கேட்ட பதில் இல்லக்கா" என்று சோகமாக சொல்ல, தேவி என்ன ப்ளான் என்று யோசிக்க ஒன்னும் புரியவில்லை. நிலா தேவி கையில் அழகிய பட்டு புடவையை கொடுக்க, "என்ன நிலா இது.?? இப்ப எனக்கு எதுக்கு புடவை?" என்று கேட்க "அத போய் உன்னோட அருமை அண்ணாக்களை கேளு… நிச்சயத்துக்கு நம்ம நாளு பேருக்கும் ஒரே மாதிரி புடவை தான் கட்டணுமாம். அவங்களே போய்

கண்ட நாள் முதல் final

Final episode ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அனைவர் மனதில் நிம்மதி குடி கொள்ள. இது இப்படியே தொடர வேண்டும் என்று  இறைவனை வேண்டிக் கொண்டனார்.   நிலா கண்களை துடைத்து எழுந்தவள். அனைவரையும் பார்த்து,  இவ்ளோ நாள் இந்த உண்மையை உங்ககிட்ட சொல்லாமல் இருந்ததுக்கு என்ன எல்லாரும் மன்னிச்சிடுங்க" என்று கைகூப்பி கேட்க… தனம்மா அவளருகில் வந்த நிலாவின் தலையை கோதிவிட்டவர், "நிலா... நீ இன்னையோட  பழசெல்லாத்தையும் மறந்துடு. இனி நீ அண்ணா, அண்ணிக்கு மட்டும் இல்ல எனக்கும் உன் மாமாவுக்கும் கூட இனி நீதான் மக. நாங்க நாளு பேரும் தான் உனக்கு அம்மா, அப்பா. சோ இனி நீ அழவே கூடாது ஓகே" என்று அவள் கண்ணீரை துடைக்க நிலா தனத்தை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.  பின் நிலா அரவிந்த் அருகில் வந்தவள். "ஹலோ மரவேதாளம் உன் மேல செம்ம காண்டுல தான் இருந்தேன். ஆனா, தெரிஞ்சோ தெரியமயோ நீ எனக்கு நல்லது தான் செஞ்சு இருக்க. அதனால உன்னை சும்மா விடுறேன். ஆஹான் அப்றம்  சூர்யா கிட்ட  உங்களுக்கு நான்  ஃப்ரண்டா  இருந்த போதுன்னு சொன்னீயாமே உண்மையா?" என்று கேட்க..?? அரவிந்த் "ஆமாம்" என்று தலையாட்ட. "சார

கண்ட நாள் முதல் 31

அத்தியாயம் 31 மனதில் ஏற்பட்ட வேதனை, தூக்கத்தை தூர  விரட்ட. நிலா, சூர்யா இருவருக்கும் அன்றைய இரவு தூக்கமின்றி கழிந்தது.  காலை கண்விழித்ததும் முதல் வேலையாக சூர்யா நிலாவை காண செல்ல. அங்கு அவள் இல்லாத அந்த காலி அறைதான் அவனை வரவேற்றது. வீடு முழுவதும் தேடி நிலா வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தவன். "இவ்ளோ காலையில எங்க போய் இருப்ப?" என்று அவன் மூளை பலவாறு சிந்திக்க. "ஒருவேள நாம அவகிட்ட உண்மையை மறச்சதுக்கு கோவப்பட்டு என்ன விட்டு போய்ட்டாளா?" என்று மூளை யோசித்ததை முழுதாய் யோசிக்க முடியாமல் மனம் பதைபதைக்க.. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அழகாய் பூத்து அருமையாக வசம் வீசிக்கொண்டிருந்த இவர்கள் காதல் மலர் இன்று ஒரே நாளில் வாடி வதங்கி விட்டது. இனி அது மலருமா, மணம் கமழுமா.?? ஆண்டாண்டு காலம் தேடி அரும்பொருளாய் கிடைத்த என் காதலியே! எங்கே சென்றாயடி என்னை விடுத்து. சூரியன் வந்த பின் இரவு விடியும் என்றால், என் நிலவை பார்த்த பின் விடியுமாடி என் விடியல், உன் முகம் பார்க்காத இவ்விடியல் ஒளி இல்லா சூரியனாய் இருள் சேர்க்குதடி என் மனதில் நிலா எங்கே, கோவத்தில் தன்னை விட்டு சென்

கண்ட நாள் முதல் 30

  அத்தியாயம் 30 நிலா போராடி தேவி, தேனுவை ஆஃபீசுக்கு  துறத்தி விடுவதற்குள், அவள் கெண்டை மீன் கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிட்டது. "எனக்கு ஒன்னும் இல்லடி. ஐம் ஆல்ரைட்" என்று ஆயிரம் சமாதானம் சொல்லி அனுப்பியும் அதை நம்பாமல் சூர்யாவிற்கு ஃபோன் பண்ணி. "அண்ணா எங்களுக்கு ஆஃபீஸ்ல இம்பார்டெண் மீட்டிங் இருக்குண்ணா. நிலாவும் எங்களை மீட்டிங் போக சொல்லி விரட்டுறா. சோ ப்ளீஸ் நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க நிலா தனிய இருக்க" என்று சொல்லி, சூர்யா அதற்கு சரி என்ற பிறகே நிம்மதி கொண்டார்.  தோழிகள் சென்றதும் தன் அறைக்கு வந்த நிலா. உடனே தன் தோழி யுக்தாவுக்கு ஃபோன் செய்தாள். (சம்யுக்தா நிலாவின் காலேஜ் மேட். ஐ.பி.எஸ் முடித்து இப்போது  சென்னையில் ஏ.சி.பி யாக இருக்கிறாள்.) நேற்று நடந்ததை சொல்லி அந்த மூன்று பேரின் முழு ஜாதகத்தை எடுக்க சொல்ல. அந்த பக்கம் யுக்தா. யூ டோன்ட் வொரி மை டியர். இன்னும் அரைமணி நேரத்துல அவனுங்க முழு டீடெய்ல்ஸ் உன் கையிலயும், அவனுங்கு உயிர் என் கையிலயும்  இருக்கும்" என்று ஃபோனை வைக்க. இங்கு நிலா அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க. அப்போது தான் காலையில் இருந்து சூர்

கண்ட நாள் முதல் 29

  அத்தியாயம் 29 தேனுவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை? நிலாவையே உற்று பார்த்துக் கொண்டிருக்க.  தனம்மா "என்ன அண்ணா? நிலா தான் சின்னபுள்ளன்னா நீங்களும் அவ கூட சேர்ந்து எங்களை இந்த படுபடுத்திடிங்களோ?" என்று குறைபட்டுக் கொள்ள… "விடு தனம், நிலா தேனுக்காக எங்க கிட்ட வந்து பேசி, தேனு அப்பா கிட்ட சண்ட போட்டு அவரையும் ஒத்துக்க வச்சு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சிருக்க தெரியுமா? அதுக்கு தான் அவ இப்டி ஒரு ப்ளான் பண்ணி எல்லாரையும் சர்ப்ரைஸ் பண்ணலன்னு சொன்னதுக்கு நாங்க ஒத்துக்கிடோம்" என்று சிரிக்க.  "அட கடவுளே" என்று தலையில் அடித்துக் கொண்ட தனம், "சரி சரி ஐயர் வர நேரமாச்சு வாங்க எல்லாரும்" என்று சொல்ல பெருசுகள் அங்கிருந்து சென்றுவிட. சிறுசுகள் மட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தது. நிலா தேனு அருகில் சென்றவள் "எப்புடி??" என்று ஒற்றை புருவத்தை தூக்கி காட்ட. தேனு நிலாவை இருக்கி அணைத்தவள், கதறி அழுதுவிட்டாள். "சாரி நிலா... ரொம்ப சாரி" என்று சாரி என்ற வார்த்தையை கூட ஒழுங்காக சொல்ல முடியாமல் கோவி கோவி அழ.